பேயோட்டுதல்

பேயோட்டுதல் (Exorcism) (சத்தியத்தால் கட்டுண்டிருப்பது என்ற பொருளுடைய கிரேக்க சொல்லான exorkizein என்பதிலிருந்து பிறந்த பிற்கால லத்தீன் சொல்லான exorcismus என்ற சொல்லிலிருந்து உருவானது) என்பது பேய்கள் அல்லது இதர ஆவி போன்றவற்றை ஒரு நபரிடமிருந்தோ அல்லது இடத்திலிருந்தோ விரட்டுவதாகும். இவ்வாறு செய்து அந்த ஆவி போன்ற சக்திகளை பேய் பிடித்ததாக நம்பும் நபரை அல்லது இடத்தை விட்டுச் செல்ல உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர். இந்தப் பழக்கம் மிகப் பழமையானதாகும். இது பல பண்பாடுகளின் நம்பிக்கை முறைமைகளின் ஒரு பகுதியாக உள்ளது.

புனித பிரான்சிஸ் அரேஸ்ஸோவில் பேய்களை பேயோட்டச் செய்தார். அது கியாட்டோவின் சுவர் ஓவியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பண்பாடு

இந்து மதம்

பேயோட்டும் பழக்கம் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும்/அல்லது பழக்கங்கள் முக்கியமாக உலகின் தென் பகுதிகளைச் சேர்ந்த தொன்மையான திராவிடர்களுடன் தொடர்புடையதாகும். நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தில் மாந்த்ரீகம் மற்றும் மருத்துவம் தொடர்பான இரகசியங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.[1][2] இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சடங்குகளில் பல சடங்குகள் பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டுவதற்கானவையே ஆகும். இந்த நம்பிக்கைகள் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் தென் மாநிலங்களான கேரளா போன்றவற்றில் வலுவானதாகவும் நடைமுறையிலும் உள்ளன.[சான்று தேவை]

வேத மற்றும் தந்திர மரபுகள் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்படும் மந்திரம் மற்றும் யக்ஞம் ஆகிய இரண்டு முறைகளே பேயோட்டும் அடிப்படை முறைகளாகும்.

வைணவ மரபுகள் நரசிம்மரின் பெயர்களை உச்சரிப்பது மற்றும் புனித நூல்களை (குறிப்பாக பாகவத புராணம்) உரக்க வாசிப்பது போன்ற முறைகளையும் பயன்படுத்துகின்றன. பத்ம புராணத்தின் கீத மகாத்மியத்திற்கு இணங்க, பகவத் கீதையின் 3 ஆவது, 7 ஆவது மற்றும் 8 ஆவது அத்தியாயங்களை வாசித்து அதன் பலனை மாண்டவர்களுக்கு மனதளவில் அர்ப்பணிப்பது அவர்களை ஆவி நிலையிலிருந்து விடுபட உதவும். கீர்த்தனை எனப்படும் தொடர்ச்சியான மந்திரம் ஓதுதல், புனித நூல்களையும் கடவுளர்களின் (சிவா, விஷ்ணு, பிரம்மா, சக்தி முதலியவர்களை) (குறிப்பாக நரசிம்மர்) படங்களையும் வீட்டில் வைத்திருப்பது, பூஜையின் போது நறுமண பொருட்களை ஏற்றி வைப்பது, புனித நதிகளிலிருந்து கொண்டுவந்த நீரினைத் தெளிப்பது, பூஜையில் பயன்படும் சங்கினை ஊதுவது போன்றவை பலன் தரும் பிற பழக்கங்களாகும்.[சான்று தேவை]

கருட புராணமே ஆவி மற்றும் இறப்பு தொடர்பான தகவலுக்கான முக்கிய புராண ஆதாரமாகும்.[சான்று தேவை]

புத்த மதம்

புத்த மதத்தில், பேயோட்டுதல் என்பது புத்தமதப் பிரிவைச் சார்ந்ததாகும். ஒரு பிரிவு மற்றொன்றிலிருந்து வேறுபடும். சில பிரிவுகள் அதை உருவகமாக அல்லது மறைபொருளாக மற்றும் நேருண்மையாகவும் கூடக் காண்கின்றன. சில திபெத்திய புத்தமதத்தினர் பேயோட்டுதல் என்பது மனதிலிருந்து எதிர்மறையான சிந்தனைகளை வெளியேற்றி மனதை ஒளிநிறைந்ததாக மாற்றும் ஒரு உருவகஞ்சார்ந்த சங்கேதமுறையே தவிர வேறொன்றும் இல்லை எனக் கருதுகின்றனர்.

சில குறிப்பிட்ட புத்தமதத்தினர் தங்களை எதிர்மறையான எண்ணங்கள் மற்றும்/அல்லது எதிர் மறையான சக்திகளின் குணங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள பேயோட்டுவதை விட ஆசீர்வாதங்களிலேயே நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கிறிஸ்துவம்

கிறிஸ்துவ மதப் பழக்கத்தில் பேயோட்டுபவரை பேயோட்டி என அழைப்பர். பெரும்பாலும் தேவாலயத்தின் உறுப்பினரோ, அசாதாரண சக்தி அல்லது திறமைகளை அருளால் பெற்ற ஒரு நபரோ பேயோட்டியாக இருப்பார். பேயோட்டுபவர் பிரார்த்தனைகள் மற்றும் சூத்திரத் தொகுப்புகள், முகபாவங்கள், குறியீடுகள், சின்னங்கள், தாயத்துக்கள் போன்ற மத ரீதியானவற்றைப் பயன்படுத்தலாம். பேயோட்டுபவர் கடவுள், இயேசு போன்றவரை பிரார்த்திப்பார் அல்லது வேறுபட்ட தேவதைகள் மற்றும் உயர் தேவதைகளை பேயோட்டுதலில் ஈடுபட்டு செயல்பட அழைப்பார். பேயோட்டுதல் என்பது முதன்மையாக கத்தோலிக்க தேவாலயத்துடன் தொடர்புடையதாக உள்ளது, இருப்பினும் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்துவர்களும் பேயோட்டும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, பேய் பிடித்தவர்கள் தீயவர்களாகக் கருதப்படுவதில்லை, அவர்களது செயல்களுக்கும் அவர்களே முழுப் பொறுப்பு என்றும் கருதப்படுவதில்லை. ஆகவே, பேயோட்டுவதை ஒரு தண்டனையாகக் கருதுவதை விட ஒரு சிகிச்சையாகவே பேயோட்டிகள் கருதுகின்றனர். வழக்கமாக மைய நீரோட்ட சடங்குகள் இதை கணக்கில் கொள்ளும், அதனால் அதைப் பின்பற்றுபவர்கள் பேய் பிடித்தவர்களிடம் வன்முறையை மேற்கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். பேய் பிடித்தவர்கள் வன்முறையில் ஈடுபட சாத்தியம் இருப்பின் அவர்களைக் கட்டிப்போட மட்டுமே செய்கின்றனர்.[3]

