வட்டார இணைப்புத் திட்டம் - உடான்

பரவலான வான்பயணம்

வட்டார இணைப்புத் திட்டம் (Regional Connectivity Scheme) அல்லது உதான் (UDAN - Ude Desh ka Aam Naagrik, UDAN-RCS இந்திய அரசின் வட்டார வானூர்தி நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமானத் திட்டமாகும். இதன் நோக்கமாக "நாட்டின் பொதுக் குடிமகன் பறந்திடுக" எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது; இதன்மூலம் வான்பயணம் பரவலாகவும் அனைவருக்கும் தாங்கத் தக்கதாகவும் இருக்கும். தவிரவும் தேசியப் பொருளியல் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்கும் இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் மாநிலங்களிலும் வான் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படவும் வழிகோலும்.[1][3] இந்தத் திட்டத்தின் துவக்கத்தின்போது 486 வானூர்தி நிலையங்களில், 406 பயன்படுத்தப்படாத நிலையங்களாக இருந்தன.[4] இந்தியாவிலுள்ள பயன்படுத்தப்படாத அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்படாத 425 வானூர்தி நிலையங்களில் வட்டார வானூர்தி நிலையங்களை மேம்படுத்தியும் இயக்கத்திற்கு கொணர்ந்தும் இத்திட்டம் வான்பயணத்தை ஊக்குவிக்கும்.[5]

"உடே தேஷ் கா ஆம் நாகரிக் (உதான்)"
வட்டார இணைப்புத் திட்டம் (UDAN-RCS)
இந்திய வானூர்தி நிலையங்களும் துறைமுகங்களும் (நிறைவுறாப் பட்டியல்)
Mottoஉடே தேஷ் கா ஆம் நாகரிக்
(நாட்டின் பொதுக் குடிமகன் பறந்திடுக.)
திட்ட வகைஅரசின் வட்டார வானூர்தி நிலையங்களையும் வான்வழித்தடங்களையும் மேம்படுத்தும் திட்டம் - உச்சம்கட்டுப்படுத்திய பயணக்கட்டணங்களும் இலாபமற்ற வழித்தடங்களுக்கு அரசு மானியமும்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
Ministryஇந்தியக் குடிசார் வான்பயண அமைச்சகம்[1]
Key peopleஅசோக் கஜபதி ராஜு
துவங்கியது27 ஏப்ரல் 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-04-27)
தில்லி
Budget45,000 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு 47 billion, US$590 மில்லியன் அல்லது €580 மில்லியன்) முதல் 50 வட்டார வானூர்தி நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு. [2]
முதன்மை வழித்தடங்களில் இத்திட்டத்திற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் INR5000 (இருக்கை ஒன்றுக்கு INR30) வசூலிக்கப்படும்
இணையத்தளம்www.aai.aero
இந்தியாவின் வானூர்தி நிலையங்களும் துறைமுகங்களும்
மிகச் செயல்பாடுள்ள இந்திய வானூர்தி நிலையங்கள் (2015-16).

திட்டம்

இந்தத் திட்டம் இரு அங்கங்களை உடையது. முதல் அங்கமாக ஏற்கெனவே உள்ள வட்டார வானூர்தி நிலையங்களை மேம்படுத்துவதும் புதிய நிலையங்களை அமைப்பதுமாகும். குடிசார் பறப்புகளை இயக்க ஏற்கெனவே இருந்த 70இலிருந்து (மே 2016இல் மொத்தமாக, படைத்துறை வானூர்தி நிலையங்கள் உட்பட, 98 இயக்கத்திலிருந்தன [6]) குறைந்தது 150ஆக (திசம்பர் 2018 இலக்கு) உயர்த்துவது இதன் இலக்காகும்.[2][7][8] துவக்கத்தில் 100க்கும் கூடுதலான முழுமையாக பயன்படுத்தாத (வாரத்திற்கு 7 பட்டியலிட்ட பறப்புகளுக்கு குறையாத) மற்றும் பயன்படுத்தாத வட்டார வானூர்தி நிலையங்களை திசம்பர் 2018க்குள் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு அதன் பகுதியாக 50 வட்டார வானூர்தி நிலையங்கள் அமைக்க 45,000 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு 47 billion, US$590 மில்லியன் அல்லது €580 மில்லியன்) நிதியம் முதலீடு மே 2017இல் அங்கீகரிக்கப்பட்டது .[2][7][8] முதல் சுற்றில் எடுக்கப்பட்ட 70 வானூர்தி நிலையங்களில் 43 புதிய நிலையங்களாகும். இதில் 13 நிலையங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன. மேலும் 12 நிலையங்கள் தயாராகி உள்ளன. 18 குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை எதிர்நோக்கியுள்ளன. (நவம்பர் 2017 நிலவரம்)[8]

இரண்டாவது அங்கத்தில் பயணக்கட்டணத்தின் உச்சநிலை கட்டுபடுத்தப்பட்ட, நிதிசார் செயல்படுத்தத்தகு பல புதிய வட்டார பறப்புத் தடங்களை கட்டமைத்து முதல் அங்கத்தில் தயாரான 100 சிறு நகரங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதும் பெரும் நகரங்களுடன் பிணைப்பு ஏற்படுத்துவதுமாகும். தேவையான தடங்களில் செயல்படுத்தத்தகு பற்றாக்குறை நிதியம் (VGF) பயன்படுத்தப்படும். [8][9][10] செயல்படுத்தத்தகு பற்றாக்குறை நிதியத்தின் நடுவண் அரசு பங்காக வழங்க பரவலான வழித்தடங்களில் பறக்கும் வான்சேவைகளுக்கு மேல்வரி வசூலிப்பதாகும். தொடர்புள்ள மாநில அரசுகளும் வான்சேவையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவிருக்கின்றன.[7]

செயலாக்கம்

உதான் முதல் சுற்று ஏப்ரல் 2017இல் 5 வான்சேவை நிறுவனங்களுக்கு 70 வானூர்தி நிலையங்களை இணைக்க 128 பறப்புத் தடங்கள் வழங்கப்பட்டன; இதன்மூலம் மொத்தமாக இயக்கத்தில் உள்ள குடிசார்வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.[6]இதில் பல தடங்கள் நவம்பர் 2017இலும் மற்றவை திசம்பர் 2017இலும் செயற்பாட்டிற்கு வந்தன.[7][8] உதான்-இரண்டாம் சுற்றுக்கு 2017 திசம்பர் இறுதியில் புதிய வழித்தடங்கள் வழங்கப்பட உள்ளன; 17 நிறுவனங்களிடமிருந்து 502 புதிய வழித்தடங்களுக்கான 141 முன்மொழிவுகள் வந்துள்ளன.[7][8]

திசம்பர் 2017இல் வானூர்திகளின் எண்ணிக்கை 395இலிருந்து 38% உயர்ந்து 548 ஆக உள்ளது. ஆண்டுக்கு புதியதாக 50 வானூர்திகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. [11] அடுத்தடுத்த கட்டங்களில் கடல்சார் வானூர்திகளும் சேர்க்கப்படும்.[12][13] ஸ்பைஸ் ஜெட் 12 இருக்கைகள் கொண்ட நிலம் நீரில் செல்லக்கூடிய 100 கடல்வானூர்திகளை வாங்க US$400 மில்லியன் பெறுமதிப்புள்ள வேட்டலாணை விடுத்துள்ளது (திசம்பர் 2017).[12][13][12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்