மைலே சைரஸ்


மைலே ரே சைரஸ் [1] (பிறப்பு டெஸ்டினி ஹோப் சைரஸ் ; நவம்பர் 23, 1992)[2][3] ஒரு அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் ஆவார்.டிஸ்னி சேனலின் தொடரான ஹன்னா மோன்டனா வின் தலைப்பு கதாபாத்திரத்தில் நடத்தவராக சைரஸ் நன்கறியப்படுகிறார். ஹன்னா மோன்டனா வின் வெற்றியைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் எட்டு பாடல்களைப் பாடிய நிகழ்ச்சியின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. சைரஸின் தனி இசை வாழ்க்கை ஜூன் 23, 2007இல் முதல் பத்தில் முதலாவதாக அவர் மட்டும் பாடிய "சீ யு அகெய்ன்" பாடலை உள்ளிட்ட அவர் அறிமுகமாகி வெளியிட்ட மீட் மைலே சைரஸ் என்ற ஆல்பத்திலிருந்து தொடங்குகிறது.அவருடைய இரண்டாவது ஆல்பமான பிரேக்அவுட் ஜூலை 22, 2008இல் வெளியிடப்பட்டது. பிரேக்அவுட் சைரஸின் ஹன்னா மோன்டனா வினுடைய சலுகை சம்பந்தப்படாத முதலாவது ஆல்பமாகும். இரண்டு ஆல்பங்களுமே பில்போர்டு 200இல் முதலாவதாக இடம்பெற்றது.[4] 2008ஆம் ஆண்டில் அவர் ஹன்னா மோன்டனா மற்றும் மைலே சைரஸ்: இரண்டு உலகங்களிலும் சிறந்த நிகழ்ச்சி திரைப்படத்தில் தோன்றினார்.

Miley Ray Cyrus
Cyrus performing at the Kids' Inaugural: "We Are the Future" event in January 2009.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Destiny Hope Cyrus
பிற பெயர்கள்Destiny Cyrus
பிறப்புநவம்பர் 23, 1992 (1992-11-23) (அகவை 31)
Nashville, Tennessee,
United States
இசை வடிவங்கள்Pop rock, teen pop
தொழில்(கள்)Singer, actress, author, songwriter, musician
இசைக்கருவி(கள்)Vocals, guitar, piano
இசைத்துறையில்2003–present
வெளியீட்டு நிறுவனங்கள்Hollywood
இணைந்த செயற்பாடுகள்Billy Ray Cyrus, Jonas Brothers
இணையதளம்www.mileycyrus.com/

2008இல் வெளிவந்த போல்ட் திரைப்படத்திலும் சைரஸ் தோன்றியுள்ளார், அவருக்கு கோல்டன் குளோப் விருது பரிந்துரையைப் பெற்றுத்தந்த பாடலுக்கான "ஐ தாட் ஐ லாஸ்ட் யூ" பாடலை பாடியுள்ளார். ஏப்ரல் 10, 2009இல் வெளிவந்த ஹன்னா மோன்டனா:தி மூவி என்ற ஹன்னா மோன்டனா வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். 2008இல், டைம் பத்திரிக்கை உலகின் மிகவும் செல்வாக்குள்ள 100 நபர்களுள் ஒருவராக சைரஸையும் பட்டியலிட்டிருந்தது.[5] ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2008இல் அவர் ஈட்டிய 25 மில்லியன் டாலர்கள் வருமானத்துடன் "பிரபலங்கள் 100" பட்டியலில் அவருக்கு 35வது இடத்தை அளித்திருந்தது.[6] அவருடைய தரவரிசை 2009இல் 29ஆம் இடத்திற்கு உயர்ந்தது.[7]

ஆரம்பகால வாழ்க்கை

சைரஸ் 1992ஆம்[8] ஆண்டு நவம்பர் 23 அன்று டென்னசியிலுள்ள நெஷ்வில்லேயில் லெட்டிஷியா "டிஷ்"க்கும் (நீ ஃபின்லே) நாட்டுப்புறப் பாடகர் பில்லி ரே சைரஸூக்கும் பிறந்தார்.[2] சைரஸுக்கு உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர் உள்ளனர்.அவருடைய மூத்த உடன்பிறப்புக்களான டிரேஸ் மற்றும் பிராண்டி சைரஸ் ஆகியோர் முந்தைய உறவில் பெற்ற குழந்தைகளாவர், அவர்கள் இளையவர்களாக இருக்கையில் பில்லி ரேயால் தத்தெடுக்கப்பட்டவர்களாவர்.[9] டிரேஸ் மெட்ரோ ஸ்டேஷன் என்ற எலக்ட்ரானிக் ராக் பேண்டின் பாடகரும் கிடார் இசைக்கலைஞரும் ஆவார்,[10] பிராண்டி சைரஸின் இசை நிகழ்ச்சிகளுக்கு கிடார் வாசித்திருப்பதோடு தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அமெரிக்கன் டீனேஜரில் நடித்த மேகன் பார்க்கருடன் சேர்ந்து இசைக் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.[11] சைரஸிற்கு தனது தந்தையின் முந்தைய உறவிலிருந்து வந்த கிரிஸ்டோபர் கோடி என்கிற மூத்த அண்ணன் ஒருவரும் இருக்கிறார்.[12] சைரஸிற்கு பிரைசன் என்ற ஒரு இளைய சகோதரரும், நடிகையாக உள்ள நோவா என்ற இளைய சகோதரியும் உண்டு.[12] அவர் ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியான ரான் சைரஸின் பேத்தியுமாவார். சைரஸ் தனது தாத்தாவை கௌரவிக்கும் விதமாக தி லாஸ்ட் சாங் என்ற 2010ஆம் ஆண்டு திரைப்படத்திற்கான அவரது கதாபாத்திற்கு "ரோனி" என்ற பெயரை தேர்வுசெய்திருக்கிறார்.[13]

சைரஸின் பெற்றோர்கள், அவர் பெரிய விஷயங்களை சாதிப்பார் என்று நம்பியதால் அவருக்கு டெஸ்டினி ஹோப் சைரஸ் என்று பெயரிட்டனர்.[2] குழந்தையாக இருக்கையில் அவர் சிரித்துக்கொண்டேயிருப்பார் என்பதால் அவருக்கு "ஸ்மைலி" என்ற பட்டப்பெயர் உண்டு, பின்னாளில் அது சுருங்கி "மைலே" என்று ஆனது.[2] 2008இல் மைலே தனது பெயரை, எப்போதும் தன்னுடைய தந்தையின் பெயரை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் விதமாக மைலே ரே சைரஸ் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொண்டார். இப்போதெல்லாம் அவருடைய பாட்டி அவரை அவருடைய பிறப்புப் பெயரை (டெஸ்டினி) வைத்தே கூப்பிடுவதாக தெரியவருகிறது. அவர் ஒரு வகையில் செரொகி வம்சாவளியைச் சேர்ந்தவரார்.[14]