இயேசு

கிறிஸ்துவத்தில், இயேசுவின் சக்தியைப் பயன்படுத்தியோ அல்லது இயேசுவின் பெயரிலோ பேயோட்டுகின்றனர். இது இயேசு தனது சீடர்களை தனது நாமத்தினாலே தீய சக்திகளை வெளியேற்றுமாறு கட்டளையிட்டார் எனும் நம்பிக்கையின்பால் ஆதாரமாக்கப்பட்டுள்ளதுMatthew 10:1,Matthew 10:8, Mark 6:7, Luke 9:1, 10:17, Mark 16:17.கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவில் உள்ள பேயோட்டுதல் பற்றிய கட்டுரை ஒன்றின்படி, இயேசு இந்தச் சக்தி தான் ஒரு மீட்பர் என்பதன் ஒரு அடையாளம் எனவும் தனது சீடர்களுக்கும் இவ்வாறு செய்ய அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.[4].

யூத என்சைக்ளோபீடியாவிலுள்ள இயேசு பற்றிய ஒரு கட்டுரையில், இயேசு "பேய்களை விரட்டுவதில் ஈடுபாடு கொண்டவர்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் அந்த சக்தியை தனது சீடர்களுக்கும் வழங்கினார் என நம்பியது; இருப்பினும், "அவரது சீடர்களால் விரட்ட முடியாத பேய்களை அவர் விரட்டியதன் மூலம் அவரது உயரிய சக்தி உணரப்பட்டது."[5]

இயேசுவின் காலத்தில், விஷமுடைய வேர் சாரங்களைக் கொண்டுள்ள மருந்துகளை வழங்குவதன் மூலம் அல்லது பலியிடுவதன் மூலம் பேயோட்டினர் என புதிய ஏற்பாடு அல்லாத யூத மூலாதாரங்கள் கூறுகின்றன.[6] யூத மதத்தின் எஸ்ஸென் பிரிவே பேயோட்டுதல் செயல்களைச் செய்ததாக அவை குறிப்பிடுகின்றன (டெட் சீ ஸ்க்ரால்ஸ் அட் கும்ரான்).

ரோமன் கத்தோலிக்கம்

புனித பிரான்சிஸ் போர்கியா பேயோட்டுதலை நிகழ்த்துவதைக் காட்டும் பிரான்சிஸ்கோ கோயாவின் ஓவியம்.

ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது. புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் "ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் இறுக்கமாகப் பயன்படுத்துவதைச் சார்ந்தில்லை. அதன் செயற்திறனானது இரு கூறுகளைச் சார்ந்துள்ளது, அவை: தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை"ஆகியவையாகும்[7] இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று எனக் கூறப்படுகிறது. தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும். அதுவும் உள்ளூர் ஆயரின் வெளிப்படையான அனுமதி பெற்ற பின்னரும், மன ரீதியான நோய்கள் ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை விலக்குவதற்கான கவனமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரும் மட்டுமே செய்ய முடியும். கத்தோலிக்க என்சைக்ளோபீடியா (1908) இவ்வாறு கூறுகிறது: "மூடநம்பிக்கைகளின் வரலாறு எவ்வளவுதான் மதத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் அவற்றை மதத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அதே போல் மாயவித்தைகளும் எவ்வளவு தான் தூய தன்மையைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒரு சட்டபூர்வமான மதச் சடங்குடன் குழப்பிக்கொள்ளவும் கூடாது." ரோம சடங்குகளில் பேய் பித்துப்பிடித்திருப்பதற்கான அறிகுறிகளின் பட்டியல்களில் பின்வருவனவும் அடங்கும்: பித்துப்பிடித்தவர் முன்பு அறிந்திராத அந்நிய அல்லது பழமையான மொழிகளைப் பேசுவது; இயற்கையை மீறிய மனிதத் தன்மைகள் மற்றும் சக்தி; பித்துப்பிடித்தவர் எவ்வழியிலும் அறிந்திருக்க இயலாத மறைந்திருக்கும் அல்லது எட்டாத விஷயங்களை அறிந்திருப்பது; கடவுள் சம்பந்தப்பட்டவை எதைக் கண்டாலும் வெறுப்பு காட்டுவது, அதிக தெய்வ நிந்தனை மற்றும் கடவுள் அல்லது அவர் தொடர்பானவற்றை மதியாத செயல்.

