ஸ்ரீ இண்டிளயப்பன் கோவில்

கேரளத்தில் உள்ள கோயில்

மறையிக்கோடு ஸ்ரீ இண்டிளயப்பன் சேத்திரம் (മലയാളം:ഇണ്ടിളയപ്പൻ ക്ഷേത്രം, മാരായിക്കോട്) என்பது தென்னிந்தியாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலாகும். இந்தக் கோவிலிலில் இந்து அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கோயில் கொட்டாரக்கராவிலிருந்து 5 கிமீ தொலைவில் கரிக்கோமில் உள்ளது.

ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு
Sree Indilayappan Temple
ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு is located in கேரளம்
ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு
ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு
கேரளத்தில் அமைந்துள்ள இடம்
பெயர்
பெயர்:Marayikkodu Sree Indilayapan Kshethram
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கொல்லம்
அமைவு:கொட்டாரக்கரை
ஆள்கூறுகள்:8°59′36″N 76°48′29″E / 8.99333°N 76.80806°E / 8.99333; 76.80806
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன் மற்றும் விஷ்ணு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா
கோயில்களின் எண்ணிக்கை:2
வரலாறு
அமைத்தவர்:கோயில்
இணையதளம்:http://marayikkodu.org

கோயில்

இக்கோயிலில் சிவன் (சிவ லிங்கம்), பார்வதி தேவி, விஷ்ணு ஆகியோர் முதன்மை தெய்வங்களாக உள்ளனர். கணபதி, நாகராசன் மற்றும் நாகயக்சி, பிரம்மாராக்ஷசன், யக்ஷி ஆகியோர் கோவிலின் உப தெய்வங்கள் ஆவார்.

இங்கே இரு கோயில்கள் உள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர். ஒன்று சிவன் கோயில் இன்னொன்று விஷ்ணு கோயில். சிவன் கோயில் இரண்டு தனி சன்னதிகளுடன் உள்ளது, ஒன்று சிவனுக்கானது,அது கிழக்கு பார்த்தும், மற்றொன்று பார்வதி தேவிக்கானது மேற்குதிசையிலும் உள்ளது. விஷ்ணு கோயில் ஒன்று கிழக்கு மண்டபத்தில் தனிச் சந்நிதியாக கிழக்கு பார்த்து உள்ளது.

இங்கு பிள்ளையாருக்கு தனிச் சந்நிதி உள்ளது. வாஸ்துவின்படி, கோயில் வளாகத்தில் சிவன் கோயிலானது "கன்னி மூலை"யில் (தென்-மேற்கு மூலை) அமைந்துள்ளது. ஸ்ரீ நாகராஜர் மற்றும் நாகயக்ஷி மற்றும் பிரம்மராக்ஷி ஆகியோர், கணேசரின் "கன்னி மூலையில்" பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றனர். விஷ்ணுவின் சன்னதிக்கு அருகிலுள்ள மரத்தின் அடியில் யக்ஷி இடம்பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்