ரிச்சர்ட் பர்டன்

ரிச்சர்ட் பர்டன் (இயற்பெயர்: ரிச்சர்ட் வால்டர் ஜென்கின்ஸ் ஜூனியர் (Richard Burton 10 நவம்பர் 1925  – 5 ஆகஸ்ட் 1984) வேல்சு நகரைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார். [1] அவர் 1964 இல் ஆம்லெட்டில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.

ரிச்சர்ட் பர்டன்
Richard Burton
Photo of Richard Burton in The Robe, 1953
ரோப் திரைப்படத்தில் பர்டன் (1953)
பிறப்புரிச்சர்டு வால்டர் யென்கின்சு சூனியர்.
(1925-11-10)10 நவம்பர் 1925
கிளாமோர்கன், போன்ட்ரிடிஃபென், வேல்சு
இறப்பு5 ஆகத்து 1984(1984-08-05) (அகவை 58)
சுவிட்சர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1943–1984
வாழ்க்கைத்
துணை
சிபில் வில்லியம்சு
எலிசபெத் டெய்லர்
சூசி மில்லர்
சாலி பர்டன்

பர்டன் ஏழு முறை அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்கார் விருதை வென்றதில்லை. அவர் சிறந்த நடிகருக்கான பாஃப்டாக்கள், கோல்டன் குளோப்சு மற்றும் டோனி விருதுகளைப் பெற்றுள்ளார். 1960 ஆம் ஆண்டில் இவர் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றன. [2] 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பர்டன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். தனது திரைப்படங்களின் வருமானத்தில் 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை இவர் சம்பளமாகப் பெற்றார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை

குழந்தைப்பருவம்

வால்டர் ஜென்கின்சு ஜூனியர் எனும் இயர்பெயர் கொண்ட பர்டன் ரிச்சர்ட் 10 நவம்பர் 1925 அன்று வேல்ஸின் கிளாமோர்கன், போன்ட்ரிடிஃபென் நகரில் பிறந்தார். [4] [5] ரிச்சர்ட் வால்டர் ஜென்கின்ஸ் சீனியர் (1876-1957), மற்றும் எடித் மட் ஜென்கின்ஸ் (நீ தாமஸ்; 1883-1927) ஆகியோருக்கு பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பன்னிரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை சுரங்கத் தொழிலாளியாவார். இவரது தாயார் மது விடுதியில் உணவு பரிமாறுபவராகப் பணி புரிந்தார்.[4] அவர் தனது தாயை மிகவும் வலிமையான பெண் என்றும் "அழகிய கூந்தலும் அழகிய முகமும் கொண்டவர் எனவும் மதத்தில் ஆர்வம் கொண்டவர் என்றும் நினைவு கூர்ந்தார்.[6]

குடும்பத்தின் பதின்மூன்றாவது குழந்தையான கிரஹாம் பிறந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 31 அன்று அவரது தாயார் இறந்தார். அப்போது ரிச்சர்டுக்கு இரண்டு வயது ஆகும். [5] பிரசவத்திற்குப் பிறகான தொற்றுநோய்களின் விளைவாக இவரின் தாய் மரணமடைந்தார். ஆனால் ரிச்சர்ட் சுகாதார புறக்கணிப்பு காரணமாக தனது தாய் மரணமடைந்ததாக நினைத்தார். [4] இதனைப் பற்றி வாழ்க்கை வரலாற்றாசிரியர் மைக்கேல் முன்னின் எடித் சுகாதாரக் குறைவினால் இறக்கவில்லை. மாறாக நிலக்கரி சுரங்கத்தின் மாசினால் தான் அவர் இறந்தார் எனக் கூறினார். [7] எடித்தின் மரணத்தைத் தொடர்ந்து, ரிச்சர்டின் மூத்த சகோதரி சிசிலியா மற்றும் சுரங்கத் தொழிலாளியான அவரது கணவர் எல்ஃபெட் ஜேம்ஸ் ஆகியோர் இவரைக் கவனித்துக் கொண்டனர்.

தனிப்பட்ட வாழ்க்கை

பர்டன் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். இவர் டெய்லருடன் தொடர்ச்சியாக இரண்டு முறை திருமணம் செய்தார். [8] 1949 ஆம் ஆண்டு இவர் சிபில் வில்லியம்ஸை மணந்தார்,. இந்தத் தம்பதி 1963 வரை இணைந்திருந்தது. இந்தத் தம்பதிக்கு கேட் (பிறப்பு 1957) மற்றும் ஜெசிகா பர்டன் (பிறப்பு 1959) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். [4] டெய்லருடன் மார்ச் 15, 1964 முதல் ஜூன் 26, 1974 வரை மற்றும் 10 அக்டோபர் 1975 முதல் 1976 ஜூலை 29 வரை இணைந்து வாழ்ந்தார். அவர்களது முதல் திருமணம் மாண்ட்ரீலில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் திண்ணையில் நடைபெற்றது. [9]

சுகாதார பிரச்சினைகள்

பர்டன் ஒரு குடிகாரராக இருந்ததாகவும்,அவர் 1974 ஆம் ஆண்டில் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ராபர்ட் செல்லரின் கூற்றுப்படி, "1970 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பாட்டில்கள் இவர் மது அருந்தினார் [10]

சான்றுகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரிச்சர்ட்_பர்டன்&oldid=2904923" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்