கத்தோலிக்க தேவாலயம் பேயோட்டுதல் சடங்கை 1999 ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்தது, இருப்பினும் இலத்தீனின் மரபார்ந்த பேயோட்டும் சடங்கும் ஒரு மாற்றாக அனுமதிக்கப்படுகிறது. பேயோட்டுவது என்பது நம்பமுடியாத அளவிற்கு அபாயகரமான ஆன்மீகச் செயலாகக் கருதப்படுகிறது. பேய்பிடித்தவர்களின் உடலின் கட்டுப்பாடு பேயிடம் இருந்தாலும், அவர்களுக்கு தங்கள் சுய முடிவெடுக்கும் திறனும் இருக்கும் என இந்தச் சடங்கு கருதுகிறது. இந்தச் சடங்கில் பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவற்றையும் ஆஃப் எக்ஸார்சிஸம்ஸ் அண்ட் செர்டைன் சப்ளிகேஷன்ஸ் எனும் ஆவணத்தைப் பயன்படுத்தி கடவுளை அதில் தலையிட வைப்பது போன்ற செயல்களையும் பயன்படுத்துவர். கடந்த காலத்தில் பெனிடிக்டைன் வாடே ரெட்ரோ சடானா போன்ற பிற சூத்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நவீன சகாப்தத்தில், கத்தோலிக்க ஆயர்கள் பேயோட்டுதலை அரிதாகவே அங்கீகரிக்கின்றனர். அவர்களுக்கு இவை மனதளவில் அல்லது உடலளவில் ஏற்பட்டுள்ள நோயாகவே இருக்கக்கூடும் என்ற முன்னனுமானம் இருப்பதால், பேய்பிடித்திருக்கலாம் எனக் கருதப்படும் நபர்களுக்கு மட்டும் இதைச் செய்ய அங்கீகரிக்கின்றனர். இதன் சிக்கலான சிறு புனித மைக்கேலின் பூச்செண்டைப் பயன்படுத்தலாம்.[சான்று தேவை].

ப்ரொடெஸ்ட்டாண்டியம்

ஆங்கிலிகானிஸம்

1974 ஆம் ஆண்டு, 'சர்ச் ஆஃப் இங்கிலாந்து' தேவாலயம் "காக்கும் ஆணையத்தை" (டெலிவெரன்ஸ் மினிஸ்ட்ரி) அமைத்தது. அதன் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்ட திருச்சபையிலும் பேயோட்டுதல் மற்றும் உளவியலில் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு அணி அமைக்கப்பட்டது. அதன் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, தேவாலயம் முன் கொணரப்பட்ட பெரும்பாலான சிக்கல்கள் மரபு ரீதியிலான காரணங்களைக் கொண்டுள்ளன, மேலும் உண்மையாகவே பேயோட்டும் நிகழ்வு ஏற்படுவது மிக அரிதாகும். இருந்தபோதிலும், உளவியல் காரணங்களுக்காக சில நேரங்களில் சிலருக்கு ஆசீர்வாதம் அளிக்கப்படுகிறது.[8]

தி எபிஸ்கோபால் சர்ச்சில், புக் ஆஃப் அக்கேஷனல் சர்வீசஸ் என்னும் நூலில் பேயோட்டுதல்களுக்கான விதிகளை விவாதிக்கிறது. ஆனால் அது எவ்விதமான சடங்கையும் குறிப்பிடுவதில்லை, 'பேயோட்டுபவருக்கான' அலுவலகம் எதையும் நிறுவுவதுமில்லை.[9] மாவட்ட திருச்சபை பேயோட்டிகள் வழக்கமாக தங்களது இதர அனைத்து தேவாலயப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற பிறகே தனது பேயேட்டுதல் தொடர்பான சேவைகளில் ஈடுபடுவர். ஆங்க்ளிகன் பாதிரியார்கள் மாவட்ட திருச்சபை ஆயரிடமிருந்து அனுமதி பெறாமல் பேயோட்டுவதில்லை. வழக்கமாக ஆயரும் அவரது சிறப்பு அணியினரும் (மன நோய் நிபுணர் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட) ஒப்புதல் வழங்காமல் பேயோட்டும் செயல் நடைபெறுவதில்லை.

லுத்தரேனியம்

இயேசு கிறிஸ்து எளிய கட்டளையைக் கொண்டு (மார்க் 1:23–26; 9:14–29; லூக் 11:14–26) பேய்களை ஓட்டினார் என்ற விவிலிய நூலின் கருத்திலிருந்து லுத்தரேனியன் திருச்சபையில் பேயோட்டும் நடைமுறை இருந்தது விளங்குகிறது.[10] திருத்தூதர்கள் இயேசுவின் பெயரிலும் சக்தியாலும் இப்பழக்கத்தைத் தொடர்ந்தனர் (மத்தேயூ 10:1; பகுதிகள் 19:11–16).[10] கிறிஸ்துவத்தின் சில சமயப் பிரிவுகளுக்கு முரணாக, லுத்தரேனியமானது நபர் (இறை) நம்பிக்கையுள்ளவரானாலும் சரி நம்பிக்கையற்றவரானாலும் சரி, இரு சாராருக்குமே பேய் பிடிக்க வாய்ப்புண்டு எனக் கூறுகிறது. அதற்கு பல வாதங்கள் அடிப்படையாக உள்ளன, அவற்றில் ", இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து விடுவித்த ஒரு (இறை) நம்பிக்கையுள்ளவராக (ரோமன்ஸ் 6:18) இருப்பவருக்கு அவரது வாழ்க்கை இன்னும் கூடபாவத்தால் கட்டுப்பட்டுள்ளது, ஆகையால் அவர் வாழ்வும் பேயால் கட்டுப்பட்டுள்ளது."[11]

ப்ரொடஸ்டண்ட் சீர்திருத்தத்திற்குப் பிறகு, மார்ட்டின் லூதர் பேயோட்டலுக்கு பயன்படும் ரோமர்களின் சடங்கினை சுருக்கினார்.[12] 1526 ஆம் ஆண்டு சடங்கானது மேலும் சுருக்கப்பட்டது. பேயோட்டுதலுக்கான லுத்தரேனிய சடங்கின் இந்த வடிவம் அதன் பெரும்பான்மையான வழிபாட்டு புத்தகங்களில் சேர்த்து அமல்படுத்தப்பட்டது.[12][13] லுத்தரன் திருச்சபையின் ஆயர் கையேட்டின் படி,[14] பெரும்பாலும் களிப்பு, காக்கை வலிப்பு நோயின் திடீர்த் தாக்குதல், அக்கறையீனம், மன நலக் கோளாறு, மூர்க்க வெறியுடனான மனநிலை ஆகியவை இயற்கையான விளைவுகளால் ஏற்படுவன, இவற்றை பேய்-பித்துப்பிடித்த நிலையென தவறாகக் கருதக் கூடாது.[14] லுத்தரன் திருச்சபையின் கருத்துப்படி, பேய் பித்துபிடித்தலைக் முதன்மையாகக் காட்டக் கூடிய அறிகுறிகள் மற்றும் பேயோட்ட வேண்டிய அவசியங்கள் ஆகியவற்றில் பின்வருவன அடங்கும்:

