ஹன்னா மாண்டனா

ஹன்னா மாண்டனா என்பது எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட[1] அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று டிஸ்னி சேனலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொடரானது, பகலில் மைலே ஸ்டுவர்ட் (மைலே சைரஸ் நடித்தார்) என்ற பெயரைக் கொண்ட சராசரியான பதின்பருவ பள்ளி மாணவியாகவும் இரவில் ஹன்னா மாண்டனா என்ற பெயரைக் கொண்ட பிரபல பாப் பாடகியாகவும் இரட்டை வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட தொடர் ஆகும். இதில் அவளது உண்மையான அடையாளம் அவளது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தவிர மற்ற பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது.

ஹன்னா மாண்டனா
வகைTeen sitcom
உருவாக்கம்மைக்கேல் பொரேஸ்
ரிச் கோரெல்
பாரி ஒ'ப்ரியன்
நடிப்புMiley Cyrus
Emily Osment
Mitchel Musso
Jason Earles
Billy Ray Cyrus
Moisés Arias (season 2+)
முகப்பு இசைMatthew Gerrard
Robbie Nevil
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்3
அத்தியாயங்கள்79
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புSteven Peterman
Michael Poryes
படவி அமைப்புVideotape; Multi-camera
ஓட்டம்23-24 நிமிடங்கள் (approx.)
தயாரிப்பு நிறுவனங்கள்It's a Laugh Productions
Michael Poryes Productions
Disney Channel Original Productions
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி தொலைக்காட்சி
படவடிவம்480i (SDTV), 720p (HDTV; effective season 4)
முதல் ஓட்டம்ஐக்கிய அமெரிக்கா
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 24, 2006 (2006-03-24) –
தற்போது
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடரின் மூன்றாவது பருவம் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று தொடங்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இன்னமும் ஒளிபரப்பப்படுகின்றது. ஹன்னா மாண்டனா: தி மூவி திரைப்படம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த நிகழ்ச்சி நான்காவது மற்றும் இறுதி[2] பருவத்திற்காக புதுப்பிக்கப்பட்டு, புதிய பகுதிகள் டிஸ்னியால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மிட்சல் முஸ்ஸோ, இறுதி பருவத்தில் தன்னுடைய வழக்கமான பாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.[சான்று தேவை] ஆனால் அவர் மீண்டும் இடம்பெறுவார்.[3]

தயாரிப்பு

மைக்கேல் போர்யஸ், துணை படைப்பாளராக நன்மதிப்பைப் பெற்றார். இவர் ஹிட்டான டிஸ்னி சேனல் அசல் தொடரான தட்ஸ் சோ ரேவன் தொடருக்கும் துணை படைப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி டிஸ்னி சேனல் ஒரிஜினல் புரொடக்சன்ஸ் ஒருங்கிணைப்பில் இட்ஸ் எ லாப் புரொடக்சன்ஸ், இங்க் மற்றும் மைக்கேல் போர்யஸ் புரொடக்சன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றது. இது கலிபோர்னியாவின் ஹாலிவுட் நகரில் உள்ள சன்செட் ப்ரோன்சன் ஸ்டூடியோஸ் அரங்கத்தில் படமாக்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கான மூலச் சிந்தனை தட்ஸ் சோ ரேவன் தொடரின் "கோயிங் ஹாலிவுட்" பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இது பெட்டர் டேஸ் என்றழைக்கப்பட்ட ஒரு நகைச்சுவை நிகழ்ச்சிக்கான முன்னோட்டப் பகுதியாக இருந்தது. இதில் ஒரு குழந்தை ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நட்சத்திரமாகவும் அதே பெயருடன் அச்சிறுமி சாதாரணமாக பள்ளி செல்லும் குழந்தையாகவும் இருந்தது. "நியூ கிட் இன் ஸ்கூல்" பகுதி முந்தைய பகுதியில் காணப்பட்டது போல் அடிப்படையான முன்னுரையைக் கொண்டிருந்தது. தி சீக்ரெட் லைப் ஆப் ஜோ ஸ்டூவர்ட் (இது ஜோய் 101 என்ற பெயரில் நிக்கெலோடியன் சேனலில் ஒளிபரப்பாகும் தொடரை ஒத்து இருந்ததால் கைவிடப்பட்டது) [மேற்கோள் தேவை], தி பாப்ஸ்டார் லைப்! மற்றும் அலெக்ஸிஸ் டெக்சாஸ் ஆகியவை தலைப்புக்காக கருத்தில் கொள்ளப்பட்ட மற்ற பெயர்கள். முந்தைய அமெரிக்கன் ஜூனியர்ஸ் இறுதிப்போட்டியாளர் ஜோர்டன் மேக்காய் மற்றும் பாப் மற்றும் R&B பாடகர் ஜோஜோ (இவர் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்க மறுத்தவர்) ஆகியோர் ஜோ ஸ்டூவர்ட் பாத்திரத்தில் நடிப்பதற்காக கருத்தப்பட்டவர்கள். மைலே சைரஸ் முதலில் "உற்ற தோழி"[4] லில்லி ரோமெரோ பாத்திரத்திற்குத்தான் குரல் கொடுத்தார். பின்னர் அந்தப் பாத்திரம் லில்லி டிரஸ்கோட் எனப் பெயர்மாற்றப்பட்டது. ஆனால் அவர் முதன்மைப் பாத்திரத்திற்கு சிறப்பாகப் பொருந்துவார் என்று அவர்கள் நினைத்ததால், அவர் ஜோ ஸ்டூவர்ட்/ஹன்னா மாண்டனா பாத்திரத்திற்கு முயற்சித்தார். பின்னர் ஜோ ஸ்டூவர்ட் என்ற பெயரானது க்ளோயே ஸ்டூவர்ட் என்று மாற்றப்பட்டது. அவர் அந்தப் பாத்திரத்தைப் பெற்ற போது இறுதியாக மைலே என்று மாற்றப்பட்டது. ஹன்னா மாண்டனாவின் பெயர்களும் சிலமுறை மாற்றப்பட்டன. அன்னா காபானா, சமந்தா யார்க் மற்றும் அலெக்ஸிஸ் டெக்சாஸ் ஆகியவை மூன்றும் முந்தைய பெயர்களாக இருந்தன.