சைரஸ் தான் சீர்லீடராக இருந்த ஹெரிடேஜ் மிடில் ஸ்கூலில் படித்தார்.[15] அவர் தற்போது ஆப்ஷன்ஸ் ஃபார் யூத் தில்[16] உள்ள பள்ளியில் படித்துவருவதோடு, தனது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தளத்தில் ஒரு தனியார் பயிற்சியாளரிடமும் படித்து வருகிறார்.[17] தொடர்ந்து அவர் தி பீப்பிள்ஸ் சர்ச்சிற்கு சென்றுவந்த இடத்திலுள்ள நெஷ்வில்லேயிற்கு வெளியிலிருந்த தனது பெற்றோர்களின் பண்ணையில் சைரஸ் வளர்ந்தார்.[18][19]

தொழில் வாழ்க்கை

2001-2005: முந்தைய படைப்புகள்

தனக்கு ஒன்பது வயதாகும்போது சைரஸ் நடிப்பில் ஆர்வம் காட்டினார், அவருடைய குடும்பத்தினர் கனடாவிலுள்ள டொராண்டோவில் வசித்தபோது அவர் ஆர்ம்ஸ்ட்ராங் நடிப்பு ஸ்டூடியோவில் நடந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டார்.[20] அவருடைய துவக்ககால தொழில் வாழ்க்கை சிறிய கதாபாத்திரங்களாக அமைந்தது, அவருடைய தந்தையின் தொலைக்காட்சி்த் தொடரான டாக் இல் கெய்லி என்ற பெண்ணாக முதலாவதாக நடித்தார்.[3][21] 2003ஆம் ஆண்டில், டிம் பர்டனின் பிக் ஃபிஷ் படத்தில் தனது கதாபாத்திராமான "இளம் ரூத்தி"க்கு சைரஸ் தனது பிறப்புப் பெயரை வழங்கினார்.

சைரஸிற்கு பனிரெண்டு வயதானபோது, டிஸ்னி சேனல் தொலைக்காட்சியின் ஒரு "ரகசிய பாப் நட்சத்திரம்" குறி்த்த நிகழ்ச்சிக்கான "பெஸ்ட் ஃபிரண்ட்" கதாபாத்திரத்திற்கான பரிசோதனையில் அவர் கலந்துகொண்டார்.[22] டிஸ்னி சேனல் பிரதிநிதிகள் அவரை மிகவும் இளையவராக இருக்கிறார் என்று கருதினர், இருப்பினும் சைரஸ் பிடிவாதமாக இருந்ததால் மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு அழைக்கப்பட அது காரணமானது. அவர் கிட்டத்தட்ட முன்னணி கதாபாத்திரமான சோ ஸ்டீவர்டிற்கே பரிசோதனை செய்யப்பட்டார்.அவர் அந்தக் கதாபாத்திரத்தைப் பெற்றபோது அந்த பாத்திரத்தின் பெயர் மைலே ஸ்டீவர்ட் என்று மாற்றப்பட்டது. டிஸ்னி சேனல் தலைவரான கேரி மார்ஷ்ஷின் கூற்றுப்படி, அவருடைய துடிப்பான மற்றும் உயிரோட்டமுள்ள செயல்திறனாலும், "ஹிலாரி டஃபின் தினசரி தொடர்புத்திறன் [sic] மற்றும் ஷானியா டிவைனின் மேடை நிகழ்ச்சி வழங்கல்" உடன் "வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கின்ற"[23] ஒரு நபராக தோன்றியதாலும் சைரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18] சைரஸ் தனது தெற்கத்திய பேச்சு முறையை மாற்றுவதற்கு பல வருடங்களாக முயற்சி செய்தார், இருந்தாலும் பின்னாளில் டிஸ்னி அதனை கதையோட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவுசெய்தது. பின்னாளில், சைரஸ் தனது தந்தையான பில்லி ரே சைரஸையே முக்கிய கதாபாத்திரத்தின் தந்தை பாத்திரத்திற்கு பரிசோதனை செய்தார்.[24] இந்த நிகழ்ச்சி பருவ வயதினரிடத்தில் கவனம் செலுத்திய அதே நேரத்தில் "ரகசிய அடையாள" தன்மையையும் சேர்த்துக்கொண்டது.

2006-தற்போது: ஹன்னா மோன்டனா

பெஸ்ட் ஆஃப் தி போத் வேர்ல்ட்ஸ் சுற்றுப்பயணத்தின்போது சைரஸ் ஹன்னா மோன்டனாவாக நடிக்கிறார்.

ஹன்னா மோன்டனா அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டு மார்ச் 24இல் முதலாவதாக ஒளிபரப்பப்பட்டதுடன் அதற்கு சராசரியாக ஒரு அத்தியாயத்திற்கு நான்கு மில்லியன் பார்வையாளர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2009ஆம் ஆண்டில் இந்தத் தொடர் டிஸ்னி சேனலில் 2010இல் நான்காவது மற்றும் இறுதிப் பருவங்களை ஒளிபரப்பும் திட்டத்தோடு டிஸ்னி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.[25] ஹன்னா மோன்டனா நட்சத்திரமாக, சைரஸ் சிறுவர்களிடத்திலும் இளம் வயது பார்வையாளர்களிடத்திலும் பிரபலமடைந்தது இசையில் வெற்றிகரமான வாழ்க்கையை அவர் அமைத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது. டிஸ்னிமேனியா வின் நான்காவது பதிப்பு 2006ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டபோது அவருடைய இசைப் பதிவு தொடங்கியது. சாங் ஆஃப் த சவுத் என்ற 1946ஆம் ஆண்டு உயிர்ச்சித்திர படத்திலிருந்து வந்த, ஜேம்ஸ் பேஸ்கட் பாடிய அசல் முகப்புப் பாடலான "ஜிப்-எ-டீ-டூ-டா" என்ற பாடலை சைரஸ் பாடினார். அந்த ஆண்டின் அக்டோபர் 24இல் வால்ட் டிஸ்னி ரெக்கார்ட்ஸ் ஹன்னா மோன்டனாவின் முதல் இசைப்பதிவை வெளியிட்டது. ஹன்னா மோன்டனாவாக சைரஸ் அந்த இசைப்பதிவில் எட்டு பாடல்களைப் பாடினார் என்பதோடு அவராலேயே தனக்கும் பில்லி ரே சைரஸிற்குமென்று ஒரு பாடல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆல்பம் அமெரிக்க பில்போர்ட் 200இல் முதலாவதாக இடம்பெற்று முதலாவது வாரத்தில் 281,000 பிரதிகள் விற்பனையாயின என்பதோடு, ஜான் லெஜெண்ட் மற்றும் ராக் குழுவான மை கெமிக்கல் ரொமான்ஸ் போன்றவற்றை முறியடித்தது.[26] இது இரண்டு வாரங்களுக்கு அதே இடத்திலேயே இருந்தது.[27]இது 2006ஆம் ஆண்டின் நன்கு விற்பனையான எட்டாவது ஆல்பம் என்பதுடன், அந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பிரதிகள் விற்பனையாயின.[28] இந்த ஆல்பம் பின்னர் இரண்டுமுறை மறுவெளியீடு செய்யப்பட்டது - சைரஸின் "ராக்கின் அரவுண்ட் தி கிறிஸ்மஸ் ட்ரீ" அட்டைப்படத்தைக் கொண்டு ஒரு ஹாலிடே பதிப்பு மற்றும் "நோபடிஸ் பர்ஃபெக்ட்" படத்தைக் கொண்ட சிறப்புப் பதிப்பு, முதலாவது 2007ஆம் ஆண்டில் டிஸ்னி சேனல் ஹாலிடே ஆல்பத்தில் தோன்றியது. தி சீட்டா கேர்ள்ஸின் 39 நாட்கள் சுற்றுப்பயணத்தின் 20 தேதிகளில் அவர்களுக்காகவும் சைரஸ் பாடினார்.[29] மீண்டும் ஒருமுறை, சைரஸ் டிஸ்னியின் காவியப் படலான "பார்ட் ஆஃப் யுவர் வேர்ல்ட்" பாடலை டிஸ்னிமேனியா வின் ஐந்தாவது பதிப்பின் மறுஆக்கத்திற்காக பதிவுசெய்தார்.[30]

