யாமி கௌதம்

இந்தியத் திரைப்பட நடிகை

யாமி கௌதம் (Yami Gautam) (பிறப்பு: நவம்பர் 28 ,1988[1]) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] இவர் பெரும்பான்மையாக இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் பஞ்சாபி மொழி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சில வணிக கிளைகள் மற்றும் பொருட்களின் புகழ்பெற்ற மேற்குறிப்பாளராகவும் உள்ளார்.

யாமி கௌதம்

இவர் நடித்த முதல் படம் 2012 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் ஆகும். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இவரின் நடிப்பிற்கும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது.[3][4]

இதனைத் தொடர்ந்து ஆக்சன் ஜாக்சன், பாதியபூர், சனம் ரே, மற்றும் காபில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

யாமி கௌதம் நவம்பர் 28, 1988 இல் பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசத்தில்) பிறந்தார். இவர் சண்டிகரில் வாழ்ந்து வந்தார் [5]. இவரின் தந்தை முகேஷ் கௌதம் . இவர் பஞ்சாபிய இயக்குநர் ஆவார். தாய் அஞ்சலி கௌதம்.[6] இவருக்கு சுரிலி கௌதம் எனும் ஒரு சகோதரி உள்ளார். இவரும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவரின் முதல் திரைப்படம் பவர் கட் எனும் பஞ்சாபியத் திரைப்படம் ஆகும்[7].[8] பள்ளிப்படிப்பை முத்த பிறகு சட்டம் பயின்றார். தனது சிறுவயதில் இந்தியக் குடிமைப் பணியில் சேர வேண்டும் என்ற கனவு இவருக்கு இருந்தது. ஆனால் தனது இருபதாம் வயதில் நடிகராக வேண்டும் எனத் தீர்மானித்தார் [9]. நடிக்க வேண்டியிருந்ததால் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டோடு இடைநிறுத்தம் செய்துவிட்டார். தற்போது மும்பையில் பகுதிநேரமாக படித்து வருகிறார்.[10] இவருக்கு நூல் வாசித்தல், உள்ளக அலங்காரம், மற்றும் இசை கேட்பது ஆகியவை மிகவும் பிடித்தமானவை ஆகும்.[10]

தொழில் வாழ்க்கை

தனது இருபதாம் வயதில் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பை சென்றார்.[11] இவர் சாந்த் கே பார் சலோ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் முதன்முறையாகத் தோன்றினார். அதன் பின் ராஜ்குமார் ஆர்யன் போன்றத் தொடர்களிலும் நடித்தார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த யா பியார் நா ஹோஹா கம் எனும் தொடரில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.[12][13]

திரைப்பட வாழ்க்கை ( 2010- தற்போது வரை)

உல்லாசா உத்சஹா எனும் கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். ஆனால் படம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இவரின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கிடைத்தன.[14]

பிறகு விக்கி டோனர் எனும் பாலிவுட் திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் இணைந்து நடித்தார்.[15] இதில் ஆஷிமா ராய் எனும் வங்காளப்பெண் கதாப்பத்திரத்தில்நடித்திருப்பார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் விமர்சன் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.[3][16]

தரண் ஆதர்ஷ் எனும் விமர்சகர் , யாமி கௌதமின் நடிப்பைப் பார்க்கும் போது இவர் அறிமுக நடிகை என்பதனை நம்பமுடியவில்லை. மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் எனக் கூறினார்.[17] தெலுங்கில் நுவிலா எனும் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதனை ரவி பாபு இயக்கினார். இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகும் . இதனை கௌதம் மேனன் தயாரித்தார். ஜெய்யுடன் இணைந்து நடித்திருப்பார். இவரின் இரண்டாவது இந்தித் திரைப்படம் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்த டோடல் சியப்பா ஆகும். இதில் அலி சபாருடன் இணைந்து நடித்திருப்பார். 2014 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் யாமி கௌதம்

முகநூலில் யாமி கௌதம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யாமி_கௌதம்&oldid=3753708" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்