யல்டா ஹக்கிம்


யல்டா ஹக்கிம் (பிறப்பு: 26 சூன் 1983)[2] ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஒளிபரப்பு இதழியலாளர், செய்தி வழங்குனர், ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிபிசியின் உள்நாட்டு, வெளிநாட்டு தொலைக்காட்சி சேவைகளில் முதன்மை வழங்குனராக பணியாற்றியவர்.[3] எஸ்பிஎஸ் தொலைக்காட்சியில் பணியை ஆரம்பித்து, 2012 ஆம் ஆண்டில் பிபிசி தொலைக்காட்சியில் சேர்ந்தார். 2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான அறிவிப்பில், யல்டா ஹக்கிம் பிபிசியிலிருந்து விலகி ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியில் சேரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

யல்டா ஹக்கிம்
2017இல் யல்டா ஹக்கிம்
பிறப்பு26 சூன் 1983 (1983-06-26) (அகவை 41)
காபூல், ஆப்கானித்தான்[1]
தேசியம்ஆத்திரேலியர்
கல்விமக்குவாரி பல்கலைக்கழகம் (இதழியல்)
பணி
  • இதழியலாளர்
  • செய்தி வழங்குனர்
  • ஆவணப்பட தயாரிப்பாளர்
பணியகம்ஸ்கை நீயூஸ்
பிபிசி (முன்பு)

ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்

யல்டா ஆப்கானித்தானின் காபூல் நகரில் 26 சூன் 1983 அன்று பிறந்தார். யல்டா 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது, சோவியத்-ஆப்கான் போர் காரணமாக இவரின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியது.[1] ஆட்களை கடத்தும் குழு ஒன்றின் உதவிகொண்டு இக்குடும்பம் பாக்கித்தானில் நுழைந்தது. பாக்கித்தானில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, 1986 ஆம் ஆண்டு இந்தக் குடும்பம் ஆத்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தது.[4]

மேற்கு சிட்னியின் பரமட்டா புறநகர்ப் பகுதியில் வளர்ந்த யல்டா, பரமட்டா நகரத்திலுள்ள மகர்துர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அங்கு வயலின் வசிப்பவராகவும், விளையாட்டு அணியின் தலைவராகவும், மாணவப் பிரதிநிதியாகவும் இருந்தார். பரமட்டா மேற்கு பொதுப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1]

2002-2004 காலகட்டத்தில் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் இளங்கலை (இதழியல்) படித்தார். இப்பல்கலைக்கழகத்தின் சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயலாற்றினார்.[4] 2005 ஆம் ஆண்டு, சிட்னியிலுள்ள மேக்லே கல்லூரியில் இதழியலில் பட்டயம் பெற்றார். 2007-2009 காலகட்டத்தில் விக்டோரியா மாநிலத்திலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலை (இதழியல்) படிப்பை தொலைதூரக் கல்வி முறையில் தொடர்ந்தார். சிறப்பு ஒலிபரப்புச் சேவை வழங்கும் பயிற்சித் திட்டத்திலும் சேரும் வாய்ப்பும் யல்டாவிற்குக் கிடைத்தது.[1][5]

பாரசீக மொழி, தாரி மொழி, இந்தி, உருது, பஷ்தூ மொழி ஆகிய மொழிகளைப் பேசக்கூடியவர். 2022 ஆண்டு நிலவரப்படி, மாண்டரின் மொழியை கற்றுக்கொண்டிருந்தார்.[6][7]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யல்டா_ஹக்கிம்&oldid=3800990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்