2007ஆம் ஆண்டு ஜூன் 26இல் ஹன்னா மோன்டனா 2: மீட் மைலே சைரஸ் என்ற இரட்டை ஆல்பத்தை வெளியிட்டார். முதலாவது இசைத்தட்டு இரண்டாவது ஹன்னா மோன்டனா பாடல், இரண்டாவது இசைத்தட்டு சைரஸ் அவரே பாடிய முதல் தனிப்பாடல் ஆல்பத்தைக் கொண்டது. இந்த ஆல்பம் பில்போர்ட் 200இல் முதலாவதாக இடம்பெற்றது என்பதுடன் 326,000 பிரதிகள் விற்பனையானது, முந்தைய பாடல்தொகுப்பைக் காட்டிலும் முதலாவது வாரத்தில் வேகமாக விற்பனையானது.[26] இது பில்போர்ட் 200இல் டிசம்பர் மாதத்தில் முதல் பத்திற்கு வந்தது என்பதுடன் அந்த கால இடைவெளியில் 700,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது.[31] இது அமெரிக்காவில் மூன்று மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையான பின்னர் ஆர்ஐஏஏவால் மூன்று முறை பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டது.[32] இந்த ஆல்பத்தின் பாடல்களுள் ஐந்து "பில்போர்ட்" ஹாட் 100இல் இடம்பெற்றது. "சீ யூ அகெய்ன்" ஹாட் 100இன் முதல் பத்தில் இடம்பெற்று 10வதாக இடம்பெற்ற சைரஸின் முதலாவது பாடலாகும்.[33]

சைரஸ் பெஸ்ட் ஆஃப் போத் வேர்ல்ட்ஸ் சுற்றுப்பயணத்தில் நடிக்கிறார்.

ஹைஸ்கூல் மியூஸிக்கல் 2 இல் "கேர்ள் அட் பூல்"ஆக சைரஸ் சிறிய பாத்திரத்தில் தோன்றினார். அவர் டிஸ்னி சேனல் தயாரிப்பான தி எம்பரர்ஸ் நியூ ஸ்கூலில் யாட்டாவாக சிறப்புத் தோற்றத்திலும் தோன்றினார். மொத்தம் 69 தேதிகளுடன் கூடிய வட அமெரிக்க பெஸ்ட் ஆஃப் போத் வேர்ல்ட் டூரில் அவராகவும் ஹன்னா மோன்டனாவாகவுமாக இரண்டு பாத்திரங்களில் சைரஸ் நடித்தார். பெரும்பாலான சுற்றுப்பயணங்களில் ஜோனால் பிரதர்ஸ்தான் முதலாவதாக துவக்கத்தில் நடித்து வந்தனர்.[34] ஒவ்வொரு தேதிக்குமான சுற்றுலா அனுமதிச்சீட்டுகளும் சாதனை நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.[35] இந்த சுற்றுப்பயணம் டிஸ்னி டிஜிட்டல் 3-டியில் திரைப்படங்களுக்கென்று பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சித் திரைப்படம் அதன் தொடக்க நாளிலேயே 8,651,758 டாலர்களை ஈட்டித்தந்தது என்பதுடன், அந்த வார இறுதியில் 31,117,834 டாலர்கள் நிகர வருமானத்தைத் தந்தது, இது 1000 திரையிடல்களுக்கு குறைவாக வெளியிடப்பட்டதிலேயே தொடக்க வார இறுதியில் அதிகபட்ச நிகர வருமானத்தைத் தந்ததானது. 2008ஆம் ஆண்டு ஜூலை 26இல் இது டிஸ்னி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.[36] அதன் பிறகு, வால்ட் டிஸ்னி ரெக்கார்ட்ஸ்/ஹாலிவுட் ரெக்கார்ட்ஸ் இந்த சுற்றுப்பயணத்தின்போது சைரஸால் பதிவுசெய்யப்பட்ட நேரடி ஆல்பத்தை வெளியிட்டது. ஹன்னா மோன்டனாவாக பாடிய ஏழு பாடல்களையும், அவராகவே பாடிய மற்ற ஏழு பாடல்களையும் இது உள்ளிட்டிருந்தது. இந்த ஆல்பம் அமெரிக்காவில் மூன்றாவது இடத்தில் உச்சத்திலிருந்தது.[37]

ஜூலை 2008 - தற்போது: பிரேக்அவுட் மற்றும் திரைப்பட வாழ்க்கை

மேஸேவின் நன்றிசெலுத்தல் தின அணிவகுப்பின்போது சைரஸ் தனது கோல்டன் குளோப் பரிந்துரை பாடலான "ஐ தாட் ஐ லாஸ்ட் யூ" பாடலைப் பாடுகிறார்.

2008 ஜூலையில், சைரஸ் தனது இரண்டாவது ஆல்பத்தை பிரேக்அவுட் என்ற தலைப்பில் தனது சொந்தப் பெயரிலேயே வெளியிட்டார். பிரேக்அவுட் "வாட்ஸ் பீன் கோயிங் இன் மை லைஃப் இன் த பாஸ்ட் இயர்" ஆல் தாக்கம்பெற்றது என்று சைரஸ் கூறினார்.[38] ஆல்பத்திலுள்ள இரண்டு பாடல் வரிகளை சைரஸும் எழுதினார்.[38] "பாடல் எழுதுவதைத்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் உண்மையிலேயே செய்ய விரும்புகிறேன், [...] இந்தப் பாடல் பதிவு எல்லாவற்றிலும் மேலாக நான் ஒரு எழுத்தாளன் என்பதை நிரூபிக்கும் என்று நம்புகிறேன்."[39] இந்த ஆல்பம் முதல் வாரத்தில் 371,000 பிரதிகள் விற்பனையுடன் அமெரிக்க பில்போர்ட் 200 அட்டவணையில் முதலாவது இடத்தைப் பிடித்தது. 2008ஆம் ஆண்டு ஜூலை 31 வரை ஒரு பெண் கலைஞருக்கு அந்த வருடத்தின் இரண்டாவது பெரிய விற்பனை வாரமாகும்; முன்னதாக மரியா கேரியின் E=MC² தனது முதலாவது வாரத்தில் 463,000 பிரதிகள் விற்பனையானது.[4] "7 திங்ஸ்" பிரேக்அவுட் டிலிருந்து வெளியான முதலாவது தனிப்பாடலாகும்.[40] இந்த தனிப்பாடல் பில்போர்ட் ஹாட் 100இல் 84வது இடத்தைப் பிடித்தது.[41] வெளியிடப்பட்ட இரண்டு வாரங்கள் கழித்து இது 60 இடங்களைக் கடந்து 70ஆம் இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்திற்கு வந்தது.[42] அவர் ஏப்ரலில் தனது தந்தையுடன் சேர்ந்து 2008ஆம் ஆண்டு சிஎம்டி இசை விருதுகளை தொகுத்து வழங்கினார்.[43] 2008இல், டீன் சாய்ஸ் விருதுகளை சைரஸ் தொகுத்து வழங்கினார்.[44] 2008ஆம் ஆண்டு தொகுப்பு ஆல்பமான ஆல் ராப்டு அப் பிற்காக "சாண்டா கிளாஸ் இஸ் கம்மிங் டு டவுன்"இன் வடிவத்தை சைரஸ் பதிவுசெய்தார்.[45]