  1. இரகசிய விஷயங்களைப் பற்றிய அறிவு - உதாரணமாக, எதிர்காலத்தைப் பற்றிய அறிவு (பிரிவுகள் 16:16), காணாமல் போன மனிதர்கள் அல்லது பொருட்களைக் கண்டறிதல் அல்லது சிக்கலான எவரும் கற்றிராத விஷயங்களை அறிந்திருத்தல் (எ.கா., மருத்துவம்). ஆரூடக்காரர்கள் பெரும்பாலும் ஆவியுருவத்தை உதவிக்கு அழைப்பார்கள் எனவும் அது சில சக்திகளை அளிக்கின்றன எனவும் கூறப்படுகிறது. அவ்விஷயத்தில், தீய ஆவியுரு அவர்களுக்கு உதவுகிறதே தவிர அவர்களை உடலளவில் பிடித்திருப்பதில்லை.[14]
  2. ஒருவர் எப்போதும் அறிந்திராத மொழிகளின் அறிவு: பேயினால் ஒருவரின் நாக்கை கட்டுப்படுத்த முடியும் என்பதால் (லூக் 11:14), முற்கால தேவாலயங்களும் சீர்திருத்த காலத்திலும் சில பேய் பித்துப்பிடித்த நபர்கள், தாம் எப்போதும் கற்றிராத மொழிகளைப் பேச இயலும் எனக் கூறப்படுகிறது.[14]
  3. அவர்களின் பாலினம் மற்றும் உடலளவைக் கருத்திற் கொண்டு முன்னர் கொண்டிருந்த அல்லது அவர்களுக்கு இயற்கையாய் இருக்க வேண்டியதையும் தாண்டிய சக்தி: (மார்க் 5:2-3) பேய் பித்துப்பிடித்தலை கணிப்பதில் அதிக எச்சரிக்கைத் தேவை. அனைத்து சூழ்நிலைகளையும் அறிகுறிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பித்து நோயை பேய்பிடித்துள்ளது எனக் கருதி குழப்பிக்கொள்ளக் கூடாது. மற்றொரு புறம், அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கூட பேய்பிடிக்க வாய்ப்புள்ளது.[14]

அத் தேவாலயம் தனது பட்டியலில் பயங்கரமாகக் கத்துதல் (மார்க் 5:5), கடவுளை நிந்தித்தல் மற்றும் அருகிலுள்ளவர்களை இழித்துரைத்தல், உடலசைவுகளின் சீர்குலைவு (எ.கா. மூர்க்கமான அசைவுகள், முகத்தின் உருக்குலைவு, அடக்கமற்ற நகைப்பு, பற்களை நெரித்தல், துப்புதல், ஆடைகளைக் களைதல், தனது ஆடைகளைக் தானே கிழித்தல் போன்றவற்றை இரண்டாம் நிலை அறிகுறிகளாகக் குறிப்பிடுகிறது. Mk. 9:20; Lk. 8:26f.) மனிதத் தன்மையற்ற களிப்பு (எ.கா. இயற்கையாக உண்ணும் அளவைக் கடந்து உணவு உட்கொள்ளுதல்), உடலைச் சித்திரவதை செய்தல், தங்கள் உடலையும் அருகிலுள்ளவர்களின் உடலையும் தாக்கி காயங்களை ஏற்படுத்தல், அசாதாரண உடலியக்கம் (எ.கா. முதிர்ந்த வயதுடையவர் பேய்-பித்து பிடித்த நிலையில் குதிரையைப் போல வேகமாக ஓட முடிவது) மற்றும் செய்த செயல்களை மறத்தல்.[14] மனிதனை மிருகம் போன்றாத்தாக்கும் பகுத்தறிவு சிதைவு, துக்கப்படுவது, இறப்பை விரைவுபடுத்துவது (மார்க் 9:18 [தற்கொலை முயற்சிகள்]) மற்றும் பேய்கள் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியன இதர அறிகுறிகளில் உள்ளடங்கும்.[14]

இத்தகைய தீர்மானங்களைச் செய்த பிறகு, தேவாலயம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரின் நடத்தைக்கு மருத்துவ ரீதியிலான விளக்கம் உள்ளதா எனத் தீர்மானிக்குமாறு பரிந்துரைக்கிறது.[14] உண்மையாகவே பேய்பிடித்துள்ளது என்பது உணரப்படும்போது அவர் தேவாலயத்தின் பாதிரியாரின் பொறுப்பில் விடப்படுகிறார். அவர் குற்றமற்ற வாழ்க்கையை வாழவும், எதனையும் கீழ்த்தரமாக அருவருக்கத்தக்கவகையில்பணத்திற்காக அல்லாமல் ஆத்மார்த்தமாக செய்வதையும் போதிக்கிறவராவார்.[14] ஆயர் அதன் பிறகு விடாமுயற்சியுடன் பேய்பிடித்தவர் இந்த நிலை வரை எவ்வித வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் என்பதை விசாரித்து சமயச் சட்டத்தின் மூலமாக அவரது பாவங்களை உணர வைக்கிறார்.[14] இந்த கண்டிப்பு அல்லது ஆறுதல் நடந்தேறிய பிறகு, இயல்பான மருத்துவரின் பணிகள் பயன்படுத்தப்படும். அவர் பேய்பிடித்தவரிடமிருந்து தீய திரவங்களை பொருத்தமான மருந்துகளால் அகற்றி அவரைச் சுத்தப்படுத்துகிறார்.[14] ஆயரின் கையேடு இவ்வாறு குறிப்பிடுகிறது:

மெத்தடியம்

மெத்தடிச திருச்சபை பேயோட்டும் சடங்கானது "ஒரு நபரைப் பற்றியுள்ள பேய்பிடித்த மெய்யான தீமைச் சக்தியை விரட்டும் செயலை" உள்ளடக்கியது எனக் கருதுகிறது.[15] மேலும், "கிறிஸ்துவின் ஆட்சி உலகில் தொடர்வதற்கான வழிகளில் ஒன்றாகவே திருச்சபைக்கு பேயோட்டும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது" என மெத்தடிச திருச்சபை போதிக்கிறது.[16] திருச்சபை சமயக் குழு உறுப்பினர் பேயோட்டும் செயல் ஒன்றில் ஈடுபடும் முன்பு முதலில் மாவட்ட கண்காணிப்பாளரை கலந்தாலோசிக்க வேண்டும்.[17] உதவி கோரும் நபருக்கு (நபர்களுக்கு) கிறிஸ்துவின் இருத்தலும் அன்பும் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என மெத்தடிச திருச்சபை நம்பிக்கை வைத்துள்ளது.[18] அத்தோடு, சமய குருமார்களின் "வேதாகமம், பிரார்த்தனை மற்றும் புனிதச் சடங்குகளுக்கான" நடவடிக்கைகள் இத் தனிநபர்களுக்கும் சேர்த்துச் செய்யப்பட வேண்டும்.[19] இவை அனைத்தும் ஒருங்கே பயன்படுத்தப்படும்போது அது விளைவுத்திறன் மிக்கதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[20] எடுத்துக்காட்டாக, ஒரு சூழ்நிலையில், ரோமன் கத்தோலிக்க பெண்மணி அவரது வீட்டில் பேய்கள் நடமாடுவதாக நம்பினார், ஆகையால் அவரது மதகுருமாரை உதவிக்கு கலந்தாலோசித்தார். பெண்மணியின் வீட்டிலிருந்து பேய்களை விரட்ட அவர் வர முடியாததால், அவர் மெத்தடிஸ்ட் ஆயரைத் தொடர்பு கொண்டார், அவர் ஒரு அறையிலிருந்து தீய சக்திகளை விரட்டினார். அவையே வீட்டில் நிலவிய அவலநிலைக்கு காரணம் என நம்பப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, புனித சமய வழிபாட்டு சடங்கு அதே இடத்தில்[20] கொண்டாடப்பட்டது. அதன் பிறகு அவர் வீட்டில் எப்பிரச்சினையும் நீடித்திருக்கவில்லை.[20]

பெந்தகொஸ்தேலியம்

பெந்தகொஸ்தல திருச்சபை, தெய்வீக சக்தி இயக்கம் மற்றும் இதர குறைவான சம்பிரதாயங்களை உடைய கிறிஸ்துவ பிரிவுகள் ஆகியவற்றில் பேயோட்டும் சடங்கு பல வடிவங்களையும் நம்பிக்கை முறையமைப்புக்களையும் கொண்டிருக்கலாம். இவற்றில் மிகப் பொதுவானது மீட்புச் சடங்காகும். மீட்புச் சடங்கு பேயோட்டும் சடங்கிலிருந்து மாறுபட்டது. அதில் பேயானது நபரின் வாழ்வின் முழுமையான கட்டுப்பாட்டைக் கைப்பற்றாமல் அப்போதுதான் அவரைப் பற்றத் தொடங்கியிருக்கும். பேய்க்கு முழுமையான கட்டுப்பாடு வந்துவிட்டது எனில் முழுமையான பேயோட்டுதல் தேவைப்படுகிறது. இருப்பினும், கிறிஸ்துவ நம்பிக்கைகளின்படி, ஒரு "சிறந்த குண நலன் நிரம்பிய கிறிஸ்துவருக்கு" பேய்பிடிக்க வாய்ப்பில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில், பேய் ஒருவரைப் பிடிக்கத் தொடங்குவதற்கு காரணமாக இருப்பவைகளாக விளக்கப்படுவது இறையியல் கோட்பாட்டிலிருந்தான விலகல் அல்லது சமய மாற்றத்திற்கு முன்பான நடவடிக்கைகள் ஆகியவையாகும் (அமானுஷ்ய செயல்களில் ஈடுபடுதல்).[21][22]

ஒரு நபர்க்கு மீட்புத் தேவையா என்பதை மரபார்ந்த வழிமுறையில் தீர்மானிப்பது என்பது தெய்வீக சக்திகளைக் கொண்டுள்ள ஒருவரை முன்னிலையில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. 1 கொரிந்தியன்ஸ் 12 இல் உள்ள வசனத்தின்படி இது பரிசுத்த ஆவியின் பரிசாக, ஒருவர் தீய சக்திகளின் இருப்பை ஏதேனும் ஒரு வழியில் 'உணர' அனுமதிக்கிறது.[23] துவக்க நோய்க்குறி அறிதல் வழிபாட்டு கூட்டத்தினரால் எதிர்க்கப்படுவதில்லை மேலும் ஒரு வழிபாட்டு கூட்டத்திலுள்ள பல நபர்களுக்கு இச் சக்தி இருக்கலாம் என்பதால் அதன் முடிவுகள் வேறுபடலாம்.[24]

அருட் தந்தை கேப்ரியல் அமொர்த், 'தீர்க்கதரிசிகள் மற்றும் தன்னுணர்வாளர்கள்' என்றழைத்து இந்த அருளைக் கொண்டுள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்கள் அவற்றைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவர்; அவர்கட்கு தீயதொரு சக்தியின் இருப்புக் குறித்து அறியும் திறன் உள்ளது. இருப்பினும், "அவர்கள் எப்போதுமே சரியாக இருக்க இயலாது; அவர்களின் 'உணர்வுகளைச்' சரிபார்க்க வேண்டியது அவசியம்" எனக் குறிப்பிடுகிறார். அவரது எடுத்துக்காட்டுகளில், பேய் நுழைவதற்கான காரணமான நிகழ்வுகளைக் கண்டறிய இயலும் அல்லது தனி நபரை சபித்த தீய சக்தியைக் கண்டுணர முடியும். "அவர்கள் எப்போதும் பணிவுடனே இருப்பர்" என்று அவர் குறிப்பிடுகிறார்.[25]