2006 ஆம் ஆண்டு டிசம்பரில், ஹன்னா மாண்டனா துணிகள், ஆபரணம், உடை மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் வெளியிடும் திட்டத்தை டிஸ்னி அறிவித்தது.[5] ப்ளே அலாங் டாய்ஸ் நிறுவனம் ஹன்னா மாண்டனா பேஷன் பொம்மைகள், பாடும் பொம்மைகள், மைலே ஸ்டூவர்ட் பொம்மை போன்றவற்றை வெளியிட்டது. மற்ற வியாபாரிகள் 2007 ஆம் ஆண்டில் வெளியிட்டனர். மேலும் ஹன்னா பொம்மைகள் நவம்பரில் ஆலிவர், லில்லி ஆகியவற்றுடன் பின்னர் ஜேக் ரியான் பொம்மைகளுடனும் நவம்பரில் வெளிவந்தன. 2007 ஆம் ஆண்டில் அவை மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பொம்மைகளில் ஒன்றாகின.[6]

டெய்லி டிஸ்பேட்ஜ் பத்திரிகையின் கருத்துப்படி, 2008 ஆம் ஆண்டில் உலக ரசிகர்களில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடராக இருந்தது. "மைலேயின் பார்வையாளர்கள் ஒரு நாட்டின் மக்கள் தொகையாக இருந்தால், அது உலகின் மக்கள் தொகையில் பிரேசில் நாட்டிற்கு முன்னதான ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும்."[7] 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஹன்னா மாண்டனா விநியோக உரிமை மிகவும் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஆகவே டிஸ்னி "ஹன்னா மாண்டனாவின் சிறப்புகளை விவாதிக்க அனைத்துத் தரப்பிலிருந்தும் 80 நபர்களைக் கொண்ட ஒரு சர்வதேச சந்திப்பிற்கு" அழைத்தது.[8] டிஸ்னியின் அனைத்து வியாபாரப் பிரிவுகளும் அந்தச் சந்திப்பைப் பிரநிதித்துவப்படுத்தின.

நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு சுரண்டல்

20,000 டாலர்கள் வரையில் நுழைவுச்சீட்டுகள் அதிக விலையுடன், ஒவ்வொரு இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.[9]

ஆரம்ப வரிசைமுறை

மேத்தியூ ஜெர்ரார்டு மற்றும் ராப்பி நேவில் ஆகியோரால் எழுதப்பட்டு, ஜெர்ரார்டுவால் தயாரிக்கப்பட்ட ஹன்னா மாண்டனாவின் கருப்பொருள் பாடலான "தி பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ்" பாடலில் மைலே சைரஸ் (ஹன்னா மாண்டனாவாக) நடித்தார். முதல் பருவத்தில் காட்சி மாற்றங்களுக்கும் விளம்பர இடைவேளைகளுக்கும் இசையமைத்த ஜான் கார்டா, இந்தப் பாடலுக்கு இசையமைத்தார். பாடலின் வரிகள் அந்தத் தொலைக்காட்சித் தொடரின் அடிப்படை முன்னுரையை விவரிக்கின்றன.

