வாழ்தகு வேளாண்மை

வாழ்தகு வேளாண்மை (subsistence agriculture) அல்லது பிழைப்புநிலை வேளாண்மை அல்லது தரிப்புநிலை வேளாண்மை என்பது உழவர்கள் தமக்கும் தம் குடும்பங்களுக்கும் மட்டும் போதுமான உணவுப் பயிரை மேற்கொள்ளும் வேளாண்மையாகும். இவ்வகை வேளாண்மையில் வாழ்க்கையைத் தரிக்கவைப்பதற்கு மட்டும் அதாவது களத்தேவைகளுக்கு மட்டுமே பயிரீடு நிகழ்கிறது. விற்பனைக்கு உபரி ஏதும் மிஞ்சாது. இம்முறையில் ஓராண்டில் குடும்பத்துக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் மட்டுமே பயிரீடும் கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்படும் . அடுத்த ஆண்டுக்கான தேவையளவுக்கே பயிர்நடவு மேற்கொள்ளப்படும். தோனி வாட்டர்சு[1] எழுதுகிறார்: " வழ்தகுநிலை உழவர்கள் பயிரிட்டு, உண்டு, உடுத்து வீடுகட்டி வாழும் மக்களாவர்; இவர்கள் சந்தைகளுக்க்குச் சென்று அடிக்கடி கொள்வினை செய்வதில்லை."

காமரூன் மலைச்சரிவில் தாரோ வயலில் பாக்வேரி உழவர் பணிபுரிதல் (2005).

வாழ்தகு வேளாண்மையில் தன்னிறைவே முதன்மையான நோக்கம் என்றாலும், வாழ்க்கைத் தேவை சார்ந்த பொருள்களுக்காக உழவர்கள் ஓரளவுக்கு வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். இவற்றில் சருக்கரை, கூரை இரும்பு தகடுகள், மிதிவண்டிகள், ஆடைவகைகள். ஆகியன அட ங்கும். இன்று வளரும் நாடுகளில் வாழும் பெரும்பாலான உழவர்களின் வணிகப் பரிமாற்றப் பணமதிப்பு, வளர்ந்த நாட்டுச் சந்தை உழவர்களைவிட குறைவாகவே இருந்தாலும், இவர்கள் தங்களது சந்தையில் தேவைப்படும் பொருள்வளங்களை வழங்கவல்ல சிறப்பு செய்திறனால் வணிகத் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.[2]

வாழ்தகு வேளாண்மை வகைகள்

எரிபுன வேளாண்மை

எரிபுன வேளாண்மை அல்லது பெயர்ச்சிநிலை வேளாண்மையில் குறிப்பிட்ட காட்டின் பகுதி மரங்களை, எரித்து அப்பகுதியில் வேளாண்மை செய்யப்படுகிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மண்வளம் குன்றும். அப்பகுதியைத் துறந்து காட்டின் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து முன்பு போலவே மரங்களை அகற்ரி எரித்து வேளாண்மை செய்ய புதிய நிலப்பகுதியை உருவாக்குவர். வேளாண்மை செய்வதற்கான இந்தச் செய்ல்முறை தொடர்ந்து நிகழும். துறந்த பகுதியில் தாவரத் தொடர்வால் காடு மீண்டும் வளர்ந்து மண் இழந்த வளத்தை மீட்கும். உயிர்த்திரட்சியும் மீட்கப்படும். அடுத்த பத்தாண்டுகட்குப் பிறகு உழவர்கள் இங்கு வேளாண்மையைத் தொடர மீண்டும் வரலாம். மக்கள்தொகை மிக அருகியுள்ள போதே இவ்வகை வாழ்தகு வேளாண்மையைப் பேணலாம்; ஆனால், மக்கள்தொகை அடர்த்தி பேரளவாக உள்ளபோது காடுகளை அடிக்கடி வெட்டுவதால், மண் வளம் மீள்வது அதே வேகத்தில் இயலாமற் போகிறது. இதனால் பேரளவான காட்டுப் பசுமைக்கவிப்பு அகற்ர வேண்டியதாகிறது. எனவே, காட்டுப் பகுதி மரங்கள் இல்லாத புதர்க்காடாகி, காடழிய நேர்வதால் மண் அரிப்பு கூடிவிடுகிறது.[3] Shifting cultivation is called Dredd in India, Ladang in Indonesia, Milpa in Central America and Mexico and Jhumming in North East India.

முதனிலை வேளாண்மை

புலம்பெயர் நாடோடி வேளாண்மை

கழிவு, எரியுர வேளாண்மை

செறிநிலை வாழ்தகு வேளாண்மை

வறுமை ஒழிப்பு

இந்த வாழ்தகு வேளாண்மையை வறுமையொழிப்பு ஆயுதமாகத் திட்டமிடப் பயன் கொள்ளலாம். குறிப்பாக, விலை உயர்வு அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல உணவுக்கான காப்புவலையாகவும் உணவுக் காப்புறுதி வழங்கவும் பயன்படுத்தலாம். உயர், நடுத்தர வருவாயுள்ள நாடுகளைப் போலல்லாமல், உள்நாட்டு விலையேற்றத்தினை மேலாண்மை செய்யவும் அதற்காக உதவி செய்யவும் போதுமான நிதிவளமும் நிறுவன ஏற்பாடுகளும் குறைந்த ஏழை நாடுகளில், இதைத் தவிர வேறு வழியில்லை.[4] குறைந்த வருவாயுள்ள நாடுகளில் அமையும் 80% அளவிலான மக்கள்தொகையினர். ஊரகப் பகுதிகளிலேயே உள்ளனர். ஊரகப் பகுதியில் உள்ள வீடுகள் 90% அளவுக்கு நிலத்தை அணுக வாய்ப்புள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ஊரக மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை.[4] எனவே, வாழ்தகு வேளாண்மையைப் பயன்படுத்தி, குறைந்த வருவாயுள்ள நாடுகளில் குறுகிய, இடைநிலை உணவு நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். அதன்வழியாக ஏழை மக்களுக்கான உணவுக் காப்புறுதியையும் வழங்கலாம்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாழ்தகு_வேளாண்மை&oldid=4040529" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்