ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா

எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (Stanley Jeyaraja Tambiah; 16 சனவரி 1929[2] - 19 சனவரி 2014[3])என்பவர் சமூக மானிடவியலாளரும்[4] ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[5] இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் (Association for Asian Studies) முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
Stanley Jeyaraja Tambiah
பிறப்பு(1929-01-16)சனவரி 16, 1929
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசனவரி 19, 2014(2014-01-19) (அகவை 85)
கேம்பிரிட்ச், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்இலங்கையர், அமெரிக்கர்
துறைமானிடவியல்
பணியிடங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
எட்மண்ட் லீச்[1]
விருதுகள்பல்சான் பரிசு (1997)
ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது (1998)

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்டான்லி தம்பையா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் சார்ல்சு ராசக்கோன், எலீசா செலானா தம்பையா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.[3] கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951 இல் இளங்கலைப் பட்டம் பெற்று நியூ யோர்க் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 1954 இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்[4].

படிப்பை முடித்துக் கொண்டு 1955 இல் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் விரிவுரையாளராக 1960 வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் யுனெஸ்கோவின் அனுசரனையில் தாய்லாந்து, பாங்கொக்கில் இயங்கும் Bangkok Institute for Child Studies என்ற ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 1963 முதல் 1972 வரை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், 1973 முதல் 1976 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்[2]. 1976 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்[5].

விருதுகள்

இவரது நூல்கள்

மறைவு

பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா நீண்ட சுகவீனத்தை அடுத்து 2014 சனவரி 19 இல் ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ், கேம்பிரிட்ச் நகரில் காலமானார். இவருக்கு மனைவி மேரி. எச். தம்பையா, மற்றும் ஜொனத்தன், மேத்தியூ ஆகிய இரு மகன்மார் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்