நிகழ்ச்சியின் ஒலித்தடத்தில் உள்ளடக்கப்பட்ட பாடல் 2 நிமிடங்கள் 54 வினாடிகள் முழுமையான நீளத்தைக் கொண்டதன் பதிப்பு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது. கதைக்கருவின் தொலைக்காட்சி பதிப்பிற்கு, 50 வினாடிகளிலேயே முடிவடைந்து விடும் பாடலின் முதல் இரண்டு மற்றும் இறுதி இரண்டு பத்திகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. "பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ்" ஆனது கதையின் கருப்பாடலாக தேர்வுசெய்யப்படும் முன்பு, "ஜஸ்ட் லைக் யூ" மற்றும் "தி அதர் சைடு ஆப் மி" ஆகியவை கதையின் கருப் பாடல்களாக முதலில் முயற்சிக்கப்பட்டன.

முதல் இரண்டு பருவங்களுக்குமான ஆரம்ப வரிசைமுறையானது அந்தத் தொடரின் பகுதியில் நடிகரின் பெயர் தோன்றும் போது அவர்கள் ஒவ்வொருவரின் தொடர் பாகங்களின் காட்சிகளும் தோன்றும் அம்சத்தைக் கொண்டிருந்தன. பெருங்கூடாரங்களின் விளக்கு பாணியிலான முறையில் நடிகர்களின் பெயர்கள் தோன்றும்போது ஏற்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்பாகங்கள் முழுத் திரையில் ஆக்குவோரின் பெயர்கள் (பெரும்பாலானவை தொடரின் பருவம் ஒன்றின் துவக்கக்காலத்தில் தயாரிக்கப்பட்ட பகுதிகளின் காட்சிகளாகும்) கடைசிக்கு முன்பு இரண்டாவதாக தோன்றுகிறது. நிகழ்ச்சியின் தலைப்பு முத்திரை வடிவமைப்பு தொடர்வரிசையின் ஆரம்பம் மற்றும் இறுதியில் (அடுத்த பாகத்தில் "இசை நிகழ்ச்சி மேடை"யில் சைரஸ் அவளது பாத்திரமான ஹன்னா மாண்டனாவாகத் தோன்றியது) தோன்றும். இரண்டாவது பருவத்திற்கான தொடர்வரிசையில் பகுதிகளின் காட்சிகள் பழைய காட்சிகளுக்குப் பதிலாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மேலும் டிஸ்னியின் லோகோ அந்நிகழ்ச்சியின் தலைப்பு முத்திரைக்கு மேலே சேர்க்கப்பட்டது.

மூன்றாவது பருவத்திற்கு புதிதாக துவக்க பெயர்ப்பட்டியல் கொண்ட தொடக்கக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. அது டைம்ஸ் ஸ்கொயர் போன்ற அரங்க அமைப்பில் மைலேயை அவளாகவும் மற்றும் ஹன்னா மாண்டனாவாகவும் காட்டுகின்றது. வரிசையான சுழல் பலகையில் நிகழ்ச்சியின் நடிகர் நடிகைகள் பெயர்களும் தொடரின் காட்சிகளும் தோன்றுகின்றன. மேலும் அது ஹன்னா மாண்டனாவை அவரது புதிய சிகையலங்காரம் மற்றும் உடையலங்காரங்களுடன் காண்பிக்கின்றது. ஹன்னா மாண்டனா: தி மூவிக்காக பதிவு செய்யப்பட்ட பாடலான "தி பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ்" (அத்திரைப்படத்தில் கேட்டது) பாடலின் மறுகலப்பு செய்யப்பட்ட பதிப்பு இசைக்கப்படுகின்றது. இது, முதல் முறையாக டிஸ்னி சேனல் தொடர் ஒன்று தனது தொடக்க தலைப்பு வரிசையை முழுவதுமாக புதுப்பித்ததைக் குறித்தது.

வழக்கு

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று , பட்டி ஷேஃப்பீல்டு அவர்கள் ஹன்னா மாண்டனா தொடர்பாக டிஸ்னி மீது வழக்குத் தொடர்ந்தார். அவர் ஹன்னா மாண்டனாவுக்கான யோசனை, தொடக்கத்தில் தனக்குத்தான் வந்ததாகவும், ஆனால் டிஸ்னி தனக்கு பணம் எதுவும் செலுத்தவில்லை என்றும் வாதிட்டார். வழக்கில், ஷேஃப்பீல்டு 2001 ஆம் ஆண்டில் டிஸ்னி சேனலுக்காக ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் ராக் ஸ்டாராக ரகசிய இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததை மையமாகக் கொண்ட "ராக் அண்ட் ரோலண்ட்" என்ற பெயரைக்கொண்ட ஒரு தொலைத் தொடருக்கான யோசனையை அமைத்து வைத்திருந்ததாக உரிமை கோருகின்றார். அந்த வழக்கானது, டிஸ்னி சேனல் அதிகாரிகள் அந்த யோசனையை முதலில் விரும்பினர், ஆனால் தொடரில் அதை உபயோகப்படுத்திவிட்டனர் என்றும் கோருகின்றது.[10]

