2.0 (திரைப்படம்)

ஷங்கர் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான ஒரு இந்திய அறிபுனை திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்சன்சு தயாரித்தது.[3][4] 2015 டிசம்பர் 16 அன்று சென்னையில் துவக்க விழாவுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.[5][6] இத்திரைப்படமானது 29 நவம்பர், 2018 அன்று வெளியானது.

2.0
இயக்கம்சங்கர்
தயாரிப்புசுபாஸ்கரன்
கதைசங்கர்
ஜெயமோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புரஜினிகாந்த்
அக்சய் குமார்
எமி ஜாக்சன்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்லைக்கா புரொடக்சன்சு
வெளியீடு29 நவம்பர் 2018 (2018-11-29)
நாடு இந்தியா
மொழி(தமிழ்)
ஆக்கச்செலவு540 கோடி
ஐஅ$75 million[1]
மொத்த வருவாய்750 கோடி[2]

நடிகர்கள்

தயாரிப்பு

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு சொந்தமாக சென்னையில் இயங்கிவரும் லைக்கா புரொடக்சன்சு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படத்தினை இந்நிறுவனமே தயாரித்திருந்தது.

ஒளிப்பதிவு

இத்திரைப்படத்தின் முந்தைய பகுதியான எந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே போதும் எனவும், பிறகு தேவைப்பட்டால் மேலும் பாடல்களைப்பற்றி யோசிக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்துள்ளார்.[7] இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பினை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார். அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் 66 வது ஆண்டு கோல்டன் ரீல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான விருதுக்காக 2.0 பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[8]

படப்பிடிப்பு

பிப்ரவரி 29, 2016 அன்று சென்னையில் ஒரு பெரிய ஆயுத வண்டி வருவது போன்ற காட்சியை படமாக்கினர்.

பாடல்கள்

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திரைப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம்பெறும்.[9] இத்திரைப்படத்தின் பாடல்கள் 2017 அக்டோபர் 27 அன்று துபாய் நகரின் பூர்ஜ் அல் அராப்பில் வெளியானது.[10][11]

தமிழ்ப் பாடல்கள்

#பாடல்பாடகர் (கள்)நீளம்
1. "எந்திர லோகத்து சுந்தரியே"  சிட் சிறீராம், சாசா திருப்பதி 5:28
2. "ராசாளி"  பிளாஷ், அர்ஜுன் சந்தி, சிட் சிறீராம் 4:09
மொத்த நீளம்:
9:38

தெலுங்குப் பாடல்கள்

#பாடல்பாடகர் (கள்)நீளம்
1. "எந்திர லோகத்து சுந்தரியே"  சிட் சிறீராம், சாசா திருப்பதி 5:28
2. "ராசாளி"  பிளாஷ், அர்ஜுன் சந்தி, சிட் சிறீராம் 4:09
மொத்த நீளம்:
9:38

இந்திப் பாடல்கள்

#பாடல்பாடகர் (கள்)நீளம்
1. "மெக்கானிக்கல் சுந்தரியே"  அர்மான் மாலிக், சாசா திருப்பதி 5:28
2. "ராகசாசி"  பிளாஷ், கைலாசு கேர், நகாஷ் ஆசிசு 4:09
மொத்த நீளம்:
9:38

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=2.0_(திரைப்படம்)&oldid=3709405" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்