வன்னி தேர்தல் மாவட்டம்

வன்னி தேர்தல் மாவட்டம் (Vanni Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.

வன்னி
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம்வடக்கு
நிருவாக
மாவட்டங்கள்
மன்னார்
முல்லைத்தீவு
வவுனியா
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள்236,449[1] (2010)
மக்கள்தொகை426,000[2] (2009)
பரப்பளவு6,580 சதுர கிமீ[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
6
உறுப்பினர்கள்

வன்னிப் பகுதி மிகவும் மக்கள்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாக இருப்பதனால், பரப்பளவில், வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 236,449 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1]. 2011 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 221,409 வாக்காளர்கள் பதிவாயினர். இதனால் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது[4].

உருவாக்கம்

இலங்கையில், 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னிருந்த தேர்தல் முறையின் கீழ் நாட்டிலிருந்த நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். 1978 இல் இம்முறை ஒழிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பல தேர்தல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவானவற்றில் ஒன்றே வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகும்.

பெரும்பாலும், ஒவ்வொரு நிர்வாக மாவட்டமும் ஒரு தேர்தல் மாவட்டமாகவும் அமைந்தது. ஆனால் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இம் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை மட்டுமே கொண்டிருந்தன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பல உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லாதிருந்ததால், அருகருகேயிருந்த இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னித் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தேர்தல் தொகுதிகள்

  1. முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
  2. மன்னார் தேர்தல் தொகுதி
  3. வவுனியா தேர்தல் தொகுதி

புள்ளி விபரங்கள்

பரப்பளவு

வன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையின் மொத்தப் பரப்பளவில் ---% ஆகும். மாவட்ட அடிப்படையில் இதன் பரப்பளவு:

பரப்பளவு - வன்னித் தேர்தல் மாவட்டம்
மாவட்டம்பரப்பளவு (ச.கிமீ)
மன்னார்2002.07
வவுனியா1966.90
முல்லைத்தீவு2616.90
மொத்தப் பரப்பளவு6585.87

மக்கள் தொகை

வன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையில் உள்ள மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்று. இங்கே முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது 1981 ஆம் ஆண்டில். இப்பகுதியில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, அதன் பின்னர் இப் பகுதியில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆனாலும், இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இப்பகுதிகளுக்கான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை - வன்னித் தேர்தல் மாவட்டம்
மாவட்டம்கணக்கெடுப்பு ஆண்டு
19812001
மன்னார்106,235151,577
வவுனியா95,428149,835
முல்லைத்தீவு77,189121,667
மொத்தம்278,852423,079

2003, 2004 ஆம் ஆண்டுகளின் மதிப்பீடுகளை அடிப்படியாகக் கொண்டு கணிக்கப்பட்ட இத்தேர்தல் மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம்:

தேர்தல் முடிவுகள்

2004 நாடாளுமன்றத் தேர்தல்

கட்சிவாக்குகள்விழுக்காடுஉறுப்பினர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி90,83564.71%5
ஐக்கிய தேசியக் கட்சி33,62123.95%1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி7,2595.17%0
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி6,3164.50%0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி5880.42%0

2010 நாடாளுமன்றத் தேர்தல்

கட்சிவாக்குகள்விழுக்காடுஉறுப்பினர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி41,67338.96%3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி37,52235.07%2
ஐக்கிய தேசியக் கட்சி12,78311.95%1
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி5,9005.52%0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி2,8672.68%0

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்