நடிப்பு

முதன்மைப் பாத்திரங்கள்

  • மைலே ஸ்டூவர்ட்/ஹன்னா மாண்டனா பாத்திரத்தில் மைலே சைரஸ்
  • லில்லி டிரஸ்கோட்/லோலா லுப்னாக்கில் பாத்திரத்தில் எமிலி ஓஸ்மெண்ட்
  • ஆலிவர் ஓகன்/மைக் ஸ்டான்லி III பாத்திரத்தில் மிட்சல் முஸ்ஸோ
  • ஜேக்ஸன் ஸ்டூவர்ட் பாத்திரத்தில் ஜேசன் ஏர்லஸ்
  • ராப்பி ஸ்டூவர்ட் பாத்திரத்தில் பில்லி ரே சைரஸ்
  • ரைகோ பாத்திரத்தில் மாய்செஸ் ஆரியாஸ் (பருவம் 2-தற்போது) (பருவம் 1 இல் இடம்பெற்றார்)

மீண்டும் இடம் பெற்ற பாத்திரங்கள்

  • ஷானிகா நோலெஸ்: ஆம்பர் அடிஸன்
  • அன்னா மரியா பெரேஸ் டே டாக்ளே: ஆஷ்லே டேவிட்
  • ரோமி டேம்ஸ்: டிராசி வான் ஹார்ன்
  • ஹேய்லே சேஸ்: ஜோயன்னி பௌலம்போ
  • டோலி பார்டன்: ஆண்ட் டோலி
  • விக்கி லாரன்ஸ்: மாமவ் ருத்தீ
  • பிரான்சஸ் காலியர்: ராக்ஸி
  • காடி லைன்லே: ஜேக் ரியான்
  • செலெனா கோம்ஸ்: மிகாய்லா
  • மோர்கன் யார்க்: சாரா
  • நோஹ் சைரஸ்: சிறுமி (இது மட்டுமே சிறிய பாத்திரம், ஆனால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது)
  • எரின் மேத்தியூஸ்: கரேன் குன்க்லே
  • பௌல் வோக்ட்: ஆல்பெர்ட் டோண்ட்சிக்
  • லிசா ஆர்க்: லிபோசக்‌ஷன் லிசா
  • ஆண்ட்ரே கின்னே: கூப்பர்
  • டியோ ஆலிவரஸ்: மேக்ஸ்
  • ஆண்ட்ரூ கால்டுவெல்: தோர்
  • மைக்கேல் காகன்: கொலின் லாசிட்டர்
  • கிரேக் பேக்கர்: திரு. கொரேல்லி

பகுதிகள்

சீசன்பகுதிகள்முதல் ஒளிபரப்புத் தேதிகடைசி ஒளிபரப்புத் தேதிகுறிப்புகள்
bgcolor="#FFE87C"1262006 ஆம் ஆண்டு மார்ச் 242007 ஆம் ஆண்டு மார்ச் 30
bgcolor="#669999"2292007 ஆம் ஆண்டு ஏப்ரல் 232008 ஆம் ஆண்டு அக்டோபர் 12"நோ சுகர், சுகர்" என்று பெயரிடப்பட்ட 30 ஆவது பகுதி தயாரிக்கப்பட்டது, ஆனால் அமெரிக்காவில் ஒளிபரப்பவில்லை.
bgcolor="#CC99CC"330[11]2008 ஆம் ஆண்டு நவம்பர் 2
bgcolor="#D16587"412[2]11 பகுதிகள் + ஒரு மணிநேர தொடரின் இறுதிப்பகுதி[2]

திரைப்படங்கள்

ஹன்னா மாண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ் கான்செர்ட்

ஹன்னா மாண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ் கான்செர்ட் என்பது டிஸ்னி டிஜிட்டல் 3-டியில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் அளித்த இசை சார்ந்த ஆவணப்படம் ஆகும். கால வரம்புக்குட்பட்ட வெளியீடானது அமெரிக்கா மற்றும் கனடாவில் 2008 ஆம் ஆண்டின் பிப்ரவரி 1-7 ஒரு வாரத்தை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளில் அதன் பின்னர் வெளியிடப்பட்டது. ஆனால் அது தியேட்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீண்ட நாட்கள் காட்சிக்கு அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியானது படம்பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் தியேட்டர் முறையில் பிப்ரவரியிலும் சர்வதேச அளவில் அதே மாதத்திலும் வெளியிடப்படும் என்று டிஸ்னி அறிவித்தது. அத்திரைப்படம் 3-டி கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றது.

