ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம்

ஹரியானா, இந்தியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம்

ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் (Rakhigarhi Indus Valley Civilisation Museum), இந்தியாவில் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ராகிகரி கிராமத்தில் ஒரு ஆய்வு மையம் மற்றும் ஆய்வாளர்களுக்கான விடுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகம் ஆகும் . [1] [2]

ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம்
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் is located in அரியானா
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம்
Location within அரியானா
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் is located in இந்தியா
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம்
ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் (இந்தியா)
அமைவிடம்ராகி கர்கி, ஹிசார் மாவட்டம், அரியானா, இந்தியா
ஆள்கூற்று29°10′19″N 76°03′53″E / 29.1719°N 76.0647°E / 29.1719; 76.0647
வகைஅருங்காட்சியகம்
பொது போக்குவரத்து அணுகல்ராகி கர்கி பேருந்து நிறுத்தம், ஹிசார் விமான நிலையம், ஹிசார் ஜங்சன் ரயில்வே ஸ்டேஷன்

வரலாறு

ராசிகா ஆய்வு மற்றும் வடிவமைப்பு, இன்டாக், கலை மற்றும் தொல்பொருள் மையம், அன்சால் பல்கலைக்கழகத்தின் சுஷாந்த் கலை மற்றும் கட்டடக்கலைப் பள்ளி மற்றும் டெக்கான் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டு நடத்திய கூட்டு வட்ட மேசை மாநாட்டின்படி மொத்தம் 550 எக்டேர்கள் (1,400 ஏக்கர்கள்; 5.5 km2; 2.1 sq mi) நிலப்பரப்பினைக் கொண்ட இடம் ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பதற்காக ஒரு தொல்பொருள் தளத்தை அமைக்க முடிவு செய்தது. ராகி கர்கி இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய பேச்சாளரான ரசிகா ஆய்வு மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குனர் சுர்பி குப்தா "எகிப்துக்கு கிசா போலவும், கிரேக்கத்திற்கு ஏதென்ஸ் போலவும் இந்தியாவுக்கு ஹரியானா அமைய வேண்டும்" என்று மாநாட்டில் அறிவித்தார் . [3]

ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் நிலப்பரப்பான550 எக்டேர்கள் (1,400 ஏக்கர்கள்; 5.5 km2; 2.1 sq mi) கொண்ட இடம் சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டுக்காக உலகிலேயே அதிகமான இடப்பரப்பினைக் கொண்டு அமைந்த தளமாகும். இந்த இடமானது மற்றொரு மிகப்பெரிய தளமான மொகெசதாரோவை விட இரு மடங்கு பெரியது என்று டக்கன் கல்லூரியின் துணைவேந்தர் மற்றும் ராகி கர்கி அகழ்வாராய்வின் பொறுப்பாளரான பேராசிரியர் டாக்டர் வசந்த் ஷிண்டே வலியுறுத்திக் கூறினார். அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட 6,000 ஆண்டுகள் பழமையான ஹரப்பன் சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டுத் தளம் மற்றும் 5,000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது : "இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் அடிப்படையில் அமைந்த தகவல்கள், ராகி கர்கி என்ற பெருநகரமானது, அக் காலகட்டத்தில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்பதை உணர்த்தும் நிலையில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின் எலும்புக்கூடுகளிலிருந்து டி.என்.ஏவை பிரித்தெடுப்பதில் அறிவியலாளர்கள் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகரத்தில் பொருள்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான அதிக எண்ணிக்கையிலான சான்றுகளை நாங்கள் சேகரித்துள்ளோம். இது அங்கு நிலவியிருந்த பொருளாதார அமைப்பு மற்றும் அங்கிருந்த மக்கள் வெளிநாடுகளோடு கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்தியது. அவர்கள் ராஜஸ்தான், குஜராத், பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுடன் வர்த்தக தொடர்பினைக் கொண்டிருந்தனர். கிமு 3,300 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆரம்ப கால ஹரப்பன் காலம் தொடங்கி கிமு 2000 ஆம் ஆண்டு வரை இந்த நகரம் செழிப்பான நிலையில் வளர்ந்து இருந்தது.” [4] 6,000 ஆண்டுகள் பழமையானது என்பதையும், ஹரப்பா நாகரிகத்தை விட 3,500 ஆண்டுகள் பழமையானது என்பதையும் உறுதி செய்யும் நோக்கத்தில் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவை இணைந்து 2011-16 ஆம் ஆண்டுகளில் ராகி கர்கி பகுதியில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாக அரியானா மாநிலத் தொல்பொருள் துறையும், இந்தியத் தொல்லியல் துறையும், தேசிய அருங்காட்சியகமும் இணைந்து மே 2017 இல் தொடங்கி மேற்கொண்ட கூட்டு ஆய்வின்போது அவை கி.மு. 7,570 ஆம் ஆண்டிற்கும் கி.மு.6,200 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்கு மிகவும் குறைந்த காலத்தைக் கொண்டவை என்று அறியப்பட்டன. [5] உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நாகரிகம் என்று நாசா மற்றும் இஸ்ரோ ஒரு கூட்டு இன்-ஸ்டு தள ஆய்வை மேற்கொள்ளும், [6] [7] குணால் என்னுமிடத்தில் உள்ள சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு ஆய்வுத்தளம் ஆரம்பத்தில் ராகி கர்கியை விட 1,000 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டது. [8] [9]

