1வது வட மாகாண சபை

1வது வட மாகாண சபை (1st Northern Provincial Council) என்பது 2013 செப்தெம்பர் 21 இல் நடைபெற்ற 2013 மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மாகாண சபையின் அமர்வுகளைப் பற்றியது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாகாணசபை ஒன்றின் ஆட்சிக் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டு காலம் ஆகும். இச்சபையின் முதலாவது அமர்வு 2013 அக்டோபர் 25 ஆம் நாள் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள புதிய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது.[1][2] சி. வி. கே. சிவஞானம், அன்ரன் ஜெயநாதன் ஆகியோர் சபைத் தலைவராகவும், பிரதித் தலைவராகவும் போட்டியின்றி முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3][4][5]

1வது வட மாகாண சபை
தலைவர்கள்
தலைவர்
(தவிசாளர்)
சி. வி. கே. சிவஞானம்,
ததேகூ (2013-)
பிரதித் தலைவர்அந்தனி ஜெயநாதன்,
ததேகூ (2013-)
முதலமைச்சர்க. வி. விக்னேஸ்வரன்,
ததேகூ (2013-)
எதிர்க்கட்சித் தலைவர்சின்னத்துரை தவராசா,
ஐமசுகூ (2014-)
முக்கிய நாட்கள்
நியமனப் பத்திரம் தாக்கல்25 யூலை 2013 - 1 ஆகத்து 2013
தேர்தல்21 செப்தெம்பர் 2013
முதல் கூட்டம்25 அக்டோபர் 2013
இடம்கைதடி, யாழ்ப்பாணம்
அமர்வுகள்
1: 25 அக்டோபர், 2013 –
np.gov.lk

தேர்தல்

1வது வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்தெம்பர் 2013 இல் நடைபெற்றது. பொதுவாக இலங்கைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணம், வன்னி என இரண்டு தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை முதற்தடவையாக வட மாகாணத்தின் ஐந்து நிருவாக மாவட்டங்களும் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. தேசிய மட்டத்தில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இலங்கைத் தமிழர்களை முக்கியமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைப்பில் தேர்தலில் நின்றது. மொத்தமுள்ள 36 இடங்களில் ததேகூ 28 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[6] ஐமசுகூ 7 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றின.[6] ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன.

முடிவுகள்

கூட்டணிவாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு353,59578.48%30
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[7][8]82,83818.38%7
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[8]6,7611.50%1
 ஐக்கிய தேசியக் கட்சி3,0620.68%0
 சுயேட்சைக் குழுக்கள்1,9040.42%0
 சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு8260.18%0
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்3000.07%0
இலங்கை மக்கள் கட்சி2920.06%0
 மக்கள் விடுதலை முன்னணி2880.06%0
ஐக்கிய சோசலிசக் கட்சி1880.04%0
சனநாயகக் கட்சி1700.04%0
சோசலிச சமத்துவக் கட்சி1010.02%0
ஜன செத்த பெரமுன900.02%0
நமது தேசிய முன்னணி870.02%0
இலங்கை தொழிற் கட்சி320.01%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை150.00%0
தேசிய ஐக்கிய அமைப்பு140.00%0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி80.00%0
முசுலிம் விடுதலை முன்னணி30.00%0
மொத்தம்450,574100.00%38
நிராகரிக்கப்பட்டவை35,239
மொத்த வாக்குகள்485,813
பதிவு செய்த வாக்காளர்கள்719,477
வாக்குவீதம்67.52%

அரசு/அமைச்சர்கள்

1வது வட மாகாண சபையின் அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு:

அமைச்சரவை

வட மாகாண சபையின் அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட ஆகக்கூடியது ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். வட மாகாண சபைக்கு 2013 இல் நடைபெற்ற தேர்தல் வரையில் அமைச்சரவை இருக்கவில்லை.

முதலமைச்சர்

முதலாவது வட மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் 2013 செப்தெம்பர் 23 இல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.[9] விக்னேசுவரன் 2013 அக்டோபர் 1 இல் ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.[10][11][12] இவர் பின்னர் 2013 அக்டோபர் 7 இல் முதலமைச்சராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.[13][14][15]

அமைச்சர்கள்

1வது அமைச்சரவைக்கு 2013 அக்டோபர் 10 ஆம் நாள் பின்வரும் நான்கு அமைச்சர்கள் முதலமைச்சரினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்டோபர் 11 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[16][17]

இவற்றை விட வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும்.[18]

