லவ் சேனல்

2001 தமிழ் திரைப்படம்

லவ் சேனல் (Love Channel) என்பது 2001 ஆம் ஆண்டய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஆர். என். குமரேசன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஈஸ்வர் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வி. எஸ். ராகவன், ராஜீவ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ஆனந்த், தாமு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். குருமூர்த்தி மற்றும் கே. சபரிகிரி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, தேவா இசை இசை அமைத்துள்ளார். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் 22 சூன் 2001 அன்று வெளியானது.[1][2][3][4]

லவ் சேனல்
இயக்கம்ஆர். என். குமரேசன்
தயாரிப்புஆர். குருமூர்த்தி
கே. சபரிகிரி
கதைஆர். என். குமரேசன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்அக்சயா மூவிஸ்
வெளியீடுசூன் 22, 2001 (2001-06-22)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

காவல் ஆணையர் ஆறுமுகம் (வி. எஸ். ராகவன்) பல ஆண்டு கடின உழைப்புக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். இவருக்கு ராஜீவ் ( ராஜீவ் ), ரவி (ஈஸ்வர்) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜீவ் பரிமளத்தை ( சாதனா ) திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு விடலைப் பருவ மகள் உண்டு. ரவி எம்பிஏ பட்டதாரி, அவருக்கு திருமணத்தில் விரும்பமில்லை. இருந்தாலும் ரவியின் குடும்பத்தினர் ரவிக்கு ஏற்ற மணப்பெண்ணைக் தேடிப் பிடிக்கிறார்கள். ராஜேஸ்வரி ( மோனிகா ) அவனுக்கு பார்த்த வருங்கால மணைவி ஆவாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. பின்னர், ரவி ஜெர்மனியில் வேலை பெற்று இந்தியாவை விட்டு சென்றுவிடுகிறான். நிச்சயதார்த்த விழாவின் போது, இரு குடும்பங்களுக்கிடையில் சண்டை வெடித்து நிச்சயதார்த்தம் நிறுத்தப்படுகிறது. இந்த சம்பவத்தை மறக்க, ராஜேஸ்வரியின் தாத்தா ராஜேஸ்வரியை ஜெர்மனிக்கு அழைத்து வருகிறார். ஜெர்மனியில், ரவியும், ராஜேஸ்வரியும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். அடுத்தது கதையில் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதையாகும்.

தயாரிப்பு

இப்படம் பிரான்சில் படமாக்கப்பட்டது, முன்னணி நடிகரான ஈஸ்வர், ஒரு வெளிநாட்டு இந்தியர், படப்பிடிப்புக்கு வேண்டிய வசதிகளை செய்துக் கொடுதார்.[5][6] ஈஸ்வரின் தந்தை தமிழ் படங்களில் நடிகராக இருந்தவர். மேலும் பாரிஸ் பயணத்தின் போது தயாரிப்பாளரான குருமூர்த்தி மற்றும் இயக்குனர் ஆர். என். முருகேசன் ஆகியோருடன் திரைக்கதை பற்றி விவாதித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ஈஸ்வர் சென்னைக்குச் சென்று மேலும் படவாய்ப்புகளைப் பெற முயன்றார், ஆனால் அதில் தோல்வியடைந்தார்.[7]

நடிகர்கள்

பாடல்

படத்திற்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 2001 ஆம் ஆண்டில் படத்தின் ஆறு பாடல்கள் வெளியாயின. பாடல் வரிகளை பழனி பாரதி, பா. விஜய், கலைகுமார் ஆகியோரால் எழுதப்பட்டன.[8][9]

டெண்பாடல்பாடகர் (கள்)பாடல் வரிகள்காலம்
1"தேசிங்கு ராஜா"நித்யஸ்ரீ மகாதேவன்பா. விஜய்5:55
2"எங்கே எனது வெண்ணிலா"உண்ணிமேனன், சுஜாதா மோகன்கலைகுமார்6:08
3"ஓடாத ஓடாத"தேவா, கங்கா, நவீன்பழனி பாரதி6:48
4"செர்ரி செர்ரி"யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம்பா. விஜய்5:36
5"சுடிதார் சூடி வந்த"மனோ5:56
6"அல்ட்ரா மாடர்ன்"சங்கர் மகாதேவன்பழனி பாரதி6:32

வெளியீடு

இப்படம் வெளியானதைத் தொடர்ந்து, பாரதி கணேஷ் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஈஸ்வர் கையெழுத்திட்டார். இவர் முன்னதாக கண்ணுபடப் போகுதையா (1999) படத்தை தயாரித்தார். வேலாயுதம், என்ற பெயரிலான படத்தில் மம்மூட்டி மற்றும் பிரதியூசா ஆகியோருடன் இணைந்து ஈஸ்வர் நடித்தார் ஆனால் பின்னர் நிறுத்தப்பட்டது.[10]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லவ்_சேனல்&oldid=3941535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்