மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Harry Reid International Airport, (ஐஏடிஏ: LASஐசிஏஓ: KLAS, எப்ஏஏ LID: LAS)) ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் மற்றும் கிளார்க் கவுன்ட்டி பகுதிகளுக்கு சேவை வழங்கும் முதன்மை வணிகமய வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் லாஸ் வேகஸ் நகரின் மையத்திலிருந்து ஐந்து மைல்கள் (8 கிமீ) தெற்கில் கிளார்க் கவுன்ட்டியில் உள்ள அரசமைப்பில்லா பாரடைஸ் பகுதியில் அமைந்துள்ளது. 2,800 ஏக்கர்கள் (1,100 ha) பரப்பளவில் விரிந்துள்ள இந்த நிலையத்தில் நான்கு ஓடுபாதைகள் உள்ளன. மெக்காரன் நிலையத்தின் உரிமையாளராக கிளார்க் கவுன்ட்டி உள்ளது; கிளார்க் கவுன்ட்டி வான்போக்குவரத்து துறையால் (DOA) இயக்கப்படுகிறது. இந்த வானூர்தி நிலையம் பெப்ரவரி 2012 இலிருந்து இசுபிரிட் ஏர்லைன்சின் பராமரிப்பு தளமாக உள்ளது.[3] முன்னாள் நெவாடா செனட்டர் பேட் மெக்காரன் நினைவாக இந்த வானூர்தி நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.

மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்கிளார்க் கவுன்ட்டி
சேவை புரிவதுலாஸ் வேகஸ்
அமைவிடம்பாரடைஸ், நெவாடா
கவனம் செலுத்தும் நகரம்
  • அல்லெஜியன்ட் ஏர்
  • சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்
  • இசுபிரிட் ஏர்லைன்ஸ்
உயரம் AMSL2,181 ft / 665 m
இணையத்தளம்www.McCarran.com
நிலப்படம்
எஃப்ஏஏ நிலைய வரைபடம்
எஃப்ஏஏ நிலைய வரைபடம்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீட்டர்
1L/19R8,9852,739பைஞ்சுதை
1R/19L9,7752,979பைஞ்சுதை
7L/25R14,5104,423அசுபால்ட்டு
7R/25L10,5263,208பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2012)
வானூர்தி இயக்கங்கள்527,739
பயணிகள்40799830
வானூர்தி அடிப்படையில்129
மூலங்கள்: ஏசிஐ[1] மற்றும் எப்ஏஏ[2]
நுழைவாயில் பதாகை
மெக்காரன் பயணிகள் தங்கள் உடமைகளுக்காக காத்திருக்கும் கூடத்தில் வான் போக்குவரத்து வரலாற்று பொருட்கள் தொங்க விடப்பட்டுள்ளதைக் காணலாம்.

2012இல் மெக்காரன் பயணிகள் போக்குவரத்தில் உலகின் 24வதாகஉள்ளது. இந்த நிலையம் வழியே 2012இல் 40,799,830 பயணிகள் பயணித்துள்ளனர்.[1] 527,739 வானூர்தி ஏற்றங்களையும் இறக்கங்களையும் கையாளும் இது வானூர்தி போக்குவரத்தின் அடிப்படையில் உலகின் 8வது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக விளங்குகிறது. [1] மெக்காரன் தனது நிதித்தேவைகளை தானே சம்பாதித்துக் கொள்வதால் கவுன்ட்டியின் பொதுநிதியிலிருந்து எந்த மானிய உதவியும் பெறுவதில்லை.[4]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்