மூன்றாம் ஆகாகான்

இஸ்மாயிலி பிரிவின் 48வது இமாம் (1877-1957)

சர் சுல்தான் முகமது சா, மூன்றாம் ஆகா கான் (Sir Sultan Mahomed Shah, Aga Khan III) (2 நவம்பர் 1877 – 11 சூலை 1957) இசுலாத்தின் நிசாரி இசுமாயிலி பிரிவின் 48வது இமாம் ஆவார். இவர் அகில இந்திய முசுலிம் லீக்கின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் முதல் நிரந்தரத் தலைவராகவும் இருந்தார். இவரது குறிக்கோள் முசுலிம்களின் முன்னேற்றமும் இந்தியாவில் முசுலிம் உரிமைகளைப் பாதுகாத்தலுமாகும். லீக், 1930களின் பிற்பகுதி வரை, ஒரு பெரிய அமைப்பு அல்ல, ஆனால் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த 'ஐக்கிய மாகாணங்களின்' (இன்றைய உத்தரப் பிரதேசம்) நில மற்றும் வணிக முஸ்லிம் நலன்களைக் கொண்டிருந்தது.[2] அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் முஸ்லிம்கள் முதலில் மேம்பட்ட கல்வி மூலம் தங்கள் சமூக மூலதனத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற சர் சையது அகமது கானின் நம்பிக்கையை இவர் பகிர்ந்து கொண்டார். 'இரு தேசக் கோட்பாடு' என்பதை தவிர்த்து முஸ்லிம்களை இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் தேசத்தவராகக் கருதுமாறு ஆகா கான் பிரித்தானியவின் இந்தியப் பேரரசிடம் கேட்டுக்கொண்டார். 1912இல் இவர் முஸ்லின் லீக்கின் தலைவர் பதவியை துறந்த பிறகும், அதன் கொள்கைகளிலும், நிகழ்ச்சி நிரல்களிலும் பெரும் செல்வாக்கை செலுத்தினார். இவர் 1932இல் இந்தியாவை உலக நாடுகள் சங்கத்தில் உறுப்பினரானார். பின்னர், 1937 முதல் 1938 வரை அதன் தலைவராக இருந்தார்.[3]

Prince

மூன்றாம் ஆகாகான்
1936இல் மூன்றாம் ஆகாகான்
48வது நிசாரி இசுமாயிலி சமூகத்தின் இமாம்
முன்னையவர்இரண்டாம் ஆகா கான்
பின்னவர்நான்காம் ஆகா கான்
Member (later President) of the Assembly of The உலக நாடுகள் சங்கம்
பதவியில்
1934–1937
2nd President of the அகில இந்திய முசுலிம் லீக்
பதவியில்
1906 – (not known)
முன்னையவர்Khwaja Salimullah
சுய தரவுகள்
பிறப்பு(1877-11-02)2 நவம்பர் 1877[1]
இறப்பு11 சூலை 1957(1957-07-11) (அகவை 79)[1]
நினைவிடம்ஆகா கான் கல்லறை, அஸ்வான், எகிப்து
சமயம்சியா இசுலாம்
மனைவி
  • Shahzadi Begum
  • Cleope Teresa Magliano
  • Andrée Joséphine Carron
  • Begum Om Habibeh Aga Khan (birth name, Yvonne Blanche Labrousse)
குழந்தைகள்
  • Giuseppe Mahdi Khan
  • Aly Salman Aga Khan
  • Sadruddin Aga Khan
பெற்றோர்s
சமயப் பிரிவுIsma'ilism
பாடசாலைநிசாரி இசுமாயிலி
வம்சம்பாத்திம கலீபகம்
வேறு பெயர்(கள்)சுல்தான் முகமது சா
பதவிகள்
Initiation1885
Post48வது நிசாரி இமாம்

ஆரம்ப கால வாழ்க்கை

இவர், பிரித்தானிய இந்தியாவில் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் (இப்போது பாக்கித்தான் ) இரண்டாம் ஆகா கான் - அவரது மூன்றாவது மனைவி,[4] ஈரானின் ( கஜார் வம்சம் ) நவாப் அலியா ஷம்சுல்-முலுக் ஆகியோருக்கு பிறந்தார்.

ஏடன் கல்லூரியிலும், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.[5]

பணிகள்

1885 ஆம் ஆண்டில், ஏழு வயதில், தனது தந்தைக்குப் பின் சியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் இமாம் ஆனார்.[3] 1930 முதல் 1932 வரை இலண்டனில் நடந்த மூன்று இந்திய வட்ட மேசை மாநாடுகளின் போது, இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

1934 ஆம் ஆண்டில், இவர் ஐக்கிய இராச்சியத்தின் இறையாண்மை ஆலோசகர்கள் குழுவின் உறுப்பினராக்கப்பட்டு, உலக நாடுகள் சங்கத்தின் (1934-37) உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1937இல் அதன் தலைவரானார்.[3]

சர் சையது அகமது கானின் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.[6] சர் சையதுடன் சேர்ந்து, அலிகார் பல்கலைக்கழகத்தின் ஆதரவாளராகவும் அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். இதற்காக இவர் அயராது நிதி திரட்டினார். மேலும் தனது சொந்த பணத்தில் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினார்.[7] ஆகா கானை ஒரு இஸ்லாமிய நவீனத்துவவாதியாகவும் அலிகார் இயக்கத்தின் புத்திஜீவியாகவும் கருதலாம்.[8] ஒரு மத நிலைப்பாட்டில், ஆகா கான் இஸ்லாத்திற்கு நவீனத்துவ அணுகுமுறையைப் பின்பற்றினார்.<[8]

