மிராஷி புவா

மிராஷி புவா (Mirashi Buwa) என்று பொதுவாக அறியப்படும் யசுவந்த் சதாசிவ புவா (1883 - 1966 சனவரி 5) இவர் ஓர் இந்திய காவியப் பாடகரும் காயல் -பாணியின் இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார் . விஷ்ணு திகம்பர் பலூசுகருடன் குவாலியர் கரானாவின் பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகரின் (1849-1926) புகழ்பெற்ற சீடராக இருந்தார். [1] [2] இவர் வேகமான குரலுக்காக அறியப்பட்டார். இவர் ஒரு நடிகராகவும் இருந்தார். மேலும் சங்கீத நாடகம், மராத்தி நாடகம் போன்ற பலவற்றில் நடித்துள்ளார் .

சுயசரிதை

இவர் மகாராட்டிராவின் தற்போதைய கோலாப்பூர் மாவட்டத்தில் இச்சல்கரஞ்சியில் 1883 இல் பிறந்தார். [3] 1911 முதல் 1932 வரை புனேவில் உள்ள "நாட்டியகலா பிரவர்தக் மண்டலி" என்ற நாடக நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும் ஏராளமான சீடர்களுக்கு இசையையும் கற்றுக் கொடுத்தார்.

1961 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி விருதினை இவருக்கு வழங்கியது. [4]

இவர் 1966 சனவரி 5இல் இறந்தார். [5]

சீடர்கள்

இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் விநாயக்புவா உத்தர்கர், யசுவந்த்புவா ஜோசி மற்றும் மும்பையைச் சேர்ந்த ராஜரம்புவ பரட்கர் ஆகியோர் அடங்குவர் . [1]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிராஷி_புவா&oldid=3074226" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்