வீரசேனர்

(வீரசேனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்[1]. வீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்[2]. இவரது மாணவர் ஜினசேனர் ஆவார்.

ஆச்சாரிய வீரசேனர்

வீரசேனர் ஒரு கணிதவியலாளர். ஒரு திண்ம அடித்துண்டின் கன அளவு காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் ஆய்வுசெய்த கருத்துருக்கள்: ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான மடக்கைகள் (ardhaccheda); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)[3]

ஒரு வட்டத்தின் சுற்றளவு C, விட்டம் d இரண்டுக்குமான தொடர்பைத் தரும் தோராயமான வாய்ப்பாட்டினை அளித்துள்ளார்:

C = 3d + (16d+16)/113

அதிகளவு விட்டமுடைய (d) வட்டங்களுக்கு இவ்வாய்ப்பாடு தரும் π  இன் தோராய மதிப்பு:

π ≈ 355/113 = 3.14159292... .

இம்மதிப்பு ஆரியபட்டியத்தில் ஆரியபட்டரால் தரப்பட்டுள்ள தோராய மதிப்பைவிடத் துல்லியமானது.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வீரசேனர்&oldid=3752729" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்