உளவியல்

கிறிஸ்துவ பழக்கமான பேயோட்டுதல் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவரை மன அல்லது உடல் ரீதியிலான பிணி இருக்கும் என்ற முன்கணிப்புடன் கூடிய ஒரு செயல்முறையைக் கொண்டு அணுகுகிறது. மேலும் மன நிலை மற்றும் மருத்துவ வல்லுநர்களைப் பயன்படுத்தி பேயோட்டும் சடங்கினை அங்கீகரிக்கும் முன் உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான காரணங்களை பொருத்தமற்றது எனக் கூறுவதும் உள்ளிடங்கியுள்ளது. அனைத்து ஆபத்தில்லாத காரணங்களையும் களைந்த பின்னர், அச்சிக்கல் உயிருக்குஆபத்தான பேய்பிடித்துள்ள நிலை எனக் கருதி பேயோட்டப்படும்.

கீழை வைதீகம்

எத்தியோப்பிய வைதீக டெவஹெடோ திருச்சபையில், மதகுருமார்கள் தலையிட்டு பேய்களால் அல்லது பூடாவால் (கொள்ளிக்கண்பார்வை) பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களின் சார்பாக பேயோட்டுகின்றனர். பேய் பிடித்தவர்கள் தேவாலயத்திற்கோ அல்லது பிரார்த்தனை கூட்டத்திற்கோ அழைத்து வரப்படுகின்றனர்.[26] நோயுற்ற மனிதர் நவீன மருத்துவ சிகிக்சையில் பலனேதும் பெறாதபோது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பேய்களே காரணம் என முடிவு செய்யப்படுகிறது.[26] வழக்கத்திற்கு மாறான அல்லது குறிப்பிட்ட விபரீதமான செயல்களை தெளிவாய் பொதுவிடத்தில் நிகழ்த்தினால் அது பேய் பிடித்துள்ளதற்கான நோய்க்குறியாகும்.[26] புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டது போன்று பாதிக்கப்பட்டவரிடம் கட்டுக்களை அறுத்தெறிவது போன்ற மனித சக்தியின் எல்லையை மீறிய வலு மற்றும் அதனுடன் புரியாத மொழியில் பேசுவது போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன.[26] எத்தியோப்பிய கிறிஸ்துவ ஒரு நவீன பேயோட்டல் நிகழ்வுகளின் ஆய்வில் பொதுவானதாக உள்ள கூறுகளை அம்சாலு கெலெடா தொடர்புபடுத்துகிறது:

அதில் போற்றுதல் மற்றும் வெற்றிப் பாடல்கள், புனித நூல்களை வாசித்தல், பிரார்த்தனை மற்றும் இயேசுவின் பெயரால் தீய சக்தியை எதிர்ப்பது போன்ற வழிமுறைகள் உள்ளன. பேயோட்டுதல் சடங்கில் ஆவியிடம் உரையாற்றுதல் என்பது மற்றொரு முக்கியப் பகுதியாகும். இது, தீய சக்தியானது பேய் பிடித்தவரின் வாழ்க்கையில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய ஆலோசருக்கு (பேயோட்டுபவர்க்கு) உதவுகிறது. தீய சக்தி குறிப்பிடும் அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகள் நோயிலிருந்து மீட்கப்பட்டப் பிறகு பாதிக்கப்பட்டவரால் உறுதிப்படுத்தப்படுகிறது.[26]

பேயோட்டுதல் எல்லா நேரத்திலும் வெற்றியடைவதில்லை. கெலேடா குறிப்பிடுவது போல மற்றொரு நிகழ்வில் வழக்கமான முறைகள் வெற்றியடையாமல் இருந்திருக்கின்றன, அந்நிகழ்வில் பேய்கள் பின்னாளில் பாதிக்கப்பட்டவரை விட்டு வெளியேறியுள்ளன. எந்த நிகழ்விலும், "அனைத்து விவகாரங்களிலும் தீய சக்திக்கு இயேசுவின் பெயரைத் தவிர மற்றொன்றினால் ஆணையிடப்படுவதில்லை."[26]

