மோகித் சர்மா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்
(மோகித் ஷர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மோஹித் மஹிபல் சர்மா (பிறந்த நாள் 18 செப்டம்பர், 1988) ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். அவர் ஒரு வலது-கை நடுத்தர வேக பந்து வீச்சாளர்.

மோகித் ஷர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோகித் மணிபால் ஷர்மா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மித விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போது வரைஅரியானா மாநிலத் துடுப்பாட்ட அம்ம்னி
2013–2015சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 18)
2016-presentகிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 18)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைஒ. டி. ஐ.20Iமுதல் தரப. அ.
ஆட்டங்கள்2142440
ஓட்டங்கள்310354128
மட்டையாட்ட சராசரி7.75012.6412.80
100கள்/50கள்0/00/00/00/0
அதியுயர் ஓட்டம்1104924
வீசிய பந்துகள்893664,1351823
வீழ்த்தல்கள்2438544
பந்துவீச்சு சராசரி32.163422.8233.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
004-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/a0n/a
சிறந்த பந்துவீச்சு4/221/115/454/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–3/–4/–12/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, 21 சூன் 2015

2012-2013 ரஞ்சி கோப்பை போட்டியின் போது 7 ஆட்டங்களில் 37 விக்கட்டுக்களை சாய்த்தார். அந்த போட்டித் தொடரில் அவரது சராசரி 23. 2013 ஆம் ஆண்டு முதல் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2013 சீசனில் 15 ஆட்டங்களில் 23 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

சர்வதேச போட்டிகள்

2013 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் ஆகஸ்டு 1 இல் , புலவாயோவில் நடைபெற்ற சிம்பாப்வேத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1]2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 1 இல் , மும்பையில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி இதில் 84 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

பன்னாட்டு இருபது20

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இவர் பெற்றார். மார்ச் 30 , தாக்கவில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்டா ணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி இதில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்துய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 5 இல் , கட்டாக்கில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னட்டு இருபது 20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 1 ஓவர்கள் வீசி இதில் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

இந்தியன் பிரீமியர் லீக்

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி சார்பாக விளையாடினார். இந்த அணியின் தலைவராக இந்தியத் துடுப்பாட்ட அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அசுவின் நியமிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஏப்ரல் 8 இல் மொகாலியில் நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 13 இல் பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4] ஏப்ரல் 15 இல் மொகாலியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 19 இல் மொகாலியில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] மே 8 இல் ஜெய்பூரில் நடைபெற்றராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4]

விருதுகள்

ஒருநாள் போட்டி

ஆட்டநாயகன் விருது

S இல்லைஎதிர்ப்பாளர்இடம்தேதிபோட்டியில் செயல்திறன்விளைவாக
1ஜிம்பாப்வேகுயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், Bulawayo1 ஆகஸ்ட் 201310-3-26-2 ; DNB    இந்தியா வித்தியாசத்தில் வெற்றி 9 விக்கெட்டுகள்.[5]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோகித்_சர்மா&oldid=3699588" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்