போல்ட் என்ற கம்ப்யூட்டர்-உயிர்ச்சித்திரமாக்கல் 2008திரைப்படத்தில் வரும் பென்னி என்ற கதாபாத்திரத்திற்கான குரலை சைரஸ் வழங்கினார், இந்தப் படம் ஒரு நாய் தன்னுடைய எஜமானரைத் தேடுவது பற்றியதாகும். அதனுடைய தொடக்க வார இறுதியிலேயே இந்தப் படம் மூன்றாவது இடத்தில் 26,223,128 டாலர்களுடன் தொடங்கியது.[46] அதனுடைய இரண்டாவது வார இறுதியில், 1.4 சதவிகித அதிகரிப்புடன் ஃபோர் கிறிஸ்மஸிற்கு பின்னால் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது.[47] 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 20இல் இந்தப் படம் கனடாவிலும் அமெரிக்காவிலும் 113,643,011 டாலர்களும், உலகம் முழுவதிலும் 286,244,489 டாலர்களும் ஈட்டியது.[48] போல்ட் திரைப்படத்தின் இசைத்தொகுப்பில் இரண்டு அசல் பாடல்களுள் ஒன்றை சைரஸும் இணைந்து எழுதியுள்ளார், இந்தப் பாடலில் மற்றொரு போல்ட் நட்சத்திரமான ஜான் டிராவோல்டாவும் உண்டு. "ஐ தாட் ஐ லாஸ்ட் யூ" என்று தலைப்பிடப்பட்ட இது பின்னர் சிறந்த அசலான பாடலுக்கான கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.[49] 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 10இல் வெளியான ஹன்னா மோன்டனா வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹன்னா மோன்டனா:தி மூவி திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் சைரஸ் மீண்டும் நடித்தார். இந்தத் திரைப்படம் ஸ்டீவர்ட் தனது வேர்களைக் கண்டுபிடித்து தனது சொந்த வாழ்க்கையா அல்லது ஹன்னா மோன்டனாவாக இருப்பதா என்று வாழ்வை தேர்வுசெய்வது குறித்ததாகும். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் உலகம் முழுவதிலும் 152,900,286 டாலர்கள் ஈட்டித்தந்தது.[50] இந்தத் திரைப்படத்தின் பாடல் தொகுப்பிலிருந்து வந்த அவரது தனிப்பாடலான "தி கிளிம்ப்" பில்போர்ட் ஹாட் 100இல் நான்காவது இடத்தில் உச்சத்தில் இருந்தது, இது அவரது "சீ யூ அகெய்ன்" மற்றும் "7 திங்ஸ்" முறையே 10வது மற்றும் 9வது இடத்தில் இருந்ததிலிருந்து அவரது அதிகபட்ச தரவரிசையாகும்; பின்னாளில் "பார்ட்டி இன் த யு.எஸ்.ஏ." இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[41] இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அந்த சலுகையின் கீழ் பில்போர்ட் 200இல் முன்னணி வகித்தது என்பதுடன் ஆர்ஐஏஏவால் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்டது.[51]

தி லாஸ்ட் சாங் செட்டில் ஒப்பனை செய்துகொள்வதற்காக சைரஸ் அமர்ந்திருக்கிறார்.வயதுவந்த பார்வையாளர்களிடம் சைரஸை அறிமுகப்படுத்தும் வகையில் சைரஸின் பாத்திரம் கற்பனை செய்யப்படுகிறது.

2009ஆம் ஆண்டு ஜூனில், சைரஸ் தனது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாழ்க்கை பிரதிநிதித்துவத்தை யுனைட்டட் டேலண்ட் ஏஜன்சியிடமிருந்து தன்னுடைய இசைக்கு முன்னரே பிரதிநிதியாக இருந்த கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட் ஏஜன்ஸிக்கு மாற்றிக்கொண்டார்.[52] ஜூன் மாதத்திலும், நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய நாவலின் அடிப்படையிலான தி லாஸ்ட் சாங் என்ற வரவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார், இந்தத் திரைப்படத்தில் அவர் ஒரு அமைதியான கடற்கரை நகரத்தில் இருக்கும் தனது வீட்டில் தன்னுடைய பிரிந்துசென்ற தந்தையும் ஒரு கோடைகாலத்தை செலவிடும் கட்டுக்கடங்காத பருவ வயது பெண்ணாக நடிக்கிறார். இந்தப் படம் 2010இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதோடு, படப்பிடிப்பு 2009ஆம் ஆண்டு பிற்பகுதி டீன் சாய்ஸ் விருதுகளுக்கு பின்னர் நிறைவுபெறும்.[53] இந்தப் படம் சைரஸை நடுத்தர வயது பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய "நட்சத்திர வாகனமாக" கருதப்படுகிறது.[54] சைரஸ் ஜோனாஸ் சகோதரர்களுடன் இணைந்து லைன்ஸ், வெய்ன்ஸ் அண்ட் டிரையிங் டைம்ஸ் என்ற அவர்களுடைய நான்காவது ஆல்பத்திற்கான "பிஃபோர் தி ஸ்டோர்ம்" என்று தலைப்பிடப்பட்ட பாடலைப் பாடியிருக்கிறார். அவரும்கூட 2009ஆம் ஆண்டு ஜூலை 7இல் ஹன்னா மோன்டனா 3 என்ற தலைப்பில் ஹன்னா மோன்டனா இசைத்தொகுப்பை (மூன்றாவது பருவமாக) வெளியிட்டிருக்கிறார், இது அவரை மோன்டனாவாக மொத்தத்தில் நான்காவதாக "ஹீ குட் பி த ஒன்" பாடலுக்காக அவரை முதல் பத்து இடத்திற்கு கொண்டுவந்தது.[55]