மதத்திற்கும் நவீனத்துவத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று இவர் நம்பினார். மேலும் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்களை வலியுறுத்தினார். [9] மேற்கத்திய சமுதாயத்தை மொத்தமாக முஸ்லிம்களைக் கொண்டு பிரதிபலிப்பதை இவர் எதிர்த்த போதிலும், மேற்கு நாடுகளுடன் அதிகரித்த தொடர்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாக பயனளிக்கும் என்று நம்பினார். [10] மேற்குலக மெய்யியலிலும் கருத்துக்களிலும் அறிவார்ந்தவராக இருந்தார். அவர்களுடன் ஈடுபடுவது இஸ்லாமிய சிந்தனைக்குள் ஒரு மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பினார். [10]

பர்தாவுக்கும், ஜெனானாவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்தார். இது அடக்குமுறை என்றும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்றும் உணர்ந்தார்.[11] இவர் தனது இஸ்மாயிலியை பின்பற்றுபவர்களுக்கு பர்தாவும் முகத்திரையையும் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்தார். ஆகா கான், பலதார மணத்தை கட்டுப்படுத்தல், விதவைகளுக்கு திருமணத்தை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தை தடை செய்தல் ஆகியவற்றை ஊக்குவித்தார்.[11] இவர் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை பெண்களுக்கு மிகவும் சமமாக மாற்றினார்.[11] ஒட்டுமொத்தமாக, இவர் அனைத்து தேசிய நடவடிக்கைகளிலும் பங்கேற்கவும், அவர்களின் முழு மத, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராடவும் பெண்களை ஊக்குவித்தார்.[12]

இன்று, ஆகா கானின் சீர்திருத்தங்கள் காரணமாக, இஸ்மாயிலை சமூகம் இஸ்லாத்தின் மிகவும் முற்போக்கான, அமைதியான வளமான கிளைகளில் ஒன்றாக திகழ்கிறது. [13]

பந்தயக் குதிரைகளின் உரிமையாளர்

இவர், பதினாறு பந்தய குதிரைகளின் உரிமையாளராக இருந்தார். இவர் பதின்மூன்று முறை பிரித்தானிய குதிரைப் பந்தயங்களின் உரிமையாளராக இருந்தார். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பென் பிம்லோட்டின் கூற்றுப்படி, ஆகா கான் 1950 ஆம் ஆண்டில் ஹர்ஸ்ட் பார்க் குதிரைப் பந்தய மைதானத்தில் வென்ற ஆஸ்ட்ராகான் என்ற ஒரு பெண் குதிரையை மகாராணிக்கு பரிசாக வழங்கினார் எனத் தெரிகிறது.

1926லிருந்து ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அயர்லாந்தின் டப்லினில் உள்ள அரச கழக டப்லின் சங்கத்தின் வருடாந்திர குதிரை கண்காட்சியில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு 1926ஆம் ஆண்டில் ஆகா கான் ஒரு கோப்பையை வழங்கினார்.[14] இது அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் இருந்து போட்டியாளர்களை ஈர்க்கிறது. மேலும், ஐரிஷ் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

ஆகா கானின் கல்லறை - அஸ்வான், எகிப்து.
நைல் நதியில் ஆகா கானின் கல்லறை.

மரணம்

ஜூலை 11, 1957 அன்று இவர் இறந்தார். இவர் எகிப்தின் அஸ்வானில் உள்ள நைல் நதியில் அகா கானின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

மரபு

பாக்கித்தானின் அஞ்சல் துறை 1977 ஆம் ஆண்டில் இவரது நினைவாக சிறப்பு 'மூன்றாம் ஆகா கானி பிறப்பு நூற்றாண்டு' என்ற பெயரில் அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.[15] மேலும் 1990 ஆம் ஆண்டில் தனது 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' தொடரில் இவரது நினைவாக ஒரு அஞ்சல் தலையையும் வெளியிட்டது.[3]

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  •  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Bhownagree, Mancherjee Merwanjee (1911). "Aga Khan I. s.v. Aga Khan III.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. Cambridge University Press. 
  •  Brown, Frank Herbert (1922). "Aga Khan III". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது).  [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]
  • Daftary, F., "The Isma'ilis: Their History and Doctrines", Cambridge University Press, 1990.
  • Naoroji M. Dumasia, A Brief History of the Aga Khan (1903).
  • Aga Khan III, "The Memoirs of Aga Khan: World Enough and Time", London: Cassel & Company, 1954; published the same year in the United States by Simon & Schuster.
  • Edwards, Anne (1996). "Throne of Gold: The Lives of the Aga Khans", New York: William Morrow, 1996
  • Naoroji M. Dumasia, "The Aga Khan and his ancestors", New Delhi: Readworthy Publications (P) Ltd., 2008
  • Valliani, Amin; "Aga Khan's Role in the Founding and Consolidation of the All India Muslim League", Journal of the Pakistan Historical Society (2007) 55# 1/2, pp 85–95.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aga Khan III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மூன்றாம்_ஆகாகான்&oldid=3849369" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்