மைக்கேல் ரோபாஸ்

மைக்கேல் ரோபாஸ் (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் [1] மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர்.[2] 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெஃப்ரி ச.ஹால் மற்றும் மைக்கேல் வாரன் யங் உடன் இனைந்து ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.[3][4]

மைக்கேல் ரோபாஸ்
மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசுக் கூட்டத்தில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017
பிறப்புமைக்கேல் மோரிஸ் ரோபாஸ்
மார்ச்சு 7, 1944 (1944-03-07) (அகவை 80)
Kansas City, மிசூரி, U.S.
தேசியம்அமெரிக்கர்
துறைமரபியல்
மரபனுயிரியல்
பணியிடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
பிரான்டிஸ் பல்கலைகழகம்
ஹார்வேர்டு ஹூக்ஸ் மருத்துவ கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்(B.S.)
மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்(MS, PhD)
ஆய்வு நெறியாளர்Sheldon Penman
விருதுகள்நரம்பியலுக்கான குருபர் பரிசு(2009)
நோபல் பரிசு (2017)
துணைவர்Nadja Abovich

வாழ்க்கை

மைக்கேல் ரோபாஸ் கான்சாஸ் நகரம், மிசோரியில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ஹிலி மற்றும் ஆல்பிரட் ரோபாஸ் யூத அகதிகளாக நாஜி ஜெர்மனியில் இருந்து 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர்.[5][6] ரோபாஸ் குடும்பம் பாஸ்டன் நகரத்திற்கு குடிபெயர்ந்தது அப்போது அவருக்கு இரண்டு அகவை ஆகியிருந்தது. அதிலிருந்து அவர் பாஸ்டன் ரெட் சாக்ஸ் பேஸ் பால் அணியின் தீவிர ரசிகராக இருந்தார். ஆரம்பத்தில் ரோபாஸிற்கு கணிதத்தில் விருப்பமிருந்தாலும் கலிபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியில் (Caltech) உயிர்பியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் நார்மேன் டேவிட்சன் ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தப் பின்னர் அவருக்கு உயிர்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1965 ஆம் ஆண்டில் Caltech வேதியல் பாடத்தில் பட்டம் பெற்றார். ஃபல்பிரைட் உதவித்தொகை மூலம் பாரிஸில் ஓர் ஆண்டு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார் பின் 1970 ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் உயிர் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரோபாஸ் தனது சக ஆராய்ச்சியாளரான நட்ஜா அபோவிச்சை திருமணம் புறிந்தார். பெளலா மற்றும் தான்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைக்கேல்_ரோபாஸ்&oldid=3568947" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்