"பார்ட்டி இன் த யு.எஸ்.ஏ." 2009ஆம் ஆண்டு ஜூலை 29இல் அதிகாரப்பூர்வமாக ரேடியோவிற்கென்று வெளியிடப்பட்டது.[56] தி டைம் ஆஃப் அவர் லைவ்ஸ் என்று நேரடியாக இபி தலைப்பிடப்பட்ட வால் மார்டிலிருந்து வந்துள்ள இந்த பாடல் 2009 ஆகஸ்ட் 31இல் வெளிவரவிருக்கிறது.[57] இது சைரஸின் ஆடையலங்காரத்தை மேம்படுத்தும் விதமாக வெளியிடப்படவிருக்கிறது. இந்தப் பாடல் 226,000 பதிவிறக்கங்களுடன் ஹாட் டிஜிட்டல் சாங்ஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இது அட்டவணையில் இடம்பெற்ற இளம் கலைஞர் என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளதோடு அது இரண்டாவது இடத்தில் இடம்பெற்ற பில்போர்ட் ஹாட் 100இல் பெரிய இடத்தைப் பிடிக்க வழியமைத்தது, "தி கிளிம்ப்" உச்சத்திலிருந்தது (அது நான்காவது இடத்தில் உச்சத்தில் இருந்தது).[41][58] இந்த இடத்தோடு 2009ஆம் ஆண்டிற்கான உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்காக பிளாக் ஐடு பீஸ் உடன் சைரஸ் இணைந்துள்ளார். இதுவும்கூட, முதலாவது இடத்தைப் பிடித்த 2005ஆம் ஆண்டு கேரி அண்டர்வுட்டின் பாடலான "இன்சைட் யுவர் ஹெவன்"இல் இருந்து ஒரு பெண் தனிப்பாடகர் பெற்ற உயர்ந்த இடமாகும்.[59][60] அதற்கடுத்து அந்தப் பாடல் "ஹாலிவுட்டின் பாடல் பதிவு வரலாற்றில் வேகமாக சாதனை படைத்த" பாடலானது.[59]

சைரஸ் தனது 2009ஆம் ஆண்டு வட அமெரிக்க சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் போர்ட்லேண்ட் ஒரேகானில் 2009ஆம் ஆண்டு 14ஆம் தேதி தொடங்கி வட அமெரிக்கா முழுவதிலும் 45 நாட்களுக்கு நீடிக்கிறது. ஏறக்குறைய இந்த சுற்றுப்பயணத்தின் பெயரை "2009/2010 உலக சுற்றுப்பயணம் என்று மாற்றி பிரிட்டனுக்கென்று நிறைய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பு விருந்தினராக பேண்ட் மெட்ரோ ஸ்டேஷன் இடம்பெறும்.[61] நுழைவுச்சீட்டுக்கள் 2009 ஜூன் 13இல் விற்கப்பட்டன, பிரிட்டனுக்கான நுழைவுச் சீட்டுக்கள் 2009 ஜூன் 12இல் விற்கப்பட்டன.[62] 2009 ஜூலையில் சைரஸ் நடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஏப்ரலினே பைக்கின் நாவலான வி்ங்க்ஸ் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற படத்தை டிஸ்னி வாங்கியுள்ளது.[63]

தொழில்முனைவுத்திறன்

சைரஸ் தனது முதலாவது டெய்ஸி ராக் கிடார் நிகழ்ச்சியான தி ஸ்டார்டஸ்ட் ஸ்பார்க்கிள் சீரிஸ் அகோஸ்டிக் எலக்ட்ரிக் பின்க் ஸ்பார்க்கிளை வழங்கியபோது அவர் டெய்ஸி ராக் கிடார்ஸின் செய்தித் தொடர்பாளரானார்.[64] 2007ஆம் ஆண்டு கோடைகாலத்தின் பிற்பகுதியில் ஹன்னா மோன்டனா வின் ஆடை சேகரிப்பை டிஸ்னி வெளியிட்டது. சைரஸ் அந்த சேகரிப்பிலிருந்து சில வகையான ஆடை வடிவங்களை உருவாக்க உதவினார்.[65] 2007ஆம் ஆண்டு டிசம்பரில் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகின்ற 25 வயதிற்கு உட்பட்ட போர்ப்ஸ் டாப் டிவென்டி சூப்பர்ஸ்டார் இயேர்னர்ஸ் பட்டியலில் அவருக்கு 17வது இடம் அளிக்கப்பட்டது.[66] சைரஸ் மெழுகு பொம்மை நியூயார்க் நகரத்திலுள்ள மேடேம் டூஸாட்ஸில் திறந்துவைக்கப்பட்டது.[67] 2008ஆம் ஆண்டு ஏப்ரலில், தனது 16ஆம் வயதுவரையிலான வாழ்க்கையை பிரதிபலிக்கும் சுயசரிதையை எழுதுவதற்கான ஒப்பந்தத்தி்ல் கையெழுத்திட்டுள்ளார். மைல்ஸ் டு கோ எனப்படும் வாழ்க்கைக் குறிப்பு (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4231-1992-0) ஹில்லாரி லிஃப்டினுடன்[68] சேர்ந்து எழுதப்பட்டு மார்ச் 2009இல் டிஸ்னி ஹைஃபீரியன் புக்ஸால் பதிப்பிக்கப்பட்டது. அந்த வாழ்க்கைக் குறிப்பு சைரஸிற்கு தன் தந்தையுடனான உறவு, ஊடகம் பற்றிய அவரது கருத்துக்கள், அவரது இனிய வாழ்க்கை, அவரது எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவர் இன்னும் வாழ்க்கையில் அடையவேண்டிய மைல்கற்கள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.[69] நியூயார்க் டைம்ஸ் குழந்தைகள் சிறந்த விற்பனைப் பட்டியலில் மைல்ஸ் டு கோ முதல் இடத்தைப் பிடித்தது.[70] மைல்ஸ் டு கோ வை தொடக்கத்திலேயே ஒரு மி்ல்லியன் பிரதிகள் விற்பனை செய்ய அச்சிடப்படுகிறது.[71]

2009ஆம் ஆண்டு ஆகஸ்டில் வால்மார்ட்டில் மட்டும் கிடைக்கக்கூடிய ஜூனியர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கிடைக்கக்கூடிய ஆடை வரிசையை உருவாக்குவதற்கு மாக்ஸ் அஸ்ரியாவுடன் சைரஸ் இணைந்தார்.[72] இந்த ஆடை வரிசையுடன் சேர்த்து தி டைம் ஆஃப் அவர் லைவ்ஸ் என்ற அவருடைய இபியை வெளியிட்டார், வால்மார்ட் ஒரு பக்கத்தை வடிவமைப்பாளர்களுக்கென்று சமர்ப்பணம் செய்தது.[73] இந்த ஆடைவரிசை உள்ளாடைகள், டை-டை டேங்க் டாப்ஸ், உடைகள் மற்றும் சால்வைகள் ஆகியவற்றை உள்ளிட்டிருந்திருந்தது. இந்த ஆடைகள் "முற்றிலும் தவறற்றவை ஆனால் மொத்தத்தில் லேசானவை"[74] என்றும் "விருப்பமானவை"[72] என்றும் கூறிய விமர்சகர்கள் "இதில் ஹன்னா மோன்டனாவின் பெயர் இருப்பது குறித்த அக்கறையின்றிப் பார்க்கப்போனால் இதை விற்பனை செய்வது பொதுவானதுதான் " என்றும் ஒப்புக்கொண்டதோடு அவை அதிகமாக விற்பனையாகும் என்றும் யூகித்தனர்.[72]

