மேஜர் சந்திரகாந்த்
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] . கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2]வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் ஜெயலலிதா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார்.
மேஜர் சந்திரகாந்த் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏவிஎம் புரொடக்சன்சு |
இசை | வி. குமார் |
நடிப்பு | மேஜர் சுந்தர்ராஜன் நாகேஷ் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நீளம் | 4425 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்திடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணயம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த்.
கதாபாத்திரங்கள்
- மேஜர் சந்திரகாந்தாக மேஜர் சுந்தரராஜன்
- மோகனாக நாகேஷ்
- ஸ்ரீகாந்தாக முத்துராமன்
- விமலா பிரபுவாக ஜெயலலிதா
- ரஜினிகாந்தாக ஏ. வி. எம். ராஜன்
பாடல்கள்
இப்படத்தில் வி.குமாரின் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[3]
- நேற்று நீ - டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
- ஒரு நாள் யாரோ - பி. சுசீலா
- நானே பனி நிலவு - பி. சுசீலா
- கல்யாண சாப்பாடு போடவா - டி. எம். சௌந்தரராஜன்
- துணிந்து நில் - சீர்காழி கோவிந்தராஜன்
துணுக்குகள்
- கே. பாலச்சந்தரின் மேடை நாடகங்களில் ஒன்றான மேஜர் சந்திரகாந்தை தழுவியதே இப்படம்.
- நடிகர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்த படம் மேஜர் சந்திரகாந்த்.
- நடிகையாக ஜெயலலிதா கே.பாலச்சந்தரின் திரைப்படத்தில் நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
மேற்கோள்கள்
உசாத்துணை
- மேஜர் சந்திரகாந்த் பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்