தொடக்க வாரமுடிவான 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-3 இல், அப்படம் மொத்த வருமானமாக 29 மில்லியன் டாலர்களைப் பெற்றது. நுழைவுச்சீட்டு விலை 15 டாலர் என்ற அளவில் மிகவும் உயர்வாக இருந்தது. இது 2008 ஆம் ஆண்டின் பெரும்பாலான வழக்கமான திரைப்பட நுழைவுச்சீட்டுகளின் விலையை விட குறைந்தபட்சம் 50% உயர்வாக இருந்தது.[மேற்கோள் தேவை] இது அந்த வாரத்தின் முதல் நிலையிலிருந்த திரைப்படமாக இருந்தது. ஆரம்பத்தில் 638 திரையரங்குகளில் மட்டுமே ஓடி, இது ஒவ்வொரு திரையரங்கிற்கும் 42,000 டாலருக்கும் அதிகமான வசூல் சாதனையை ஏற்படுத்தியது. இது ஒரு வாரமுடிவிலான காலகட்டத்தில் அதிக வருமானத்தைப் பெற்றுத்தந்த 3-டி திரைப்படம் என்ற சாதனையைச் செய்தது. இது மொத்த வருமானத்திற்கான சூப்பர் பௌல் வாரயிறுதிக்கான சாதனையை ஏற்படுத்தியது.[மேற்கோள் தேவை]

ஹன்னா மாண்டனா: தி மூவி

ஹன்னா மாண்டனா: தி மூவி என்பது அமெரிக்க பதின் வயது நகைச்சுவை தொடரான ஹன்னா மாண்டனா தொடரைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டதாகும். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, பெரும்பாலான படப்பிடிப்பு கொலம்பியா, டென்னிஸ்ஸி[12] மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா[13][14][15] ஆகிய நகரங்களில் நடைபெற்று 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.[16] திரைப்படம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் வெளியிடப்பட்டது.[17]

ஒலித்தட்டுக்கள்

  • 2006: ஹன்னா மாண்டனா
    • ஹன்னா மாண்டனா: விடுமுறைப் பதிப்பு
    • ஹன்னா மாண்டனா: சிறப்புப் பதிப்பு
  • 2007: ஹன்னா மாண்டனா 2: மீட் மைலே சைரஸ்
    • ஹன்னா மாண்டனா 2: ராக்ஸ்டார் பதிப்பு
    • ஹன்னா மாண்டனா 2: நான்-ஸ்டாப் டான்ஸ் பார்ட்டி
  • 2008: ஹன்னா மாண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ் கான்செர்ட்
    • ஹன்னா மாண்டனா: ஹிட்ஸ் ரீமிக்ஸ்டு
  • 2009: ஹன்னா மாண்டனா: தி மூவி
  • 2009: ஹன்னா மாண்டனா 3

விருதுகளும் பரிந்துரைகளும்

ஆண்டுமுடிவுவிருதுவகைபெற்றவர்
2006பரிந்துரைக்கப்பட்டது2006 டீன் சாய்ஸ் விருதுகள்டிவி - சாய்ஸ் பிரேக்அவுட் ஸ்டார்மைலே சைரஸ்
2007பரிந்துரைக்கப்பட்டது2006-2007 கோல்டன் ஐகான் விருதுசிறந்த புதிய நகைச்சுவை[18]
வெற்றியாளர்2007 கிட்ஸ் சாய்ஸ் விருதுகள்பிடித்தமான தொலைக்காட்சி நடிகைமைலே சைரஸ்
வெற்றியாளர்2007 டீன் சாய்ஸ் விருதுகள்சாய்ஸ் டிவி ஷோ: நகைச்சுவை[19]
பிடித்தமான தொலைக்காட்சி நடிகை[20]மைலே சைரஸ்
பரிந்துரைக்கப்பட்டது2007 கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மிசிறந்த குழந்தை நிகழ்ச்சி
2008.வெற்றியாளர்2008 கிட்ஸ் சாய்ஸ் விருதுகள்பிடித்தமான தொலைக்காட்சி நடிகைமைலே சைரஸ்
பரிந்துரைக்கப்பட்டதுபிடித்தமான தொலைக்காட்சி ஷோ
வெற்றியாளர்எங் ஆர்டிஸ்ட் விருதுகள்சிறந்த தொலைக்காட்சி குடும்பத் தொடர்
வெற்றியாளர்தொலைத் தொடரில் சிறந்த நடிப்பு
- இளம் முன்னணி நடிகை
மைலே சைரஸ்
பரிந்துரைக்கப்பட்டதுதொலைத் தொடரில் சிறந்த நடிப்பு
- மீண்டும் இடம் பெற்ற இளம் நடிகை
ரியான் நியூமேன்
பரிந்துரைக்கப்பட்டதுஒரு தொலைத் தொடரில் சிறந்த இளம் குழுவின்
நடிப்பு
மைலே சைரஸ்,
எமிலி ஓஸ்மெண்ட்,
மிட்சல் முஸ்ஸோ,
மோயிசஸ் ஆரியாஸ்,
காடி லைன்லே
வெற்றியாளர்கிரேசி ஆலென் விருதுகள்சிறந்த பெண் முன்னணி நடிகை - நகைச்சுவைத் தொடர் (குழந்தை/பதின்பருவம்)மைலே சைரஸ்
வெற்றியாளர்2008 டீன் சாய்ஸ் விருதுகள்சாய்ஸ் டிவி நடிகை: காமெடிமைலே சைரஸ்
வெற்றியாளர்சாய்ஸ் டிவி ஷோ: காமெடி
பரிந்துரைக்கப்பட்டது2008 எம்மி விருதுகள்சிறந்த குழந்தை நிகழ்ச்சி
பரிந்துரைக்கப்பட்டதுதொலைக்காட்சி விமர்சனங்கள் கூட்டமைப்பு விருதுகள்குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில்
சிறந்த செயல்பாடு
வெற்றியாளர்பப்தா குழந்தைகளுக்கான விருதுகள் 2008[21]பப்தா கிட்ஸ் வோட் 2008
2009.பரிந்துரைக்கப்பட்டது2009 கிட்ஸ் சாய்ஸ் விருதுகள்விரும்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி
வெற்றியாளர்கிரேசி ஆலென் விருதுகள்சிறந்த பெண் முன்னணி நடிகை - நகைச்சுவைத் தொடர் (குழந்தை/இளம்பருவம்)மைலே சைரஸ்
பரிந்துரைக்கப்பட்டது2009 கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மிசிறந்த குழந்தை நிகழ்ச்சி