சமூகப் பணி

சைரஸ் தனது 16வது பிறந்தநாளை அறக்கொடை நிதிதிரட்டும் நிகழ்ச்சியாக டிஸ்னிலேண்டில் நடத்தினார், அந்நிகழ்ச்சிக்கான ஒரு நுழைவுச்சீட்டு 250 டாலர்கள் என்ற அளவில் விற்கப்பட்டதோடு அதில் 5,000 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.[75] அதில் கிடைத்த வருவாய் இளைஞர் தன்னார்வ அமைப்பான யூத் சர்வீஸ் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டது.[76][77][78] மிக நன்றாக பணிபுரியும் பத்து தன்னார்வலர்கள் யூத் சர்வீஸ் அமெரிக்காவிலிருந்து அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர்,[79] அன்று மாலை அந்த அமைப்பிற்கான ஒரு மில்லியன் டாலர் தொகையை சைரஸ் வழங்கினார்.[80] 2007இல், சிட்டி ஆஃப் ஹோப்பிற்கு மிகப்பெரிய பங்களிப்பாக வி்ற்கப்பட்ட ஒவ்வொரு "ஹன்னா மோன்டனா" இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டிற்கும் ஒரு டாலரை சைரஸ் வழங்கினார். "சிட்டி ஆஃப் ஹோப்பின் ஒரு பகுதியாக இருப்பதன் நல்ல விஷயம் என்னவென்றால் அவர்கள் புற்றுநோய் ஆராயச்சி மையத்தினராவர். அவர்கள் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அது துல்லியாமாக என்ன என்பதைக் கண்டுபிடித்து அவர்களால் எப்படி குணப்படுத்தி்க்கொள்ள முடியும் என்பதை கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள், அது அற்புதமானது" என்றார் அவர்.[81]

சைரஸ் தனது திறமைகளை சில நன்கொடை பலன்களுக்காகவும் அளித்திருக்கிறார். "ஜஸ்ட் ஸ்டேண்ட் அப்" என்று தலைப்பிடப்பிடப்பட்ட நன்கொடை சுற்று பாடல்களைப் பதிவுசெய்துகொள்ள சைரஸ் மற்ற நாற்பது பெண் பாடகர்களுடன் கூட்டு சேர்ந்தார், அது 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 5இல் ஸ்டேண்ட் அப் டு கேன்சர் என்ற எதிர் புற்றுநோய் பிரச்சாரத்திற்கான ஒருமணி நேர பிரைம்டைமின்போது நேரடியாக நடத்தப்பட்டது.[82] 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 14இல் மற்ற பாடகர்களுடன் சேர்ந்து, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கான நிதித் திரட்ட உதவும்விதமாக சிட்டி ஆஃப் ஹோப் பெனிபிட் கான்சர்ட்டிற்கென்று கலிபோர்னியா யுனிவர்சல் சிட்டியில் உள்ள கிப்ஸன் ஆம்பிதியேட்டரில் நிகழ்ச்சியை நடத்தினார்.[83]

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடத்தைகளை ஊக்கப்படுத்தும் அமைப்பான டிஸ்னிஸ் ஃபிரெண்ட்ஸ் ஃபார் சேன்ஞ்சில் சைரஸ் இணைந்திருந்தார், அத்துடன் டிஸ்னி சேனலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சர்வீஸின் பொதுச் சேவை அறிவிப்புகள் நிகழ்ச்சியிலும் தோன்றினார்.[84] மேலும், அவர் டிஸ்னிஸ் ஃபிரண்ட்ஸ் பார் சேன்ஞ்சிற்கான மையப் பாடலாக இருக்கும் ஒரு நன்கொடை தனிச்சுற்று பாடலான "சென்ட் இட் ஆன்"ஐ பாடுவதற்கு தன் சக டிஸ்னி நட்சத்திர பாடகர்களான டெமி லோவேடா, சலேனா கோமேஸ் மற்றும் ஜோன்ஸ் பிரதர்ஸ் ஆகியோருடன் இணைந்தார். சென்ட் இட் ஆன் ஹாட் 100இல் இருபதாவது இடத்தைப் பிடித்தது.[85][86] "சென்ட் இட் ஆன்" இல் கிடைக்கும் வருமானம் 100 சதவிகிதத்தையும் டிஸ்னி வேர்ல்வைட் கன்சர்வேஷன் ஃபண்ட் (DCWF) சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு டிஸ்னி அனுப்பிவைக்கும்.[85]

தனிப்பட்ட வாழ்க்கை

நடனக்கலைஞர்களான ஆஸ்லீ நினோ மற்றும் உற்ற நண்பர் மேண்டி ஜிரோக்ஸுடன் சைரஸ்

2008ஆம் ஆண்டு ஜனவரியில், தன்னுடைய பெயரின் நடவிலிருப்பது தன்னுடைய தந்தையை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "மைலே ரே சைரஸ்" என்று மாற்றிக்கொள்ளும் தனது விருப்பத்தை சைரஸ் அறிவித்தார்.[87] இந்தப் பெயர் மாற்றம் 2008ஆம் ஆண்டு மே 1இல் அதிகாரப்பூர்வமாக நடந்தது.[1] யுஎஸ்ஏ டுடே வுடனான ஒரு நேர்காணலில், தான் கொண்டுள்ள நம்பிக்கையே "முக்கியமான விஷயம்" என்றும் இதுதான் தான் ஹாலிவுட்டில் பணிபுரிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[88] பாரேடால் நேர்காணல் செய்யப்பட்டபோது, தான் தொடர்ந்து தன் குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு சென்றுவருவதாக கூறினார்.[24] கிறிஸ்டியானிட்டி டுடே வுடனான ஒரு நேர்காணலில் பில்லி ரே சைரஸ் "கிறிஸ்துவனாக இருப்பதால் நாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நம்புகிறோம்," என்றும் "எங்களுக்கென்று ஒரு நல்ல தேவாலயம் இருக்கிறது, நீங்கள் தேவாலயத்தில் சரணடையும்போது உங்கள் ஆயர், நீங்கள் இருக்கும் சமூகம் ஆகியவற்றிற்கு நீங்கள் பெரிய தியாகத்தை செய்கிறீர்கள். இதையும் எதிர்கொள்வோம்,ஃபிராங்க்ளின், டென்னசி சூழலைவிட ஹாலிவுட் மிகவும் வித்தியாசமானது.[89]

