விசயன் (இலங்கை அரசன்)

இவன் ஒரு தமிழ் மன்னாராவான்

விஜயன் அல்லது விஜய என்பன் இலங்கையின் முதலாவது சிங்கள அரசன் என மகாவம்சம் கூறுகிறது. இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டவன் என்றும் இலங்கையை கி.மு. 445 தொடக்கம் கி.மு. 483 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.[2]

விசயன்
தம்பபன்னி
விசயனின் முடிசூட்டு விழா. (அஜந்தா குகை 17 இல்).[1]
ஆட்சிகி.மு. 543 – கி.மு. 505
முன்னிருந்தவர்குவேணி
பின்வந்தவர்உபதிஸ்ஸ
துணைவர்குவேனி, பாண்டிய இளவரசி
வாரிசு(கள்)ஜீவகத்தா
திசாலா
மரபுவிசய வம்சம்
தந்தைசிங்கபாகு
தாய்சிங்கசீவிலி
இறப்புதம்பபன்னி, இலங்கை

விசயனின் வருகை

  • மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த லாலா நாடு இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் ஆட்சி செய்த அவர் அன்னாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும், வன்முறைமிக்கவனாகவும் விசயன் இருந்தான்.
  • இதனால் மக்கள் அவனது தந்தையான சிங்கபாகுவிடம் முறையிட்டனர். தொடர்ந்தும் இவனது தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபப்பட்ட மக்கள் அவனை கொன்றுவிடும் படி முறையிட்டனர். இருப்பினும் தனது தந்தையின் கூற்றுக்கும் அடங்காததனால், கடைசியாக சிங்கபாகு விசயனையும் அவனது 700 நண்பர்களையும் பாதி மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி கடலில் விட்டனர். அவர்களது குழந்தைகளையும், மனைவிகளையும் கூட வெவ்வேறு கப்பலில் ஏற்றிக் கடலில் விட்டனர். விசயன் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்குகிறான். ஆயினும் அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். கடைசியாக (இன்றைய இலங்கையில்) தம்பபண்ணி எனும் இடத்தில் கரையொதுங்குகின்றனர்.[3]
  • பதினெட்டு வயதை அடைந்த போது, அவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் சேர்த்து வங்க தேசத்தில் லாலா எனும் நாட்டிலிருந்து அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. விஜயன், அங்கே இயக்கர் தலைவி குவேணியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள்.
  • ஆனால் பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக் கொண்டான்.

சான்றுகள்

குறிப்புகள்

  • Ahmad, Aijazuddin (2009). Geography of the South Asian Subcontinent:A Critical Approach. New Delhi: Concept Publishing Company.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்