குறிப்பு: 2007 ஆம் ஆண்டிற்கான கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மிஸ் விருதில், ஹன்னா மாண்டனா தொடரானது டிஸ்னி சேனலின் மற்ற இரண்டு நிகழ்ச்சிகளான தி சூட் லைப் ஆப் ஜேக் & காடி மற்றும் தட்ஸ் ஸோ ரேவன் ஆகியவற்றுக்கு எதிராக முன்னிலை பெற்றது, ஆனால் நிக் நியூஸ் சிறப்பு நிகழ்ச்சியான பிரைவேட் வேர்ல்டுஸ்: கிட்ஸ் அண்ட் ஆட்டிஸம் நிகழ்ச்சிக்கு எதிராகத் தோற்றுப் போனது. 2009 ஆம் ஆண்டிற்கான கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மிஸ் விருதிலும், ஹன்னா மாண்டனா மறுபடியும் டிஸ்னி சேனலின் மற்ற தொடர்களுக்கு எதிராக முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முறை அந்த விருதை விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ் நிகழ்ச்சி பெற்றது.

தொடர் புதினங்கள்

  1. கீப்பிங் சீக்ரெட்ஸ் - மைலே கெட் யுவர் கம்" & "இட்ஸ் மை பார்ட்டி அண்ட் ஐ'வில் லை இப் ஐ வாண்ட் டு
  2. பேஸ்-ஆப் - யு ஆர் சோ வைன், யு ப்ராபப்ளி திங் திஸ் சிட் இஸ் அபௌட் யூ" & "ஓ, ஓ, இட்சி உமென்
  3. சூப்பர் ஸ்னீக் - ஷி'ஸ் எ சூப்பர் ஸ்னீக்" & "ஐ காண்ட் மேக் யு லவ் ஹன்னா இப் யூ டோண்ட்
  4. ட்ரூத் ஆர் டேர் - ஊப்ஸ்

! ஐ மெடில்டு அகெய்ன்" & "இட்ஸ் எ மானுக்கின்ஸ் வேர்ல்டு'

  1. ஹோல்டு ஆன் டைட் - ஓ சே, கேன் யூ ரிமெம்பர் தி வேர்டுஸ்?" & "ஆன் தி ரோடு அகெய்ன்
  2. க்ரஷ்-டேஸ்டிக்

! - குட் கோலி, மிஸ் டோலி" & "மாஸ்காட் லவ்

  1. நைட்மேர் ஆன் ஹன்னா ஸ்ட்ரீட் - டோர்ன் பிட்வீன் டூ ஹன்னாஸ்" & "கிராண்ட்மா டோண்ட் லெட் யுவர் பேபிஸ் க்ரோ அப் டு பி பேவரிட்ஸ்
  2. சீயிங் கிரீன் - மோர் தன் எ ஜாம்பீ டு மி" & "பீபிள் ஹு யூஸ் பீபிள்
  3. பேஸ் த ம்யூஸ்சிக் - ஸ்மெல்ஸ் லைக் டீன் செல்லவுட்" & "வி ஆர் பேமிலி: நவ் கெட் மி சம் வாட்டர்

!'

