வடிநிலம்

வடிநிலம் (Drainage basin) என்பது, மழை அல்லது உருகும் பனி போன்றவற்றை ஏந்தி, ஆறு, ஏரி, கடல், ஈரநிலங்கள் போன்ற நீர்த்தேக்கங்களுள் வடிந்தோடச் செய்வதற்கான நிலப்பகுதி ஆகும். வடிநிலம் என்பது, நீரைக் காவிச்சென்று மேற்படி நீர்த்தேக்கங்களுக்குள் செலுத்தும் சிற்றாறுகள், ஆறுகள் போன்றவற்றையும், இத்தகைய நீர் வழிகளுக்குள் நீரை வடியவிடும் நிலப் பகுதிகளையும் ஒருங்கே குறிக்கிறது. நீரேந்து பகுதி என்பதுவும் இதே கருத்துருவை விளக்கும் சொல்லே.

வடிநிலம். புள்ளிக் கோடு நீரேந்து பிரதேசத்திலிருந்து நீர் வடியும் பாதையை, நீரேந்து பகுதிகளுக்கு இடையிலான பிரி கோட்டைக் குறிக்கின்றது.

நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவைப் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும். வழமையாக நீரேந்து பிரதேசத்தின் வெளிச்செல்லும் பாதை ஆறு, ஏரி, ஓடை, கடல், பெருங்கடல் மற்றும் ஈர நிலம் போன்றவையாகக் காணப்படும். மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்களில், ஒன்றுசேரும் நீர் நீரேந்து பிரதேசத்தினுள்ளேயே ஒரு தனிவடிச்சலாக காணப்படும். இது நிலையான ஏரியாக அல்லது உலர் ஏரியாகவோ அல்லது தேங்கி நிலங்கீழ் நீராக வடியும்.[1]

உலகின் முதன்மையான நீரேந்து பிரதேசங்கள்

வரைபடம்

Major continental divides, showing drainage into the major oceans and seas of the world.
உலகின் முதன்மையான கடல்கள், பெருங்கடல்களின் நீரேந்து பிரதேசங்கள். சாம்பல் நிறப் பகுதிகள் மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்கள் ஆகும். இவை பெருங்கடல்களில் சென்று கலப்பதில்லை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வடிநிலம்&oldid=3338292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்