லீலா சிட்னீஸ்

லீலா சிட்னீஸ் (Leela Chitnis) (9 செப்டம்பர் 1912 - 14 ஜூலை 2003) இந்திய திரைப்பட துறையில் நடிகையாக, 1930 களில் இருந்து 1980 கள் வரை செயல்பட்டார். திருமணத்திற்கு முன் அவரது பெயர் லீலா நாகர்கார் என்பதாகும். (Leela Nagarkar). ஆரம்பகாலங்களில் காதல் படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னாட்களில் முன்னணி நடிகர்களுக்கு நேர்மையும் அறமும் உடைய தாயாக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.[1]

லீலா சிட்னீஸ்
பிறப்பு(1912-09-09)9 செப்டம்பர் 1912
தார்வாடு, மும்பை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 சூலை 2003(2003-07-14) (அகவை 93)
கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநாடக மற்றும் திரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1930கள்-1980கள்[1]

ஆரம்ப வாழ்க்கை

கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடில், மராத்தி மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்தார். அக்காலத்தில் படித்த கதாநாயகிகளில் இவரும் ஒருவர். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு அவர் நாட்டியமன்வன்தார் என்ற மராட்டிய நாட்டியக் குழுவில் சேர்ந்தார். இப்சென் , ஷா மற்றும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஆகியோரின் பாதிப்புடைய கதைகளை இந்நாடகக்குழு அரங்கேற்றி வந்தனர். இக்குழுவில் பல நகைச்சுவை மற்றும் சோக நாடகங்களில் தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்துவந்தார்.[2]

தொழில் வாழ்க்கை

பாம்பே டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திற்காகப் பல கதைகளில் கதா நாயகியாக நடித்துள்ளார். இந்நிறுவனம் சமுதாய மறுமலர்ச்சி தொடர்பாக பல படங்களைத் தயாரித்து வந்தது. இப்படங்கள் யாவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. கங்கன் (1939) திரைப்படத்தில் லீலா நடித்து பாம்பே டாக்கீஸ் தயாரித்து வெளியான படம் பெரும் வெற்றிபெற்றது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

சிட்னி பிராமண சாதியைச் சேர்ந்தவர்.[4] எனினும், அவரது தந்தை பிரம்ம சமாஜ கொள்கையான, சாதி மறுப்பு மத இயக்கத்தை ஏற்றுக்கொண்டார். லீலா 2003 இல் அமெரிக்காவில் மரணமடைந்தார்.[5]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லீலா_சிட்னீஸ்&oldid=3886744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்