மொரதாபாத் கலவரம், 1980

மொரதாபாத் கலவரம் (Moradabad riots) 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மொரதாபாத் நகரில் நடந்தது. இஸ்லாமியர்கள் காவல்துறையினரை தாக்கியதன் பதிலாக ஏற்பட்ட காவல்துறைத் தாக்குதலில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

மொரதாபாத் கலவரம், 1980
வரைபடத்தில் மொரதாபாத்
தேதிஆகஸ்டு 1980
அமைவிடம்
முறைகள்கொலை மற்றும் கொள்ளை
தரப்புகள்
காவல்துறையினர், இந்துகள்

பின்னணி

1980 ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈகைநாள் வழிபாட்டின் போது தலித்துகள் பகுதியிலிருந்து பன்றி ஒன்று 50,000 இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பகுதிக்குள் சென்றது.[1] இதனால் ஆத்திரமுற்ற இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் மீது தாக்குதல் நடத்தினர்.[2] இதில் உயர் காவல்துறை ஆய்வாளர் (Senior Superintendent of Police-SSP) கற்களால் தாக்கப்பட்டார். மேலும் இஸ்லாமியர்களால் கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate-ADM) அடித்துக் கொல்லப்பட்டார்.[3] இக்கலவரத்தைக் கையாளும் பொருட்டு காவல்துறையினரின் பதில் நடவடிக்கையில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.[4] அரசு சுமார் 400 உயிரிழந்த இஸ்லாமியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியது.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மொரதாபாத்_கலவரம்,_1980&oldid=3640617" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்