2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் சைரஸூம் அவருடைய நண்பரும்(சைரஸூக்கு பின்னணி நடனக்கலைஞராகவும் இருப்பவர்) தி மைலே அண்ட் மேண்டி ஷோ எனப்படும் யூடியூப்பிற்கான வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினர். யூடியூப் ஹிட் என்று விவரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி சைரஸ் மற்றும் ஜிரோக்ஸால் வேடிக்கைக்காக திரைப்படமாக்கப்படவிருக்கிறது என்பதுடன் அதை சைரஸ் மற்றும் ஜிரோக்ஸ் எடிட் செய்ய அது அவர்களே முற்றிலும் பணிபுரிந்த படமாகவும் இருக்கப் போகிறது.இது முக்கியமாக சைரஸின் படுக்கையறையில் படமாக்கப்பட்டுள்ளது.[90]செவன்டீனின் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் பதிப்பில், தான் நிக் ஜோனாஸூடன் இரண்டு வருடங்களாக நட்பு கொண்டிருப்பதாகவும், தாங்கள் காதலிப்பதாகவும் சைரஸ் குறிப்பிட்டார். அவர்கள் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பிரிந்துவிட்டனர்.[91] ஜூன் 2009இல், நாஷ்வில் ஸ்டார் போட்டியாளரும் மாடலுமான ஜஸ்டின் காஸ்டனுடனான தனது ஒன்பது மாதகால உறவை சைரஸ் முடித்துக்கொண்டார்.[92]

சிக்கல்கள்

வேனிட்டி ஃபேர் புகைப்படங்கள்

2008ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, எண்டர்டெய்ன்மெண்ட் டுநைட் என்ற தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி வேனிட்டி ஃபேர் உடனான புகைப்பட படப்பிடிப்பில் சைரஸ் மேலாடை இன்றி தோன்றியிருக்கிறார் என்று தெரிவித்தது.[93] இந்தப் புகைப்படம் அடுத்தடுத்து காட்சிக்கு பின்னால் புகைப்படங்களில் வெளியிடப்பட்டது, அதில் சைரஸ் பின்பக்கம் எந்த உடையும் இல்லாமலும் ஆனால் முன்பக்கத்தில் படுக்கை விரிப்பைக் கொண்டு மூடியிருக்கும்படி தோன்றினார். புகைப்பட படப்பிடிப்பு புகைப்பட நிபுணரான ஆன்னி லிபோவிச்சால் எடுக்கப்பட்டிருந்தது.[94] முழு புகைப்படமும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் நியூயார்க் டைம்ஸ் வலைத்தளத்தில் அதனுடன் இணைந்த ஒரு கதையுடன் பதிப்பிக்கப்பட்டது. 2008 ஏப்ரல் 29இல் , தி நியூயார்க் டைம்ஸ், அவர் வெற்று மார்பகங்களுடன் இருப்பதற்கான அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறது என்றாலும், சைரஸ் ஒரு படுக்கை விரிப்பால் மறைக்கப்பட்டிருக்கிறார் என்பதுடன் அவர் மேலாடை இல்லாதவராக இல்லை என்று தெளிவுபடுத்தியது.[95] சில பெற்றோர்கள் அந்த புகைப்படத்தின் இயல்பு ஒழுக்க விதிகளை மீறுவதாக இருப்பதாக தெரிவித்ததை, டிஸ்னியின் செய்தித் தொடர்பாளர் "பத்திரிக்கைகளை விற்கும் நோக்கத்திற்காக 15 வயதான ஒருவரை உள்நோக்கத்தோடு பயன்படுத்தும் சூழ்நிலையை [அது] உருவாக்கியுள்ளது" என்று விவரித்தார். உலகளாவிய டிஸ்னி சேனலுக்கான பொழுதுபோக்குப் பிரிவு தலைவரான கேரி மார்ஷ் பின்வருமாறு கூறியதாக போர்ட்ஃபோலியோ பத்திரிக்கை குறிப்பிட்டது "மைலே சைரஸ் ஒரு 'நல்ல பெண்' என்றாலும் இது அவருடைய தொழில்ரீதியான முடிவாக இருக்கிறது. பெற்றோர்கள் அவருடைய தேவதை குணத்தின் மீது முதலீடு செய்திருக்கின்றனர். அவர் அந்த நம்பிக்கையை மீறுவாரேயானால் அவரால் அதைத் திரும்பப் பெற இயலாது.”[95] பிராண்டிங் ஆலோசகர்களான ஜான் டான்டில்லோ மற்றும் மைக்கேல் ஸ்டோன் ஆகியோர் சைரஸின் பிராண்டிற்கான எதிர்விளைவுக்குள்ள சாத்தியம் மற்றும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய வியூகம் பற்றிய விவாதிப்பதற்கு பாக்ஸ் பிஸினஸ் நியூஸில் தோன்றினர்.[96]

அந்தப் புகைப்படம் இணையத்தில் சுற்றுக்கு விடப்பட்டது மற்றும் ஊடக கவனத்தை ஈர்ப்பதற்கு பதிலுரையாக சைரஸ் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்:"நான் 'கலாப்பூர்வமானது' என்று நினைத்து அந்த புகைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டேன், இப்போதோ அந்த புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் அதன் விஷயங்களைப் படிப்பதற்கும் நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இப்படி நடக்கும் எதிலும் நான் இனி கலந்துகொள்ள மாட்டேன், அத்துடன் என்னைப்பற்றி மிகவும் அக்கறைகொண்டுள்ள ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."[95] லிபோவிட்சும் ஒரு அறிக்கை வெளியிட்டார்: மேலே பற்றிய என்னுடைய சித்திரிப்பு தவறாக பயன்படுத்தப்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புகைப்படம் ஒரு எளிய, காவியத்தன்மையுடன் மிகவும் குறைவான ஒப்பனையை பயன்படுத்தி எடுக்கப்பட்டது, அத்துடன் இது மிக அழகாக இருப்பதாகவும் நான் கருதுகிறேன்."[95][97] 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 28இல் வேனிட்டி ஃபேர் , சைரஸ் மற்றும் அவரது தந்தை பில்லி ரே சைரஸூடனான தங்களது முழு நேர்காணலை பதிப்பித்ததோடு தங்களுடைய வலைத்தளத்தில் காட்சிக்கு பின்னாலான புகைப்படங்களையும் வெளியிட்டனர்.[98] அந்த நேர்காணலின்படி, சைரஸின் பெற்றோர்கள் மற்றும்/அல்லது அவர் மீது அக்கறையுள்ளவர்கள் அந்த புகைப்பட படப்பிடப்பு முழுவதிலும் அவருடன் இருந்திக்கின்றனர் என்று தெரிகிறது. படுக்கை விரிப்புகளுடன் காட்சிதரும் கருத்தாக்கம் லிபோவிட்சால் தரப்பட்டதாகும்.அவர் இந்த காட்சியால் "கவலைப்பட்டாரா" என்று கேட்கப்பட்டபோது நேர்காணல் செய்த புரூஸ் ஹேண்டியிடம் சைரஸ்:"இல்லை, அதாவது நான் ஒரு பெரிய படுக்கை விரிப்பை வைத்திருக்கிறேன். இது பார்ப்பதற்கு அழகாகவும் உண்மையிலேயே இயல்பானதாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.நான் இது உண்மையிலேயே கலாப்பூர்வமானது என்று நினைத்தேன். இது ஆபாசமான முறையில் இல்லை.... நீங்கள் ஆன்னிக்கு மறுப்பு சொல்ல முடியாது. அவர் ரொம்பவும் நேர்த்தியானவர். அவர்தான் இந்த நாய்க்குட்டி காட்சியை எடுத்தார், உங்களுக்கும் இது ஓகேதான்."[98] 2008ஆம் ஆண்டு டிசம்பர் 2இல், டிவி கைட் சைரஸ் எதிர்காலத்தில் லெபோவிட்சுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருப்பதாகவும், புகைப்படத் தொழிலை தானே செய்வதற்கு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது, "இதைத்தான் என் வாழ்நாளில் நான் செய்ய விரும்புகிறேன். ஒரு புகைப்பட நிபுணராக இருப்பதை நான் விரும்புகிறேன்... இதைப்பற்றிப் படிக்க நான் லண்டனுக்கு வர விரும்புகிறேன். நான் அங்கே சில கலைப் பள்ளிகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதைச் செய்யத்தான் நான் விரும்புகிறேன்."[99]

