பாக்டியா மாகாணம்

பாக்டியா (Paktia (பஷ்தூ: پکتياPaktyā) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாக்டியா மாகாணமானது பதிமூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணம் கிட்டத்தட்ட 525,000 மக்கட்தொகையைக் கொண்டதாக உள்ளது. இது பெரும்பாலும் கிராமப்புற, பழங்குடி மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாகும். மாகாணத்தில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர், மேலும் சிறிய எண்ணிக்கையில் தாஜிக் மக்களும் காணப்படுகின்றனர். கார்டெஸ் நகரானது மாகாணத் தலைநகராக உள்ளது. மாகாணத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும் மாவட்டமும் சூர்மாத் ஆகும்.

பாக்டியா
Paktia
پکتیا
பாக்டியா மாகாணத்தின் தலைநகரான கர்டெஸில் கோட்டையின் வான்வழி காட்சி
பாக்டியா மாகாணத்தின் தலைநகரான கர்டெஸில் கோட்டையின் வான்வழி காட்சி
ஆப்கானிஸ்தானில் பாக்டியா உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆப்கானிஸ்தானில் பாக்டியா உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள் (Capital): 33°36′N 69°30′E / 33.6°N 69.5°E / 33.6; 69.5
நாடுஆப்கானித்தான்
தலைநகரம்கார்டெஸ்
பெரிய நகரம்சுர்மத்
அரசு
 • ஆளுநர்ஷமிம் கடவாசி
பரப்பளவு
 • மொத்தம்6,432 km2 (2,483 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்5,51,987
 • அடர்த்தி86/km2 (220/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐஎசுஓ 3166 குறியீடுAF-PIA
முதன்மை மொழிகள்பஷ்தூ

வரலாறு

ஒரு காலத்தில் பாக்டியா மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளாக பாஸ்தியா மாகாணம் கோஸ்ட் மாகாணம் ஆகியவை இருந்தன. இந்த மூன்று மாகாணங்கள் சேர்ந்த நிலப்பகுதியானது தற்காலத்தில் லியோ பாக்டியா என அழைக்கப்படுகின்றது. இதன் பொருள் "பெரிய பாக்டியா" என்பதாகும்.ஆப்கானிஸ்தானின் தலைவர்கள் தோன்றிய பகுதியாக பாக்டியா மாகாணம் இருந்ததால் இந்த மாகாணம் 1980களில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இங்கிருந்து வந்த குறிப்பிடத்தக்க தலைவர்கள் சிலர்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஜிபுல்லா, முகம்மது அஸ்லம் வத்தன்ஜர், ஷாநவாஸ் தனாய், சயீத் முகமது குலாப்ஸியோ ஆகியோர் ஆவர்.

அரசியலும், நிர்வாகமும்

ஆப்கானிய தேசிய இராணுவப் படையின். முதலாவது சிறப்புப் படையை பிரிகேட் கட்டளைத் தளபதி ஜெனரல் அப்துல் கரீமின் ஒரு ஆய்வு ( 2013 ஆகத்து)

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் மேஜர் ஜெனரல் சல்மெயே வீசா ஆவார். இவருக்கு முன்பு நஸ்ரதுல்லா அர்சலா. கர்தெஸ் ஆளுநராக இருந்தார். கார்டெஸ் நகரம் மாகாணத்தின் தலைநகராக உள்ளது.

மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி), ஆப்கானிய உள்நாட்டு காவல்துறை (ஏஎல்பி) ஆகியவற்றால் கையாளப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின் எல்லையைப் பகுதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பகுதியான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

பாக்டியா மாகாணத்தில்தான் முதன்முதலில் அமெரிக்கவினால் அமைக்கப்பட்ட மாகாண மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது மாகாணத்தின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பல திட்டங்களுக்கு நிதியளித்தது.

நலவாழ்வு பராமரிப்பு

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 30% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 36% என உயர்ந்துள்ளது.[2]திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 9 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 3 % என குறைந்தது.

கல்வி

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 35% என்று இருந்தது. 2011 இல் இது 27% என குறைந்துள்ளது.

நிலவியல்

பாக்டியா மாகாணத்தில் பனி மூடிய மலைகள்

பாக்டியா மாகாணத்தின் எல்லையாக வடகிழக்கில் பாக்கித்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பழங்குடி பகுதியான குராம் ஏஜென்சி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள், இதன் எல்லைப் பகுதி மாகாணங்களாக லோகர் மாகாணம், கஜினி மாகாணம், பாக்டிகா மாகாணம் மற்றும் கோஸ்ட் மாகாணம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

பாக்டியாவானது ஒரு மலைப்பாங்கான மாகாணமாகும். மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் இதன் மத்திய பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர்.

ஜஜி (ஜாசி) மற்றும் ஜானி கெல் மாவட்டங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்டதாகவும், சிறிய பள்ளத்தாக்குப் பகுதிகளில் குறைந்த அளவு மக்கள் வாழும் பகுதியாகவும் உள்ளன.

2005ஆம் ஆண்டு வரை, அஸ்ரா மாவட்டம் பாக்டியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இது வடக்கில் லோகர் மாகாணத்தை ஒட்டி உள்ளது. இது மிகுதியான சாலை வசதியால் மக்களை இணைக்கும் விதத்தில் உள்ளது.

மக்கள்வகைப்பாடு

பாக்டியா மாகாண மக்கள்
ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
பாக்டியா மாகாண மாவட்டங்கள்

2013ஆண்டின் படி, மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 525,000 ஆகும்.[1] இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்களாவர். இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வாரின், கணக்கெடுப்பின்படி "இந்த மாகாணத்தில் பஷ்டூன் மக்கள் பெரும்பான்மையினராகவும், சிறுபான்மையானராக தாஜிக் மக்களைக் கொண்டுள்ளது.[3] கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் கூற்றின்படி, மாகாணத்தின் இன குழுக்கள் பின்வருமாறு: 91% பஷ்டூன் மற்றும் 9% தாஜிக் ஆவர்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாக்டியா_மாகாணம்&oldid=3562521" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்