முந்தைய அகழ்வாய்வுகள்

1969 ஆம் ஆண்டில், குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகளின் முதல்வரான டாக்டர் சூரஜ் பன் என்பவரால் இந்த தளம் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக 1997-98, 1998-99 மற்றும் 1999-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) முன்னாள் இயக்குனர் டாக்டர் அம்ரேந்தர் நாத் அவர்களால் முதல் முறையாக அகழாய்வு செய்யப்பட்டது. பின்னர் அவரது இந்த கண்டுபிடிப்புகள் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரை வடிவில் வெளியாயின. அவர் 1990 களில் ராகி கர்கி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டபோது தொகை பெறுவதில் சில மோசடிகள் செய்ததாக குற்றம் சாற்றப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அவருக்கு மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. [10] 2011-16 ஆம் ஆண்டு முதல், டெக்கான் கல்லூரியின் டாக்டர் வசந்த் ஷிண்டே தலைமையிலான குழு பல அகழாய்வுகளை மேற்கொண்டது. அக்குழுவினரின் கண்டுபிடிப்புகள் ஆய்வுக் கட்டுரைகளாக ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டன.[11]

அருங்காட்சியகம் நிறுவுதல்

திறந்தவெளி அருங்காட்சியக தளத்தில் 10,000 மக்கள் வசிக்கின்ற அளவில் கிராமம் உள்ளது, அங்கு 6 ஏக்கர்கள் (2.4 ha) உட்புற அருங்காட்சியகம், விளக்க மையம், ஆய்வு மையம் மற்றும் ஆய்வாளர்களுக்கான விடுதி ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன (சூன் 29, 2024 ). [2] [3] 2013-14 ஆம் நிதியாண்டில், ராகி கர்கி கிராம பஞ்சாயத்து 6 ஏக்கர்கள் (2.4 ha) நிலத்தை அரியானா மாநில தொல்பொருள் துறைக்கு நன்கொடையாக அளித்தது. அரியானா அரசாங்கம் 25 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தது. இத்தொகையானது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தளத்தின் பொது மேம்பாடு என்ற நிலையில் ராகி கர்கி சிந்து பள்ளத்தாக்குப் பண்பாட்டு அருங்காட்சியகம் மற்றும் விளக்க மையம் அமைப்பதற்கு உதவும் வகையில் அமையும். நிதி பயன்பாட்டில் ஒழுங்கீனம் காரணமாக சிபிஐ விசாரணையினைத் தொடர்ந்து இத்திட்டமானது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. [12] 2015-16 ஆம் ஆண்டின் நிதி நிதிநிலை அறிக்கையின்படி, அரியானா அரசாங்கம் ஆரம்ப அளவு ஒதுக்கீடாக மையத்தை நிர்மாணிப்பதற்காக 50 மில்லியன் ஒதுக்கியது.[13] [14] [15] அரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான கல்வெட்டினை 2 மார்ச் 2016 ஆம் நாளன்று திறந்து வைத்தார். [16] 2016-2017 ஆம் நிதி ஆண்டில், அரியானா அரசாங்கம் தளத்திற்கான திட்டத்தினை இறுதி செய்த பிறகு கட்டுமானப் பணி விறுவிறுப்படைந்தது. தொடர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. அடுத்து தொடர்ந்து 230 மில்லியன் நல்கைத் தொகை மே 2016இல் வழங்கப்பட்டது.[17] ஜனவரி 2017 இல் கட்டுமானத்திற்கான பொது டெண்டர் கோரப்பட்டது. [18] 21 ஜூலை 2017 நிலவரப்படி, ஏற்கனவே கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. [19]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்