வினோ நோகராதலிங்கம்

சுப்பிரமணியம் நோகராதலிங்கம், அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் (பிறப்பு: சூன் 7, 1963) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

வினோ நோகராதலிங்கம்
Vino Noharathalingam
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
2004–2015
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
2000–2001
தொகுதிவன்னி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுப்பிரமணியம் நோகராதலிங்கம்

7 சூன் 1963 (1963-06-07) (அகவை 61)
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரசியலில்

டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வினோ நோகராதலிங்கம் அக்டோபர் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டை ஆரம்பித்தன.[3][4] டிசம்பர் 2001 தேர்தலில் இவர் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக போட்டியிட்டுத் தேர்வாகவில்லை.[5][6][7]

ஏப்ரல் 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[8] பின்னர் ஏப்ரல் 2010 தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9][10] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ததேகூ உறுப்பினர்களிடையே ஆறாவதாகத் தெரிவாகி, நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.[11][12][13]

நோகராதலிங்கம் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மீண்டும் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15][16]

தேர்தல் வரலாறு

வினோ நோகராதலிங்கத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிகூட்டணிவாக்குகள்முடிவு
2000 நாடாளுமன்றம்[2]வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்10,959தெரிவு
2001 நாடாளுமன்றம்வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதெரிவு செய்யப்படவில்லை
2004 நாடாளுமன்றம்[8]வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு28,252தெரிவு
2010 நாடாளுமன்றம்[17]வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு12,120தெரிவு
2015 நாடாளுமன்றம்[12]வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு17,721தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[18]வன்னி மாவட்டம்தமிழீழ விடுதலை இயக்கம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு15,180தெரிவு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வினோ_நோகராதலிங்கம்&oldid=3792580" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்