யாஸ் பண்பாடு

யாஸ் பண்பாடு (Yaz culture) [1]) நடு ஆசியாவின் பண்டைய பிரதேசங்களான மார்கியானா, பாக்திரியா மற்றும் சோக்தியானாவில் துவக்க இரும்புக் காலத்தில் கிமு 1500 முதல் கிமு 500 முடிய விளங்கிய இந்தோ-ஈரானியப் பண்பாடாகும்.[2][3][4][5][6][7][8] பிந்தைய செப்புக் காலத்தில் பாக்திரியா-மார்க்கியானா தொல்லியல் வளாகம் சிறப்புடன் விளங்கியது. யாஸ் பண்பாட்டுக் காலத்தில் கற்கோபுரங்கள், வடிகால் வசதி கொண்ட குடியிருப்புகள், மட்பாண்டத் தயாரிப்பு சக்கரங்கள், பீங்கான் பாத்திரங்கள் கொண்டிருந்தது.

இந்தோ-ஈரானியர்கள் புலப்பெயர்வு தொடர்பான அன்ட்ரோனோவோ பண்பாடு, பாக்திரியா-மார்கியானா பண்பாட்டுக் களம் மற்றும் யாஸ் பண்பாட்டுக் களங்கள் மற்றும் இந்தோ ஆரிய மக்கள் தொடர்பான காந்தார கல்லறை பண்பாடு, கல்லறை எச் கலாச்சாரம், செப்புக் குவியல் பண்பாடு, சுவத் பண்பாடு, சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடுகள் தொடர்பான வரைபடம்

ஈட்டி முனைகளில் கூர்மையான வெண்கலம் அல்லது இரும்பு பாகங்கள், இரும்பு அரிவாள்கள் மற்றும் கத்திகள் பயன்படுத்தினர்.[9][10][11]பண்ணை அரண்மனைகள், உலோகவியல், பீங்கான் இப்பண்பாட்டில் விளங்கியது. [12][13]

யாஸ் பண்பாட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகள் காணப்படவில்லை. இப்பண்பாட்டுக் காலத்தில் சொராட்டிரிய நெறிப்படி, இறந்தவர்களின் உடல்களை மேடான இடங்களில் வைத்துவிடுவது வழக்கம். [2][14][15][16]

இதனையும் காண்க

குறிப்புகள்

ஆதார நூற்பட்டியல்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யாஸ்_பண்பாடு&oldid=3322505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்