வியன்னா

வியன்னா

வியன்னா (Vienna) நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இங்கு 1.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது ஆஸ்திரியாவின் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்காகும். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழினுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நகரங்களில் அதிக சனத்தொகை கொண்ட ஏழாவது நகரம் இதுவாகும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் உலகிலேயே செருமன் மொழி பேசும் மக்கள் இங்கேயே அதிகமாகக் காணப்பட்டனர். இன்று, அம்மொழியை அதிகம் பேசும் மக்கள் வாழும் பேர்லினின் பின் இரண்டாவது நகரமாக இது காணப்படுகின்றது.[1][2] வியன்னாவில் ஐக்கிய நாடுகள், ஒபெக் போன்ற பாரிய உலக அமைப்புகள் காணப்படுகின்றன.

வியன்னா
Wien
வியன்னா Wien-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வியன்னா Wien
சின்னம்
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
நாடுஆஸ்திரியா
அரசு
 • நகரத் தந்தைமைக்கல் ஹோப்பில்
பரப்பளவு
 • நகரம்414.90 km2 (160.19 sq mi)
 • நிலம்395.51 km2 (152.71 sq mi)
 • நீர்19.39 km2 (7.49 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்16,74,595 [1]
 • அடர்த்தி4,011/km2 (10,390/sq mi)
 • பெருநகர்
22,68,656 (01.02.2007)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.wien.at

இது ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதுடன்,செக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது "இசை நகரம்" என சிறப்பிக்கப்படுகின்றது.[3] இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன. அத்துடன் "கனவுகளின் நகரம்" எனவும் இது குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில், உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய சிக்மண்ட் பிராய்ட்[4] இந்நகரைச் சேர்ந்தவராவார்.

2005இல் இடம்பெற்ற கணிப்பின்படி, 127 நகரங்களிலும் பொருளாதாரப் புத்திச் சுட்டி கூடிய முதலாவது நகரம் இதுவே ஆகும். இதனால் இது நன்றாக வாழக்கூடிய உலக நகரங்கள் பட்டியலில் முன்னிலை வகித்தது. 2011க்கும் 2015க்கும் இடையில் மெல்பேர்ண் நகரத்தை அடுத்து இரண்டாம் இடம் வகித்தது.[5][6][7][8][9] 2009 தொடக்கம் 2016 வரையிலும், மனித வள-ஆலோசனை நிறுவனமான மெர்சர் அதன் வருடாந்த கருத்துக்கணிப்பூடாக, வழ்கைத் தரம் நிறைந்த உலகின் முதன்மையான 100 நகரங்களில் வியன்னாவை முதலாவதகாக் குறிப்பிட்டது.[10][11][12][13][14][15][16]

வியன்னா தரமான வாழ்க்கைக்கான நகரமாக அறியப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் வியன்னாவை 2012 மற்றும் 2013 இல் மிகவும் செழிப்பான நகரமாக வகைப்படுத்தியது.[17] கலாசாரம், உட்கட்டமைப்பு, சந்தைகள் எனும் மூன்று காரணிகள் மூலமும் கணிக்கப்பட்ட 256 நகரங்களில் கலாசார புத்தக்கம் மிக்க நகராக முதல் இடத்தை இது 2007 இலும் 2008 இலும் வகித்ததுடன் 2014 6 ஆம் இடம் வகித்தது.[18][19][20] வியன்னா தொடர்ந்து நகர்ப்புற திட்டமிடல் மாநாட்டை நடத்துகிறது மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்களால் இது ஒரு வழக்குக் கல்வியாகப் பயன்படுத்தப்படுகிறது.[21]

2005 க்கும் 2010 க்கும் இடையில், சர்வதேச மாநாடுகள் மற்றும் மாநாடுகளுக்கான உலகின் முதலிடமாக வியன்னா இருந்தது.[22] அத்துடன் வருடத்திற்கு 6.8 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.[23]

பெயர்க்காரணம்

வியன்னா, இத்தாலி மற்றும் ஜெர்மனிய சொல்லான இபபெயர், செல்திக் மொழியின் வேதுனியா என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. மேலும் இப்பெயர், வேனியா, வேனியே, வியன் அவ்வாறு திரிந்து வந்ததாகவும் கருதப்படுகின்றது. வியன்னா என்ற சொல்லிற்கு, அடர்ந்த காடுகள் என்று அர்த்தம். வேறு சில மக்களின் கூற்றுப்படி, ரோமாபுரியிலிருந்து இங்கு குடிபெயர்ந்த செல்திக் இன மக்களின் வழக்குச் சொல்லான விந்தோபோனா என்பதிலிருந்து திரிந்து, விந்தோவினா, விதன், வியன் என திரிந்து வியன்னா என்ற பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். விந்தோபோனா என்பதற்கு, வெண்நிலம் என்று பொருள்[24].

