1971 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல்

இந்தியக் குடியரசின் ஐந்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஐந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 352 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்திரா காந்தி மூன்றாம் முறையாக பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1971

← 1967மார்ச் 1–10, 1971 [1]1977 →

மக்களவைக்கான 518 இடங்கள்
பதிவு செய்தோர்274,189,132
வாக்களித்தோர்55.27% 5.77pp
 First partySecond party
 
தலைவர்இந்திரா காந்திபி. சுந்தரய்யா
கட்சிஇந்திரா காங்கிரசுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ரே பரேலி-
வென்ற
தொகுதிகள்
35225
மாற்றம்73 6
விழுக்காடு43.685.12%

 Third partyFourth party
 
தலைவர்வாஜ்பாய்காமராஜர்
கட்சிபாரதீய ஜனசங்கம்காங்கிரசு (ஓ)
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
குவாலியர்நாகர்கோவில்
வென்ற
தொகுதிகள்
2216
மாற்றம் 13புதிய கட்சி
விழுக்காடு7.35%10.43%


முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

பின்புலம்

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரசு இரண்டாக பிளவுபட்டது. பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் “நிறுவன காங்கிரசு” அல்லது ஸ்தாபனக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியும் உருவாகின. மக்களவையில் பெரும்பான்மையை இழந்த இந்திரா திமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவுடன் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தார். பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கு முன்னராகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். கரீபீ ஹடாவோ (வறுமையை ஒழி) என்ற புதிய கோஷத்துடன் அவர் செய்த பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்திராவின் காங்கிரசு நிறுவன காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை எளிதில் தோற்கடித்து 352 தொகுதிகளில் வென்றது.

முடிவுகள்

மொத்தம் 55.27% வாக்குகள் பதிவாகின

கூட்டணிகட்சிவென்ற இடங்கள்மாற்றம்வாக்கு %
காங்கிரசு கூட்டணி
இடங்கள்: 375
மாற்றம்:
113
வாக்கு %: 47.52
இந்திரா காங்கிரசு352 9343.68
திமுக233.84
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இடங்கள்: 51 மாற்றம்: 65
வாக்கு %: 24.34
காங்கிரசு (ஓ)16 1710.43
பாரதீய ஜனசங்கம்22 227.37
சுதந்திராக் கட்சி8 153.07
சம்யுக்தா சோசலிசக் கட்சி3 102.43
பிரஜா சோசலிசக் கட்சி2 171.04
மற்றவர்கள்சிபிஎம்25 65.13
சிபிஐ234.73
மற்றவர்கள்67 1218.3

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்