வயலேத்தா இவனோவா
3860 பிளோவ்தீவ் | 8 ஆகத்து 1986 | [1]MPC |
4102 கெர்கானா | 15 அக்தோபர் 1988 | MPC |
4893 சீட்டர் | 9 ஆகத்து 1986 | [1]MPC |
5950 இலியூகிப்போசு | 9 ஆகத்து 1986 | [1]MPC |
7079 பாக்தாது | 5 செப்டம்பர் 1986 | [1]MPC |
9732 யுச்சினோவ்சுகி | 24 செப்டம்பர் 1984 | [2]MPC |
9936 அல்-பிரூனி | 8 ஆகத்து 1986 | [1]MPC |
11852 சவுமென் | 10 செப்டம்பர் 1988 | [2]MPC |
11856 நிக்கோலபொனேவ் | 11 செப்டம்பர் 1988 | [2]MPC |
12246 பிளிசுகா | 11 செப்டம்பர் 1988 | MPC |
13930 தாழ்சுகோ | 12 செப்டம்பர் 1988 | MPC |
13498 அல் சிவாரிழ்சுமி | 6 ஆகத்து 1986 | [1]MPC |
14342 இகுலிகா | 23 செப்டம்பர் 1984 | [1]MPC |
22283 பித்தியாசு | 6 ஆகத்து 1986 | [1]MPC |
|
வயலேத்தா இவனோவா (Violeta Ivanova) (Виолета Иванова) ஒரு பல்கேரிய வானியலாளர் ஆவார்.[2]
இவர் 1984 முதல் 19888 வரை 14 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் கூறுகிறது.[1] இவர்பல்கேரிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[3] இவர் தன் கண்டுபிடிப்புகளைச் சுமோலியான் வானகாணகத்தில் நிறைவேற்றினார். இது உரோடோப் மலைகளில் உள்ள உரோழன் மலையில் அமைந்தமையால் பிறகு 2002 முதல்உரோழன் வான்காணகம் என பெயர் மாற்றப்பட்டது. கொரொனியச் சிறுகோளாகிய 4365 இவனோவா இவரது நினைவாக 1991 ஆகத்து 25 இல் பெயரிடப்பட்டது (சி. கோ. சு 18645).[2][4]
இவர் சிலவேளைகளில் வயலேத்தா ஜி. இவனோவா எனக் கையெழுத்திடுகிறார். இவரை வி. வி. இவனோவாவோடு குழப்பிக் கொள்ளக்கூடாது (பின்னவர் வி. எஃப். இவனோவா எனக் கையெழுத்திடுகிறார்). பின்னவர் இப்போது உருசியாவில் உள்ள புனித பெத்ரோகோப்பில் அமைந்த புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தில் உள்ளார். முன்னர் இவர் மாஸ்கோவில் உள்ள Institut Geokhimii i Analiticheskoi Khimii (வெர்னத்சுகி புவிவேதியியல், பகுமுறை வேதியியல் நிறுவனத்தில் இருந்தார்.