புவி அமைவிடம்

பனிக்காலத்தில் வியன்னா'வின் கவின்மிகு காட்சி

ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தின் கிழக்குத் திசை விரிவாக்கப்பகுதியான ஆஸ்திரியாவின் வடகிழக்கில் வியன்னா அமைந்துள்ளது. முற்காலத்தில், இங்கிருக்கும் தனுபே எனும் ஆற்றின் கரையில் ஒருசில இன மக்கள் குடிபெயர்ந்து வந்தனர். பிற்காலத்தில், இந்த ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம் விரிவடைந்தது. இந்நகர், கடல் மட்டத்திலிருந்து 151 முதல் 524 m (495 முதல் 1,719 அடி) தொலைவில் உள்ளது. ஆஸ்திரியாவிலுள்ள நகரங்கலில், பரப்பளவின் அடிப்படையில் பெரிய நகரமான வியன்னாவின் பரப்பளவு 414.65 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

காலநிலை

வியன்னாவானது, கடல்சார் காலநிலை மற்றும் ஈரப்பத தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பநிலையானது அதிகபட்சமாக 22 முதல் 26 °C (72 முதல் 79 °F)மாகவும், குறைந்தபட்சமாக15 °C (59 °F)வும் உள்ளது. சித்திரை முதல் கார்த்திகை வரையிலான மாதங்களில், பனிப்பொழிவு ஏற்படும். வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்களில், மிதமான தட்பவெப்பநிலை நிலவும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Vienna (Innere Stadt)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)16.8
(62.2)
20.3
(68.5)
25.4
(77.7)
27.4
(81.3)
31.5
(88.7)
36.5
(97.7)
36.1
(97)
39.5
(103.1)
31.8
(89.2)
24.8
(76.6)
21.3
(70.3)
16.4
(61.5)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F)3.8
(38.8)
6.1
(43)
11.5
(52.7)
16.1
(61)
21.3
(70.3)
24.0
(75.2)
26.7
(80.1)
26.6
(79.9)
21.1
(70)
15.3
(59.5)
8.1
(46.6)
4.6
(40.3)
15.3
(59.5)
தினசரி சராசரி °C (°F)1.2
(34.2)
2.9
(37.2)
6.4
(43.5)
11.5
(52.7)
16.5
(61.7)
19.1
(66.4)
21.7
(71.1)
21.6
(70.9)
16.8
(62.2)
11.6
(52.9)
5.5
(41.9)
2.4
(36.3)
11.4
(52.5)
தாழ் சராசரி °C (°F)-0.8
(30.6)
0.3
(32.5)
3.5
(38.3)
7.8
(46)
12.5
(54.5)
15.1
(59.2)
17.4
(63.3)
17.5
(63.5)
13.6
(56.5)
8.8
(47.8)
3.6
(38.5)
0.5
(32.9)
8.3
(46.9)
பதியப்பட்ட தாழ் °C (°F)-17.6
(0.3)
-16.4
(2.5)
-10.4
(13.3)
-2.1
(28.2)
4.9
(40.8)
6.8
(44.2)
10.9
(51.6)
10.1
(50.2)
5.6
(42.1)
-1.8
(28.8)
-7.0
(19.4)
-15.4
(4.3)
−17.6
(0.3)
பொழிவு mm (inches)21.3
(0.839)
29.3
(1.154)
39.1
(1.539)
39.2
(1.543)
60.9
(2.398)
63.3
(2.492)
66.6
(2.622)
66.5
(2.618)
50.4
(1.984)
32.8
(1.291)
43.9
(1.728)
34.6
(1.362)
547.9
(21.571)
பனிப்பொழிவு cm (inches)18.6
(7.32)
15.6
(6.14)
8.3
(3.27)
1.5
(0.59)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
7.9
(3.11)
16.4
(6.46)
68.3
(26.89)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)5.36.08.16.38.39.38.28.56.96.07.57.688
சூரியஒளி நேரம்70.1101.6142.9197.5238.5237.9263.1251.6181.6132.366.751.81,935.5
ஆதாரம்: Central Institute for Meteorology and Geodynamics[25]