குறிப்பிடத்தக்க உதாரணங்கள்

  • சால்வடார் டாலி (இவர் பிரபல ஓவியராவார்) என்பவருக்கு கேப்ரியேலே மரியா பெர்ரார்டி எனும் ஒரு இத்தாலிய சமயத் துறவி பேயோட்டியுள்ளார். 1947 ஆம் ஆண்டு அவர் பிரான்சில் இருந்த போது அவருக்கு பேயோட்டப்பட்டது. டாலி சிலுவையில் கிறிஸ்து இருப்பது போன்ற சிற்பம் ஒன்றைச் செய்து அந்தச் சமயத் துறவிக்கு நன்றிப் பரிசாக அளித்தார்.[27]
  • ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண்மணியான அன்னெலீசி மிஷேல் என்பவரை ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பேய்கள் பிடித்திருந்தன எனக் கூறப்பட்டது. பின்னர் 1975 ஆம் ஆண்டில் அவருக்கு பேயோட்டப்பட்டது. இரு திரைப்படங்களான தி எக்ஸார்சிஸம் ஆஃப் எமிலி ரோஸ் மற்றும் ரெக்யூயம் ஆகியவை ஓரளவு அன்னெலீசியின் கதையை அடிப்படையாகக் கொண்டவை. எக்ஸார்சிஸம் ஆஃப் அன்னெலீசி மிஷெல் எனும் ஆவணப்படமொன்றும் கூட உள்ளது[28](போலிஷ் மொழியில் ஆங்கில உரைத்துணையுடன் கிடைக்கிறது). அதில் பேயோட்டும் செயலின் உண்மையான ஒலி நாடாக்களும் இடம்பெற்றிருந்தன.
  • "ராபி" எனும் புனைபெயர் கொண்ட "ராபி டோ" எனவும் அழைக்கப்படும் ஒரு சிறுவனுக்கு 1949 ஆம் ஆண்டில் பேயோட்டப்பட்டது. அந் நிகழ்வே பின்னாளில் வில்லியம் பீட்டர் ப்ளாடியால் எழுத்தப்பட்ட தி எக்சார்ஸ்சிஸ்ட் என்ற ஒரு திகில் புதினத்திற்கும், திரைப்படத்திற்கும் தூண்டுதலாய் அமைந்தது. ப்ளாடி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் 1950 ஆம் ஆண்டில் ஒரு மாணவராக இருந்த போது அது பற்றி கேள்விப்பட்டார். பேயோட்டுதலானது பகுதியளவில் மாரிலேண்டில் உள்ள காட்டேஜ் சிட்டி மற்றும் மிசௌரியின் உள்ள பெல்-நார்[29] ஆகிய இரு இடங்களிலும் அருட்தந்தை வில்லியம் எஸ். பௌடன், எஸ்.ஜே., அருட்தந்தை ரேமண்ட் பிஷப் எஸ்.ஜே மற்றும் அப்போதைய ஜெசூட் அறிஞர் அருட்தந்தை வால்டர் ஹல்லோரான், எஸ்.ஜே. ஆகியோரால் நிகழத்தப்பட்டது.[30]
  • அன்னை தெரசாவுக்கும் அவரது வாழ்வின் பிற்பகுதியில் பேயோட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது கொல்கொத்தோவின் தலைமைக் குரு ஹென்றி டி'சௌசா வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. தெரசா தூக்கத்தில் அதிகமாக தொல்லையடைவதாகக் கண்டு "தீய சக்தியின் தாக்குதலின் கீழ் அவர் இருக்கலாம்" என தலைமை மத குரு பயந்ததால் தெரசாவிற்கு பேயோட்டுதலை அவர் பரிந்துரைத்தார்.[31]
  • 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்தில் வெலிங்டனின் புறநகரான வாய்நியுவோமாடாவில் ஒரு பெண்மணிக்கு பேயோட்டியதன் விளைவாக அப்பெண்மணி இறந்தார் மேலும் ஒரு பதின் பருவமுடையவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதானது. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு சிறையிலடைக்காத தண்டனை வழங்கப்பட்டது.[32]
  • ஜோஹான் ப்ளூம்ஹார்த் என்பவர் ஜெர்மனியிலுள்ள மோட்லிஜென்னைச் சேர்ந்த கோட்லிபென் டிட்டுஸ் என்பவருக்கு 1842 முதல் 1844 வரையிலான இரண்டாண்டு காலம் பேயோட்டினார். பின்னர் பாதிரியார் ப்ளும்ஹார்த்டின் வட்டாரக் கிளை பாவமன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றால் வளர்ந்து காணப்பட்டது. வெற்றிகரமான பேயோட்டுதலையே அதற்குக் காரணம் கற்பித்தார்.[33][34]

அறிவியல் கண்ணோட்டம்

பேய் பித்துப்பிடித்தல் என்பது DSM-IV அல்லது ICD-10 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்ட உள அளவியலோ அல்லது மருத்துவ அறுதியிடலோ அல்ல. பேய் பிடித்தலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சில நேரங்களில் இசிவு நோய், பித்து, பைத்தியம், டுரோட்டின் நோய்க்கூறு, கால், கை வலிப்பு, மூளைக் கோளாறு அல்லது பிரியும் இயல்புள்ள அடையாளச் சிக்கல் போன்ற மன நோய் தொடர்பான அறிகுறிகளை பேய் பித்துப்பிடித்தலோடு தொடர்புப்படுத்துகின்றனர்.[35][36][37] பிரியும் இயல்புள்ள அடையாளச் சிக்கலில் வேறாகும் நபரை கேள்விக்குட்படுத்துகையில் 29% பேர் தங்களை பேய்களாக அடையாளப்படுத்தினர்.[38] அத்தோடு, ஒற்றைக் கருத்து வெறி வடிவமாக டெமனோமேனியா அல்லது டெமனோபதி உள்ளது அதில் நோயுற்றவர் அவர் அல்லது அவள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பேய்களால் ஆட்பட்டிருப்பதாக நம்புகிறார்.

பேய் பிடித்தலின் அறிகுறிகள் உடையவர்கள் மீது பேயோட்டுதல் பலனளிப்பது போன்று தோன்றுவதற்கு உண்மையான காரணங்களான கற்பிக்கப்படுபவை, சில நேரங்களில் செயலற்ற மருந்து அளிப்பது மற்றும் ஆலோசனைகளின் ஆற்றலுமேயாகும்.[39] சில பித்துப்பிடித்த நபர்கள் உண்மையில் தற்பூசனையாளராவர் அல்லது குறைவாக சுய-உயர்வுக் கொண்டவராவர் மற்றும் 'பேய் பித்துப்பிடித்த நபராக' பிறரது கவனத்தைக் கவர நடிக்கிறார்.[35]

இருந்தபோதிலும் உளவியலாளர் எம். ஸ்காட் பெக் பேயோட்டுதலை ஆராய்ந்தார் (துவக்கத்தில் பேய் பித்துப்பிடித்தலை தவறென்று நிரூபிக்கும் முயற்சியாக) தனக்குத் தானே இருமுறை பேயோட்டுதலை நடத்திக் கொண்டார். அவர் கிறிஸ்துவ கருத்தியலான பேய் பிடித்தல் என்பது மெய்யான விஷயமாகும் என முடித்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையிரனால் பயன்படுத்தப்படும் நோயறியும் அம்சங்களிலிருந்து வேறுபட்ட ஏதோ ஒன்றை சேர்க்கச் செய்தார். பேயோட்டுதலில் அவர் வழிமுறைகள் மற்றும் முன்னேற்றத்தில் வேறுபாடுகளைக் கண்டதாகக் கோரினார். அவரது அனுபவத்திற்குப் பிறகு, தனது ஆய்வை நம்பத்தகுந்ததாக ஆக்க அவர் முயன்றார். எனினும், மன நோய் மருத்துவ சமூகம் 'தீமை' என்பதின் வரையறையை DSMIV யுடன் சேர்க்கத் தவறினார்.[40]

கலாச்சார மேற்குறிப்புகள்

பேயோட்டுதல் பிரபலமானதொரு விஷயமாக கற்பனைக் கதைகளில் குறிப்பாக திகில் கதைகளில் உள்ளது.

