2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் பதக்க நிலவரம்

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியல், இப்போட்டியில் பங்குபற்றிய தேசிய இணை ஒலிம்பிக் குழுக்களை அவை பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப் படுத்துகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, உடல் வலுக் குறைந்தோருக்காக நடாத்தப்படும் பராலிம்பிக் போட்டியின் பதினான்காவது போட்டி இதுவாகும். இப்போட்டிகள் ஆகத்து 29, 2012இலிருந்து செப்டெம்பர் 9, 2012 வரை லண்டன் நகரில் நடைபெற்றது.[1]

164 நாடுகளைச் சேர்ந்த 4280 போட்டியாளர்கள், 20 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற 503 போட்டிகளில் பங்கு பற்றின. பராலிம்பிக் போட்டியொன்றில் அதிக நாடுகள் மற்றும் அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டி இதுவேயாகும்.[2] இப்போட்டிக்கான பதக்கங்கள் லின் செங் என்பவரால் வடிவமைக்கப் பட்டது. இப் பதக்கங்களில், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேக்கப் பெண் கடவுளான நைக்கின் சிறகுகள் இவற்றில் காட்டப்பட்டுள்ளன. பதக்கங்கள் ரோயல் மின்ட் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டன.[3]

57 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது பெற்றுள்ளன. மேலும் 75 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது பெற்றுள்ளன.[4] சிலி,[5] எதியோப்பியா[6] பிஜி,[7] இலங்கை,[8] மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியன தமது முதல் பராலிம்பிக் பதக்கங்களை வென்றன.[9][10] மேலும் பிஜி ஒலிம்பிக் போட்டிகளிலேயே தமது முதல் பதக்கத்தைப் பெற்றது.[11] சீனா 95 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 231 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. போட்டி நடத்தும் நாடான பிரித்தானியா 34 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 120 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[4] மிகவும் வெற்றிகரமான வீரராக ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜக்குலின் பிரனீ காணப்படுகிறார். இவர் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். நீச்சல் தவிர்ந்த ஏனைய போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான வீரர்களாக ரேமண்ட் மார்ட்டின் (ஐக்கிய அமெரிக்கா), சாரா ஸ்டோரி (பிரித்தானியா) மற்றும் டேவிட் வய்ர் (பிரித்தானியா) ஆகியோர் உள்ளனர். இவர்கள் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.[12]

பதக்கப் பட்டியல்

   *   போட்டி நடத்தும் நாடு (பிரித்தானியா)

பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியல், வென்ற தங்க வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது
நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா957165231
2  உருசியா363828102
3  ஐக்கிய இராச்சியம்*344343120
4  உக்ரைன்32242884
5  ஆத்திரேலியா32233085
6  ஐக்கிய அமெரிக்கா31293898
7  பிரேசில்2114843
8  செருமனி18262266
9  போலந்து1413936
10  நெதர்லாந்து10101939
11  ஈரான்107724
12  தென் கொரியா99927
13  இத்தாலி981128
14  தூனிசியா95519
15  கியூபா95317
16  பிரான்சு8191845
17  எசுப்பானியா8181642
18  தென்னாப்பிரிக்கா812929
19  அயர்லாந்து83516
20  கனடா715931
21  நியூசிலாந்து67417
22  நைஜீரியா65213
23  மெக்சிக்கோ641121
24  சப்பான்55616
25  பெலருஸ்52310
26  அல்ஜீரியா46919
27  அசர்பைஜான்45312
28  எகிப்து44715
29  சுவீடன்44412
30  ஆஸ்திரியா43613
31  தாய்லாந்து4228
32  பின்லாந்து4116
33  சுவிட்சர்லாந்து36413
34  ஆங்காங்33612
35  நோர்வே3238
36  பெல்ஜியம்3137
37  மொரோக்கோ3036
38  அங்கேரி26614
39  செர்பியா2305
40  கென்யா2226
41  சிலவாக்கியா2136
42  செக் குடியரசு16411
43  துருக்கி15410
44  கிரேக்க நாடு13812
45  இசுரேல்1258
46  ஐக்கிய அரபு அமீரகம்1113
47  லாத்வியா1102
47  நமீபியா1102
47  உருமேனியா1102
50  டென்மார்க்1045
51  அங்கோலா1012
52  பொசுனியா எர்செகோவினா1001
52  சிலி1001
52  பிஜி1001
52  ஐசுலாந்து1001
52  ஜமேக்கா1001
52  மாக்கடோனியக் குடியரசு1001
58  குரோவாசியா0235
59  பல்கேரியா0213
59  ஈராக்0213
61  கொலம்பியா0203
62  அர்கெந்தீனா0145
63  போர்த்துகல்0123
63  சீன தைப்பே0123
65  மலேசியா0112
65  சிங்கப்பூர்0112
67  சைப்பிரசு0101
67  எதியோப்பியா0101
67  இந்தியா0101
67  சவூதி அரேபியா0101
67  சுலோவீனியா0101
67  உஸ்பெகிஸ்தான்0101
73  வெனிசுவேலா0022
74  இந்தோனேசியா0011
74  இலங்கை0011
Total (75 NPCs)5035035161522

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்