மதங்கள்

வியன்னாவில் ரோமானிய கத்தோலிக்கர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர். 2001 உலக மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 49.2 விழுக்காடு மக்கள் ரோமானிய கத்தோலிக்கர்களாகவும், 25.7 விழுக்காடு மககள் எம்மதத்தையும் சாராதவர்களாகவும், 7.8 விழுக்காடு மக்கள் இசுலாமிய இனத்தவராகவும், 0.5 விழுக்காடு மக்கள் யூத இனத்தவராகவும் எஞ்சியுள்ளோர் பிற இனத்தைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர்[26]. ரோமானிய கத்தோலிக்கை பின்பற்றுவோரின் சராசரி எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறைந்து வருகின்றது. 1961ம் ஆண்டில் 90 விழுக்காடு இருந்த மக்கள், 2010 ஆண்டில் 90 விழுக்காடு மக்களே உள்ளனர்[27].

நுண்கலை பயிற்சியகம்

கல்வி நிலையங்கள்

ஆஸ்திரிய நாட்டின் பிராதான கல்வியின் தலைநகரமாக இது விளங்குகின்றது.

உயர் பல்கலைக்கழகங்கள்

  • நுண்கலைப் பயிற்சியகம்
  • பட்டயப் பயிற்சியகம், வியன்னா
  • வியன்னா மருத்துவப் பல்கலைக்கழுகம்
  • பி.இ.எப். தனியார் நிர்வாகப் பல்கலைக்கழகம்
  • வியன்னா செயற்கலை பல்கலைக்கழகம்
  • வியன்னா செயற் அறிவியல் பல்கலைக்கழகம்
  • வியன் செயற் அறிவியல் பல்கலைக்கழகம்
  • இசை மற்றும் கலை பல்கலைக்கழகம், வியன்னா
  • கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வியன்னா
  • வியன்னா பல்கலைக்கழகம்
  • வியன்னா வணிகம் மற்றும் வர்த்தக பல்கலைக்கழகம்
  • இயற்கை வளங்கள் மற்றும் பயன்பாட்டு வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழகம், வியன்னா
  • வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • வலைதளப் பல்கலைக்கழகம், வியன்னா
  • சிக்முன்டு ப்ரியுது பல்கலைக்கழகம், வியன்னா
  • பன்னாட்டு ஊழல் தடுப்புப் பயிற்சியகம்

பன்னாட்டுக் கல்வி நிலையங்கள்

  • AMADEUS பன்னாட்டுப் பள்ளி, வியன்னா
  • அமெரிக்க பன்னாட்டுப் பள்ளி, வியன்னா
  • தானோபி பன்னாட்டுப் பள்ளி
  • பன்னாட்டுப் பல்கலைக்கழகம், வியன்னா
  • ஒலி பொறியியல் பள்ளி, வியன்னா
  • லாதர் வர்த்தகப் பள்ளி
  • லைசி பிரான்கா பள்ளி, வியன்னா
  • வியன்னா கிருத்துவப் பள்ளி
  • வியன்னா பல்கலைப் பள்ளி
  • விழி காட்டுப் பல்கலைக்கழகம்
  • பெரும்போக்கு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்

சுற்றுலாத்துறை

ஹாப்ஸ்பர்க் மற்றும் ஸ்கொன்ப்ருன் பேரரசு அரண்மனைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இங்கு 100 க்கும் மேற்பட்ட கலை அருங்காட்சியகங்கள் உள்ளன, இவை ஒன்றாக ஆண்டுக்கு எட்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.[28] பீத்தோவானின் உறைவிடங்கள், கல்லறை ஆகியவையும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். அக்கல்லறையே வியன்னாவிலுள்ள மிகப்பெரிய கல்லறை என்பதோடு, அக்கல்லரௌ உள்ள இடத்தைச் சூழ இதர பிரபலங்களின் கல்லறைகளும் உள்ளன. புனித ச்ரீபன் பெருங்கோவில் போன்ற தேவாலயங்களும் பல மக்களை ஈர்க்கும் இடங்களாக விளங்குகின்றன. ஹன்டர்ட்வசர்ஹவுஸ், ஐ.நா. தலைமையகம் மற்றும் டொனட்ருமிலிருந்து பார்க்கும் காட்சி ஆகியவை நவீன சுற்றுலா இடங்களில் அடங்கும்.

காட்சியகம்

சான்றுகள்

வியன்னா
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வியன்னா&oldid=3909227" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்