  1. டோண்ட் பெட் ஆன் இட் - பேட் மூஸ் ரைஸிங்" & "மை பாய்பிரண்ட்ஸ் ஜேக்சன் அண்ட் தேர்'ஸ் கோன்ன பி டிரபிள்
  2. ஸ்வீட் ரெவெஞ்ச் - தி ஐடோல் சைடு ஆப் மி" & "ஸ்கூலி புல்லி
  3. வின் ஆர் லாஸ் - மணி பார் நத்திங், கில்ட் பார் ப்ரீ" & "டெட் இட் பி
  4. ட்ரூ ப்ளூ - கப்ஸ் வில் கீப் அஸ் டுகதெர்" & "மி அண்ட் ரிகோ டவுன் பை தி ஸ்கூல் யார்டு
  5. ஆன் தி ரோடு - கெட் டவுன் அண்ட் ஸ்டடி-உடி-உடி" & "ஐ வாண்ட் யூ டூ வாண்ட் மீ... டு கோ டு ப்ளோரிடா
  6. கேம் ஆப் ஹார்ட்ஸ் - மை பெஸ்ட் பிரண்ட்ஸ் பாய்பிரண்ட்" & "யூ ஆர் சோ ச்யூ-எபிள் டு மி
  7. விஷ்புல் திங்கிங் - வென் யூ விஷ் யூ வேர் தி ஸ்டார்" & "டேக் திஸ் ஜாப் அண்ட் லவ் இட்

!'

  1. ஒன் ஆப் எ கைண்ட் - ஐ யாம் ஹன்னா, ஹியர் மி க்ரோக்" & "யூ காட்ட நாட் பைட் பார் யுவர் ரைட் டு பார்ட்டி

பிற புதினங்கள்

  1. ஹன்னா மாண்டனா: தி மூவி
  2. ராக் தி வேவ்ஸ்
  3. இன் தி லூப்

சர்வதேச வெளியீடு

ஹன்னா மாண்டனா உலகெங்கிலும் பின்வரும் நிலையங்களில் ஒளிபரப்பபடுகின்றது:

