வார் (பொறிமுறை)

பொறிமுறையில் வார் [ஆங்கிலத்தில் belt (mechanical)] என்பது, வளைந்து கொடுக்கும் தன்மையுடைய பொருளினால் செய்யப்பட்ட வளைய வடிவ சாதனமாகும். இயந்திர பாகமான வார், பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுழலும் தண்டுகளை பொறிமுறையில் இணைக்கிறது.

Yanmar 2GM20 எனப் பெயரிடப்பட்ட ஒரு கடல் சார் பொறியில் வார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வார்கள் பொதுவாக இயக்கத்தின் மூலங்களாகவோ, ஆற்றலை அதிகத் திறனுடன் மாற்றவோ அல்லது ஒப்பு-நகர்விற்காகவோ பயன்படுத்தப்படுகின்றன. இயக்கத்தின் மூலமாக செயல்படுதலுக்கு சுமந்து-செல்லி வாரை (conveyor belt) உதாரணமாகக் கூறலாம். இங்கு வாரானது இரு புள்ளிகளுக்கிடையே சுமைகளை தொடர்ச்சியாகக் கொண்டு செல்கிறது.

ஆற்றல் செலுத்துகை

தண்டுகளுக்கிடையே ஆற்றலை எடுத்துச் செல்ல எளிய, சிக்கனமான சாதனமாக வார்கள் கருதப்படுகின்றன. குறைவான ஓசையுடன் இலகுவாக ஓடுதல், வாரின் சிறப்பாகும். எனினும் பற்சக்கர மற்றும் சங்கிலி செலுத்துகைகளுடன் ஒப்பிடும்போது, வலு குறைந்த ஒன்றாக வார் இருக்கிறது.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வார்_(பொறிமுறை)&oldid=1629576" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்