வீரசிங்கம் ஆனந்தசங்கரி

வீரசிங்கம் ஆனந்தசங்கரி (பிறப்பு: 15 சூன் 1933) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார்.

வீரசிங்கம் ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
பதவியில் உள்ளார்
பதவியில்
2002
முன்னையவர்மு. சிவசிதம்பரம்
இலங்கை நாடாளுமன்றம்
for கிளிநொச்சி
பதவியில்
19701983
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாணம்
பதவியில்
20002004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 15, 1933 (1933-06-15) (அகவை 91)
பருத்தித்துறை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
முன்னாள் கல்லூரிஹார்ட்லி கல்லூரி
சாகிரா கல்லூரி, கொழும்பு
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்வீ. ஆனந்தசங்கரி

ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்த ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி ஆவார். இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு வழங்கப்பட்டது.

இடதுசாரி அரசியலில்

ஆனந்தசங்கரி 1955 ஆம் ஆண்டில் இடதுசாரி இலங்கை சமசமாஜக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 1960 மார்ச் மாதத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1,114 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[1] 1960 சூலை,[2] மற்றும் 1965[3] தேர்தலிலும் சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1965 ஆம் ஆண்டில் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்க் காங்கிரசில் இணைவு

1966 மே மாதத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1968 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி நகரசபையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரானார். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் மு. ஆலாலசுந்தரத்தை 657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவு

1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்து அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தனர். அன்று தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரி மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அன்றைய இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சி. குமாரசூரியரை 11,601 வாக்குகளால் தோற்கடித்தார்.[5] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வீரசிங்கம் ஆனந்தசங்கரி நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[6]. ஆறாம் திருத்தச் சட்டத்துக்கு அமைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததை அடுத்து வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையும் இவருக்கு மறுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்