மண்டலம்வ்லையமைப்பு(கள்)தொடர் தொடக்கம்
அராப் வேர்ல்டுடிஸ்னி சேனல் மத்திய கிழக்கு2006 ஆம் ஆண்டு மார்ச் 24 (முதல் தொடக்கம் )
MBC32007 ஆம் ஆண்டு நவம்பர் 10
அர்ஜென்டினாடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006
ஆசியாடிஸ்னி சேனல் ஆசியா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 23
தெற்காசியாடிஸ்னி சேனல் இந்தியா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 23
ஆஸ்திரேலியாடிஸ்னி சேனல் ஆஸ்திரேலியா2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7
செவன் நெட்வொர்க்2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 7
பெல்ஜியம்VT42007 ஆம் ஆண்டு செப்டம்பர் 3
பிரேசில்டிஸ்னி சேனல்2006 ஆம் ஆண்டு நவம்பர் 26
ரேடி குளோபோ2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 5
பல்கேரியாஜெட்டிக்ஸ்2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 (தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே)
BNT 12009 ஆம் ஆண்டு மார்ச் 28[22]
கனடாபேமிலி2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4
சிலிடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம் ஆண்டு நவம்பர் 11
முதன்மைச் சீனாSMG இண்டர்நேஷனல் சேனல் ஷாங்காய்[23]2008 ஆம் ஆண்டு ஜூன் 30
கொலம்பியாடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம் ஆண்டு நவம்பர் 12
செக் குடியரசுஜெட்டிக்ஸ்2008.
டென்மார்க்டிஸ்னி சேனல் டென்மார்க்2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 29
DR 12007 ஜனவரி
டொமினிக் குடியரசுடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம் ஆண்டு நவம்பர் 12
பின்லாந்துடிஸ்னி சேனல் ஸ்காண்டினேவியாவின் பின்னிஷ் பதிப்பு2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 29
பிரான்ஸ்டிஸ்னி சேனல் பிரான்ஸ்2006 ஆம் ஆண்டு அக்டோபர் 23
ஜெர்மனிடிஸ்னி சேனல் ஜெர்மனி2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 23
சூப்பர் RTL2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24
ஐஸ்லாந்துஸ்ஜோன்வார்போ2007
அயர்லாந்துRTÉ டூ, டிஸ்னி சேனல்2006 ஆம் ஆண்டு மே 6
இஸ்ரேல்அருட்ஸ் ஹாயேலடிம்
ஜெட்டிக்ஸ்
2007 ஆம் ஆண்டு ஜூன் 6
2009.
இத்தாலிடிஸ்னி சேனல் (இத்தாலி)2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 21
ஜப்பான்டிஸ்னி சேனல் ஜப்பான்[24]2006 ஆம் ஆண்டு அக்டோபர் 14
டிவி டோக்கியோ2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5
மேசிடோனியாA1 டெலிவிஷன்2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29
மெக்சிகோடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம ஆண்டு நவம்பர் 12
அஸ்டெக்கா 7 டிவி அஸ்டெக்கா2007 ஆம் ஆண்டு ஜூலை 6
நெதர்லாந்துஜெட்டிக்ஸ்
முதல் சீசன் டச் மொழியில் மொழிமாற்றப்பட்டது, சீசன் இரண்டு எழுத்துருப்படித் தலைப்புகளுடன் வந்தது.
2008 ஆம் ஆண்டு மே 17
நியூசிலாந்துடிஸ்னி சேனல் நியூசிலாந்து
டிவி 3 ஸ்டிக்கி டிவி
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7
நார்வேடிஸ்னி சேனல் ஸ்காண்டினேவியா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 29
பாகிஸ்தான்டிஸ்னி சேனல் (அமெரிக்கா தொடக்கம்)2006 ஆம் ஆண்டு மார்ச் 24
டிஸ்னி சேனல் அரேபியா2006 ஆம் ஆண்டு மார்ச் 24
டிஸ்னி சேனல் இந்தியா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 23
ஜெட்டிக்ஸ் பாகிஸ்தான்2008 ஆம் ஆண்டு ஜனவரி 5
ஜியோ கிட்ஸ் (இந்நிகழ்ச்சி உருது எழுத்துருப்படி தலைப்புகளுடன் ஒளிபரப்பப்படுகின்றது)2008 ஆம் ஆண்டு நவம்பர்
விக்கிட் பிளஸ் (உருதில் மொழிமாற்றப்பட்டது) 2009 ஆம் ஆண்டு ஜனவரி 12
பனாமாடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம் ஆண்டு நவம்பர் 12
டெலி 72008 ஆம் ஆண்டு ஜனவரி 2
பெருடிஸ்னி சேனல் லத்தீன் அமெரிக்கா2006 ஆம் ஆண்டு நவம்பர் 11
போலந்துடிஸ்னி சேனல் போலந்து2006 ஆம் ஆண்டு டிசம்பர் 2
போர்ச்சுகல்டிஸ்னி சேனல் போர்ச்சுகல்2006
க்யூபெக்VRAK.TV2007 ஆம் ஆண்டு ஜூன் 18
ரோமானியாTVR 12007 ஆம் ஆண்டு ஜூலை 3
ஜெட்டிக்ஸ்2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15
ரஷ்யாSTS2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 1
தென்னாப்பிரிக்காடிஸ்னி சேனல் தென்னாப்பிரிக்கா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 29
ஸ்பெயின்டிஸ்னி சேனல் ஸ்பெயின்2007 ஆம் ஆண்டு ஜனவரி
ஸ்லோவக் குடியரசுSTV 12007 ஆம் ஆண்டு மே
ஜெட்டிக்ஸ்2007 ஆம் ஆண்டு ஜூலை
ஸ்வீடன்டிஸ்னி சேனல் ஸ்காண்டினேவியா2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 29
தைவான்டிஸ்னி சேனல் தைவான்2006 ஆம் ஆண்டு நவம்பர் 4
துருக்கிடிஜிதுர்க்2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29
டிஸ்னி சேனல் துருக்கி2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29
இங்கிலாந்துடிஸ்னி சேனல் UK, பைவ்2006 ஆம் ஆண்டு மே 6
அமெரிக்க ஐக்கிய நாடுகள்டிஸ்னி சேனல்2006 ஆம் ஆண்டு மார்ச் 24
ABC கிட்ஸ்

வீடியோ விளையாட்டுகள்

  • ஹன்னா மாண்டனா: ஸ்பாட்லைட் வேர்ல்டு டூர்
  • ஹன்னா மாண்டனா: மியூசிக் ஜாம்
  • ஹன்னா மாண்டனா: பாப் ஸ்டார் எக்ஸ்குளூசிவ்
  • ஹன்னா மாண்டனா DS
  • டான்ஸ் டான்ஸ் ரிவொல்யூஷன் டிஸ்னி சேனல் எடிசன்
  • டிஸ்னி சிங்க் இட்
  • ஹன்னா மாண்டனா: தி மூவி

மேலும் காண்க

  • ஹன்னா மாண்டனா கதாபாத்திரங்களின் பட்டியல்
  • ஹன்னா மாண்டனா: லைவ் இன் லண்டன்
  • பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ் டூர்
  • ஹன்னா மாண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்டுஸ் கான்செர்ட்
  • ஹன்னா மாண்டனா: தி மூவி

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹன்னா_மாண்டனா&oldid=3925757" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்