ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட் என்கிற பெயரால் என்ஃபீல்ட் சைக்கிள் நிறுவனம் மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், புல் அறு பொறி மற்றும் நிலையான இயந்திரங்களை தயாரித்து வந்தது.

என்ஃபீல்ட் சைக்கிள் கோ. லிமிட்.
பிந்தியதுராயல் என்ஃபீல்ட் (இந்தியா)
நிறுவுகைஎன்ஃபீல்ட் மேனுபாக்சரிங் கோ. லிமிட். - ஆக 1893-ல் நிறுவப்பட்டது
செயலற்றது1971
தலைமையகம்ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர், இங்கிலாந்து
முதன்மை நபர்கள்நிறுவனர் ஆல்பர்ட் இயேடி மற்றும் and இராபர்ட் வாக்கர் ஸ்மித்
தொழில்துறைமோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், புல் அறு பொறி
உற்பத்திகள்ராயல் என்ஃபீல்ட் கிளிப்பர், குருசடர், ராயல் என்ஃபீல்ட் புல்லட், இன்டர்செப்டர், ராயல் என்ஃபீல்ட் WD/RE, ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியோர்

என்ஃபீல்ட் இந்தியா (1949 முதல்)

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இந்தியாவில் விற்கப்படுகின்றன. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்கியது. [1] 1955-ஆம் ஆண்டு, ரெட்டிட்ச் நிறுவனம் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் மோட்டார்சுடன் இணைந்து என்ஃபீல்ட் இந்தியாவை உருவாக்கி, உரிமம் பெற்று ராயல் என்ஃபீல்ட் 350சிசி ரக புல்லட் மோட்டார் சைக்கிள்களை சென்னையில் பொருத்தி வந்தது. இந்திய சட்டத்தின் கீழ், சென்னை மோட்டார்ஸ் நிறுவனம் பெரும்பாலான பங்குகளை (50% மேல்) சொந்தமாக்கியது. 1957 ஆம் ஆண்டு கருவியமைப்பிற்காக உபகரணங்கள் என்ஃபீல்ட் இந்தியா நிறுவனத்திற்கு பாகங்களை தயாரிப்பதற்காக விற்கப்பட்டது. என்ஃபீல்ட் இந்தியா, இந்தியாவில் தயாரித்து விற்றுவந்தது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். [2][3] 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியது.[4] மூன்றாவது தொழிற்சாலையை சென்னை அருகில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் நிறுவியுள்ளது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Royal Enfield motorcycles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ராயல்_என்ஃபீல்ட்&oldid=3226857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்