  • தி டைபுக் (1914 ஆம் ஆண்டு எஸ். அன்ஸ்கியின் நாடகம்)
  • தி எக்ஸ்சார்ஸ்சிஸ்ட் (1971 புதினம் வில்லியம் பீட்டர் ப்ளாடியால் எழுதப்பட்டது)
  • தி எக்ஸ்சார்ஸ்சிஸ்ட் (1973 ஆம் ஆண்டுத் திரைப்படம்), மற்றும் அதன் பின் மற்றும் முன் நிகழ்வுகள் கத்தோலிக்க பேயோட்டுதல் சடங்கு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வில்லியம் பீட்டர் ப்ளாடியின் நவீனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
  • ரீபொசெசஸ்ட் (1990 ஆம் ஆண்டின் இன்பியல் வகை திரைப்படம் லிண்டா ப்ளேர் மற்றும் லெஸ்லீ நீல்சன்)
  • க்யா டார்க் லினெகே (2003 ஆம் ஆண்டு காணொளி விளையாட்டு)
  • சூப்பர்நேச்சுரல் (2005 ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடர்)
  • கான்ஸ்டாண்டைன் (2005 ஆம் ஆண்டு படம்) DC/Vertigo இன்பியல் புத்தகமான ஹெல்ப்ளேசர் அடிப்படையானது.
  • தி எக்ஸார்சிஸ்ஸம் ஆஃப் எமிலி ரோஸ் (2005 ஆம் ஆண்டு படம்) அன்னலீசே மிஷேல் விவகாரத்தினால் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டது.
  • ரிக்யூயம் (ஹான்ஸ் கிறிஸ்டியன் ஷ்சூமிட்டின் 2006 ஆம் ஆண்டு ஜெர்மன் மொழி படம்) அன்ன்லீசெ மிஷேல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • டி. க்ரே மேன் (2006 ஆம் ஆண்டு ஹோஷினோ கட்சூராவினுடைய சித்திர வகை திரைப்படம்)
  • அ ஹாண்டிங் பல உண்மைக் கதைகளை பேய்கள் மற்றும் எக்சார்ஸிசம்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது
  • ஸ்டிக்மடா (1999 ஆம் ஆண்டு பாட்ரிசியா அர்க்கேட் மற்றும் காப்ரியல் பிர்னே நடித்தது)
  • க்ரட்ஜ் 2 (2006 ஆம் ஆண்டு ஆங்கிலத் திரைப்படம் ஜப்பானிய ஜு-ஆன் தொடரை அடிப்படையாகக் கொண்டது)
  • எல் ஓர்ஃபனேட்டோ (தி ஆர்ப்பனேஜ்) (2008 ஆம் ஆண்டு திரைப்படம் ஜூவான் அண்டோனியோ பயோனாவினால் இயக்கப்பட்டது கிலர்மோ டெல் டோரோவினால் தயாரிக்கப்பட்டது)
  • 1920 (2008ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படம்)
  • ட்ரூ ப்ளட் (2008 ஆம் ஆண்டு HBO தொலைக்காட்சித் தொடர்)
  • அபாரிஷன்ஸ் (2008 ஆம் ஆண்டு TV தொடர்)
  • சவுல் ஒப்ஷெஷன், ஒரு 2007 ஆம் ஆண்டு ஆமி வோல்ஃப் சார்டரின் புதினம், ஒரு யூத பேயோட்டுதல் நிகழ்வைக் கொண்டது
  • பாய்ஸ் டு க்ரை (2007 ஆம் ஆண்டு பேமிலி கய் பகுதி குவாஹோக் நகரம் ஸ்டீவியை பேயோட்டச் செய்து குடும்பத்தை ரோட் தீவை விட்டு வெளியேற்றத் கட்டாயப்படுத்துவது பற்றியது)
  • மிசெவோ டி'அபேர் (2007 ஆம் ஆண்டின் பிரெஞ்சு திரைப்படம்)
  • பாராநார்மல் ஸ்டேட் (2008 A&E TV தொடர்கள்)
  • ஜான் சஃப்ரான் வெர்சஸ் காட் , ஒரு ஆஸ்திரேலிய ஆவணப்படம் பேயோட்டுதலை அதனை தாங்கி நிற்பவரான ஜான் சஃப்ரான் மீது நிகழ்த்தப்படுவதைக் கொண்டுள்ளது.
  • டேஸ் ஆஃப் அவர் லைவ்ஸ் (1995 ஆம் ஆண்டு எப்போதைக்கும் முதலாவதான பேயோட்டுதல் மதிய நேர தொலைத் தொடரில் காட்டப்பட்டது)
  • பென் & டெல்லர்: புல்ஷிட்! (ஷோடைம் தொலைத் தொடர்) பருவம் 5, பகுதி 5 - "எக்ஸ்சார்சிஸம்", ஒளி பரப்பு: ஏப்ரல் 19, 2007. பேயோட்டுதல் பயன்பாடு மற்றும் அறிவியல் நம்பகத்தன்மை மீதான சில ஐயுறவாத கருத்துக்களைக் கொடுக்கிறது.

மேலும் காண்க

  • பேயோட்டுபவர்
  • மீட்பு மத போதகர்
  • இண்டர்நேஷனல் அசோஷியேஷன் ஆஃப் எக்சார்சிஸ்ட்ஸ்
  • கெகாக்
  • பேயோட்டுபவர்களின் பட்டியல்
  • யோருபா மதம்
  • பிறக்காதவர்
  • ஓர்பால் புணர்ச்சி பேயோட்டுதல்

குறிப்புதவிகள்

கூடுதல் வாசிப்பு

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேயோட்டுதல்&oldid=3701499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்