பாகர் தத்

பகார் தத் (Bahar Dutt)(பிறப்பு 20 சூன் 1975)[3] ஓர் இந்தியத் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மற்றும் சிஎன்என் - ஐபிஎன் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.[4]

பாகர் தத்
பிறப்புc. 1975
புது தில்லி, தில்லி, இந்தியா[1]
கல்விதில்லி பல்கலைக்கழகம்; கெண்ட் பல்கலைக்கழகம்
பணிதொலைக்காட்சி செய்தியாளர், சுற்றுச்சூழல் தொகுப்பாளர்
பணியகம்சி.என்.என் - ஐ. பி. என். லைவ்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் தகவலியல்
வாழ்க்கைத்
துணை
விஜய் பேடி[2]
பிள்ளைகள்1
உறவினர்கள்பர்கா தத் (சகோதரி)
வலைத்தளம்
Beasts in My Belfry

இளமை

பாகர் தத், எஸ்பி தத் மற்றும் பிரபா தத்தின் மகள் ஆவார். பிரபா தத் இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். இவர் பகாரின் வாழ்க்கைப் பாதையில் செல்வாக்கு செலுத்தினார். பகார் தத், பிரபல பத்திரிகையாளர் பர்கா தத்தின் சகோதரி ஆவார்.[5]

இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து அறிக்கைக்காகப் பசுமை ஆசுகார் விருது பெற்ற ஒரே இந்தியச் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் பகார் ஆவார்.[6][7]

தத் பயிற்சியின் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான அனுபவங்களைப் பெற்றார்.[4] இவர் முதலில் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் பட்டம் பெற்றார். பின்னர் கென்ட் பல்கலைக்கழகத்தில் தத், தூரெல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி நிலையத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான கல்வியினைத் தொடர்ந்து பல்கலைக்கழக முதுநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார்.[8]

தொழில்

பத்திரிகையாளராகப் பணிக்குத் திரும்புவதற்கு முன்பு, தத் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் பணியாற்றினார்.[9] இவர் வட இந்தியாவில் அரியானா மற்றும் இராசத்தான் முழுவதும் பகோலியாக்கள் எனப்படும் பாம்பு மந்திரிப்பவர்களுடன் ஏழு ஆண்டுகள் கழித்தார். 1972ஆம் ஆண்டின் இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் வனவிலங்குகளை பொது உடைமையாக்கியது. இதன் மூலம் பாம்புகளைப் பிடிப்பது மற்றும் பயிற்சி அளிப்பது போன்ற பாம்பு மந்திரவாதிகளின் நடைமுறையைச் சட்டவிரோதமாக்கியது.[10] பாம்புகளைப் பற்றிய இவர்களின் அறிவையும் இசைத் திறன்களையும் பொது நிகழ்ச்சிகளிலும் பாம்புகளைப் பயன்படுத்தாமல் கல்வியிலும் இணைக்க தத் இவர்களுடன் பணியாற்றினார்.[9][10] இந்த திட்டத்தில் இவர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றை இணைத்தார்.[8] பாம்பு மந்திரிப்பவர்களுடன் இவர் பணியாற்றியது குறித்த தகவல்கள் ஊடகங்களில் இடம்பெற்றது.[11]

2005-இல் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் சுற்றுச்சூழல் பத்திரிகையாளராக பணியமர்த்தப்பட்டார். சி.என். என்.-ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் ஆசிரியராக இரகசிய விசாரணைகளைச் செய்து, செய்தி அறிக்கைகள் வெளியிட்டார். இவரது அறிக்கை கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈரநிலங்கள் மற்றும் காடுகளில் நடைபெற்று வந்தப் பல சட்டவிரோத திட்டங்களை நிறுத்த வழிவகுத்தது.

குறிப்பிடத்தக்க படைப்புகள்

2006-இல், பாகர் லாஸ்ட் டான்சு ஆப் தி சாருசு இயக்கினார். இது உலகின் மூன்றில் ஒரு பங்கு சாரசு கொக்கின் வாழ்விடமாக இருக்கும் கிழக்கு இந்தியாவில் உள்ள ஈரநிலங்களின் வடிகால் பற்றிய விருது பெற்ற புலனாய்வு செய்தி. வடிகால் திட்டம் ஒரு வானூர்தி நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட திட்டமாக இருந்தது.[12][13][14]

பாகர் தனது சமீபத்திய புத்தகமான பசுமைப் போர்களை (கிரீன் வார்சு) வெளியிட்டார். நவீனமயமாக்கும் பொருளாதாரத்திற்கும் கிரகத்தைக் காப்பாற்றுவதற்கும் இடையிலான பதற்றத்தை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதைப் பாதுகாவலராக தத்தின் அனுபவத்தை இப்புத்தகம் வரைகிறது.[15]

விருதுகள்

  • 2006 ராம்நாத் கோயங்கா விருது, லாஸ்ட் டான்சு ஆப் தி சாருசு[12]
  • 2006. வைல்ட்ஸ்கிரீன் விருது (பன்னாட்டு விருது). வைல்ட்ஸ்கிரீன் விழா செய்திப் பிரிவில் லாஸ்ட் டான்சு ஆப் தி சாருசு, "ரெட் பாண்டா" விருது.[13][14]
  • 2007இளம் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் விருது[16]
  • 2009 சரணாலயம்-ஆர்.பி.எசு. வனவிலங்கு விருதுகள். சுற்றுச்சூழல் பத்திரிகையின் தரத்தினை உயர்த்தியதற்காக விங்சு விருது.[17]
  • 2009 சமசுகிருத விருது[18]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகர்_தத்&oldid=3887504" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்