2009 டீன் சாய்ஸ் விருதுகள் பங்கேற்பு

2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10இல் நடைபெற்ற டீன் சாய்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் சைரஸ் "பார்ட்டி இன் த யு.எஸ்.ஏ."ஐப் பாடியதோடு, பாடல் கருக்களின் காரணமாக பிரச்சினைகளையும் தூண்டிவிட்டார்.[100][101][102] அவர் சினமூட்டும் வகையில் நடனமாடியதாகவும், ஐஸ்கிரீம் வண்டியின் மேல் இருந்த நடனக் கம்பைச் சுற்றி ஆடியதாகவும், அதில் ஒரு கருப்பொருள் அமெரிக்க கலாச்சாரத்திலான அவரது வேடிக்கையான குறுக்கீடு போன்று இருந்ததாகவும் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.[101][102][103][104] பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்று இருந்ததாக சிலர் எதிர்மறையான கருத்தைத் தெரிவித்தனர்; அதேசமயம் சைரஸ் அவற்றை வரவேற்றார்.[103][105] சைரஸை குற்றம்சாட்டிய மற்றவர்கள், மக்கள் ஒட்டியிருக்கும் படங்களின்மீது கவனத்தை செலுத்தக்கூடாது, அது அந்த கலைஞரை உண்மையில் இரு்பபதைக் காட்டிலும் மிகவும் பாலுறவைத் தூண்டுபவராகக் காட்டும் என்று கூறினர், அதற்குப் பதிலாக அவர ஆறு விருதுகளைப் பெற்றார்.[106][107] தி வால்ட் டிஸ்னி கம்பெனி அந்த நிகழ்ச்சியிலிருந்து தள்ளியிருக்கவே முயற்சித்தது.[38][108][109][110]

திரைப்படமாக்கம்

திரைப்படம்
வருடம்திரைப்படம்பாத்திரம்குறிப்புகள்
2003பிக் ஃபிஷ்ரூத்தி"டெஸ்டினி சைரஸ்" என்று குறிப்பிடப்பட்டார்
2007ஹைஸ்கூல் மியூசிக்கல் 2கேர்ள் அட் பூல்கேமியோ தோற்றம்
2008ஹன்னா மோண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்ட்ஸ் கான்செர்ட்சொந்த வேடம்முக்கியப் பாத்திரம்
போல்ட்பென்னிகுரல்
2009ஹன்னா மோண்டனா: தி மூவிமைலே ஸ்டுவர்ட்/ஹன்னா மோண்டனா பாத்திரத்தில் மைலே சைரஸ்முக்கியப் பாத்திரம்
2010தி லாஸ்ட் சாங்வெரோனிகா "ரோனி" மில்லர்பின்-தயாரிப்பு, முக்கியப் பாத்திரம்.
2011விங்ஸ்லாரல்முக்கியப் பாத்திரம். 2009 ஜூலை 14இல் உறுதிப்படுத்தப்பட்டது.
தொலைக்காட்சி
ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2003டாக்கைலேகவுரவத் தோற்றம்
2006தி சூட் லைப் ஆப் ஜேக் & காடிமேலே ஸ்டீவர்ட்"தட்ஸ் சோ சூட் லஃப் ஆஃப் ஹன்னா மோன்டனா" (குறுக்கு அத்தியாயம்)
2006–2010ஹன்னா மோண்டனாமைலே ஸ்டுவர்ட்/ஹன்னா மோண்டனா பாத்திரத்தில் மைலே சைரஸ்முன்னணி பாத்திரம்
2007தி எம்பரர்ஸ் நியூ ஸ்கூல்யாட்டாகுரல்
2007 டிஸ்னி சேனல் கேம்ஸ்சொந்த வேடம்டிஸ்னி சேனல் சிறப்பு நிகழ்ச்சி
2007–2008தி ரீப்பிளேஸ்மண்ட்ஸ்பிரபலமான நட்சத்திரம்குரல்
2008ஸ்டுடியோ டிசி: அல்மோஸ்ட் லைவ்சொந்த வேடம்டிஸ்னி சேனல் சிறப்பு நிகழ்ச்சி
2009தி சூட் லைஃப் ஆன் டெக்மைலே ஸ்டீவர்ட்"விஸார்ட்ஸ் ஆன் டெக் வித் மோண்டனா" (குறுக்கு அத்தியாயம்) ஒரு டிஸ்னி சேனல் சிறப்பு நிகழ்ச்சி

ஒலிப்பதிவாக்கங்கள்

ஸ்டுடியோ ஆல்பங்கள்
  • மீட் மைலே சைரஸ் (2007)
  • பிரேக்அவுட் (2008)

பிற ஆல்பங்கள்
  • ஹன்னா மாண்டனா & மைலே சைரஸ்: பெஸ்ட் ஆப் போத் வேர்ல்ட்ஸ் கான்செர்ட் (2008)
  • ஐடியூன்ஸ் லைப் ஃப்ரம் லண்டன் (2009)
  • தி டைம் ஆஃப் அவர் லைவ்ஸ் (2009)

விருதுகளும் பரிந்துரைகளும்

குறிப்புகள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மைலே சைரஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
Jamie Lynn Spears
for Zoey 101
Kids' Choice Awards Favorite TV Actress
2007
for Hannah Montana
பின்னர்
Herself
for Hannah Montana
முன்னர்
America Ferrera
for Ugly Betty
Teen Choice Awards TV Actress Comedy
2007
for Hannah Montana
பின்னர்
Herself
for Hannah Montana
முன்னர்
Herself
for Hannah Montana
Teen Choice Awards TV Actress Comedy
2008
for Hannah Montana
பதவியில் உள்ளார்
முன்னர்
Fergie
Teen Choice Awards Music Female Star
2008
பதவியில் உள்ளார்
முன்னர்
Christa B. Allen
for Cake
Young Artist Awards Best Performance in a TV Series - Leading Young Actress
2008
for Hannah Montana
பதவியில் உள்ளார்
முன்னர்
Beyoncé Knowles
Kids' Choice Awards Favorite Female Singer
2008
பின்னர்
Herself
முன்னர்
Herself
for Hannah Montana
Kids' Choice Awards Favorite TV Actress
2008
for Hannah Montana
பின்னர்
Selena Gomez
for Wizards of Waverly Place
முன்னர்
Ashley Tisdale
for The Suite Life of Zack & Cody
UK Kids' Choice Awards Favorite Female TV Star
2008
பதவியில் உள்ளார்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைலே_சைரஸ்&oldid=3848040" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்