உறுப்பினர்கள்

யாழ்ப்பாண மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
சி. வி. விக்னேஸ்வரன்யாழ்1,32,2552013-10-07-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூமுதலமைச்சர்
அனந்தி சசிதரன்யாழ்87,8702013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
தர்மலிங்கம் சித்தார்த்தன்யாழ்39,7152013-09-212015-08-17புளொட்ததேகூபுளொட்ததேகூ2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[19]
இம்மானுவேல் ஆனல்ட்யாழ்26,8882013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
சி. வி. கே. சிவஞானம்யாழ்26,7472013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூஅவைத் தலைவர் (தவிசாளர்)
பாலச்சந்திரன் கஜதீபன்யாழ்23,6692013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
எம். கே. சிவாஜிலிங்கம்யாழ்22,6602013-09-21-ரெலோததேகூரெலோததேகூ
பொ. ஐங்கரநேசன்யாழ்22,2682013-10-11-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூவேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்
சந்திரலிங்கம் சுகிர்தன்யாழ்20,5412013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
கேசவன் சயந்தன்யாழ்20,1792013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
விந்தன் கனகரத்தினம்யாழ்16,4632013-09-21-டெலோததேகூடெலோததேகூ
அரியகுட்டி பரஞ்சோதியாழ்16,3592013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
கந்தையா சர்வேஸ்வரன்யாழ்14,7612013-09-21-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூ
வேலுப்பிள்ளை சிவயோகன்யாழ்13,4792013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
கந்தசாமி கமலேந்திரன்யாழ்13,6322013-10-17மார்ச்சு 2014ஈபிடிபிஐமசுகூஈபிடிபிஐமசுகூமார்ச்சு 2014 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[20]
அங்கஜன் இராமநாதன்யாழ்10,0312013-10-172015-08-17சுதந்திரக் கட்சிஐமசுகூசுதந்திரக் கட்சிஐமசுகூ2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[19]
சின்னத்துரை தவராஜாயாழ்-2014-04-23-ஈபிடிபிஐமசுகூஈபிடிபிஐமசுகூகந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டதை அடுத்து இவர் தெரிவானார்.[21]
கணபதிப்பிள்ளை தர்மலிங்கம்யாழ்2015-09-18--ததேகூ-ததேகூத. சித்தார்த்தன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார்.[22]
சிறீ ரங்கேஸ்வரன்யாழ்2015-08-25-சுதந்திரக் கட்சிஐமசுகூசுதந்திரக் கட்சிஐமசுகூஅங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
பசுபதி அரியரத்தினம்கிளிநொச்சி27,2642013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
தம்பிராஜா குருகுலராஜாகிளிநொச்சி26,4272013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூகல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளைகிளிநொச்சி26,1322013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
வை. தவநாதன்கிளிநொச்சி3,7532013-10-17-ஈபிடிபிஐமசுகூஈபிடிபிஐமசுகூ

முல்லைத்தீவு மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
மரியாம்பிள்ளை அந்தனி ஜெயநாதன்முல்லைத்தீவு9,3092013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூஅவைப் பிரதித் தலைவர்
சிவப்பிரகாசம் சிவமோகன்முல்லைத்தீவு9,2962013-10-142015-08-17ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூ2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[19]
துரைராஜா ரவிகரன்முல்லைத்தீவு8,8682013-10-14-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூ
கனகசுந்தரசுவாமி வீரவாகுமுல்லைத்தீவு8,7022013-10-112015-02-17தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ2015 பெப்ரவரி 17 இல் காலமானார்.[23]
அகமது லெப்பை யாசின் ஜவாகிர்முல்லைத்தீவு1,7262013-10-17-முஸ்லிம் காங்கிரசுஐமசுகூமுஸ்லிம் காங்கிரசுஐமசுகூ
கந்தையா சிவனேசன்முல்லைத்தீவு-2015-05-01-புளொட்ததேகூபுளொட்ததேகூகனகசுந்தரசுவாமி வீரவாகு காலமானதை அடுத்து நியமிக்கப்பட்டார்.[24]
வல்லிபுரம் கமலேஸ்வரன்முல்லைத்தீவு2015-08-25--ததேகூ-ததேகூசி. சிவமோகன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார்.[22]

வவுனியா மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
பத்மநாதன் சத்தியலிங்கம்வவுனியா19,6562013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூசுகாதார அமைச்சர்
க. தா. லிங்கநாதன்வவுனியா11,9012013-09-21-புளொட்ததேகூபுளொட்ததேகூ
ம. தியாகராசாவவுனியா11,6812013-10-16-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூ
இராமநாதர் இந்திரராசாவவுனியா11,5352013-10-14-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூ
தர்மபால செனிவிரத்தினாவவுனியா5,1482013-10-17-சுதந்திரக் கட்சிஐமசுகூசுதந்திரக் கட்சிஐமசுகூ
ஏ. ஜெயதிலக்கவவுனியா4,8062013-10-17-சுதந்திரக் கட்சிஐமசுகூசுதந்திரக் கட்சிஐமசுகூ

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விபரங்கள்:[25]

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
பிரிமுஸ் சிராய்வாமன்னார்12,9272013-10-11-தமிழரசுக் கட்சிததேகூதமிழரசுக் கட்சிததேகூ
டெனிசுவரன் பாலசுப்பிரமணியம்மன்னார்12,8272013-11-10-ரெலோததேகூரெலோததேகூமீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்
ஜி. குணசீலன்மன்னார்12,2602013-10-14-ரெலோததேகூரெலோததேகூ
றிப்கான் பதியுதீன்மன்னார்11,1302013-10-17-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஐமசுகூஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஐமசுகூ
கபிர் முகமது ரயீஸ்மன்னார்3,1652013-10-17-முஸ்லிம் காங்கிரஸ்முஸ்லிம் காங்கிரஸ்முஸ்லிம் காங்கிரஸ்முஸ்லிம் காங்கிரஸ்

மேலதிக உறுப்பினர்கள்

தேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்ளில் ஒன்று ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.[26]

பெயர்
தேர்தல்
மாவட்டம்

விருப்பு
வாக்குகள்

பதவியேற்ற
நாள்

வரை
தெரிவு
செய்த
கட்சி

தெரிவு
செய்த
கூட்டணி

தற்போதைய
கட்சி

தற்போதைய
கூட்டணி

குறிப்புகள்
அயூப் அஸ்மின்மன்னார்1,0092013-10-11-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்புததேகூநல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்புததேகூ
மேரி கமலா குணசீலன்முல்லைத்தீவு2013-10-112015-04-07தமிழர் விடுதலைக் கூட்டணிததேகூதமிழர் விடுதலைக் கூட்டணிததேகூஒப்பந்தப்படி ஓராண்டிற்குப் பின்னர் பதவி விலகினார்.
எம். பி. நடராஜ்2015-04-07-ஈபிஆர்எல்எஃப்ததேகூஈபிஆர்எல்எஃப்ததேகூமேரி குணசீலனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1வது_வட_மாகாண_சபை&oldid=3926835" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்