மின் வன்கடத்தி

மின் கடத்தாப்பொருள் அல்லது மின் வன்கடத்தி (இலங்கைத் தமிழ்: காவலி) என்பது மின் ஆற்றலை கடத்தாத பொருட்களாகும். மின் ஆற்றலை நன்றாக கடத்தும் பொருள் மின்கடத்தி எனப்படுகிறது.

வன்கடத்தி உறையை நீக்கி செப்புக் கம்பிகள் தெரிவது
உயர் அதிர்வெண் மின்னலை கடத்த வல்ல மின் வடத்தில் உள்ள வன்கடத்திகள்

மரப்பலகை, கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் (நெகிழி), பீங்கான் போன்ற பொருட்கள் மின் ஆற்றலை நன்றாக கடத்தாதவை. மின் ஆற்றலை நாம் நன்கு பாதுகாப்போடு பயன் படுத்துவதற்கு இந்த வகையான மின் கடத்தாப்பொருள்கள் மிகத் தேவையானவை.

மின் ஆற்றலை நன்றாக கடத்தும் செப்பு, அலுமினியம் போன்ற கடத்திப்பொருள்களால் செய்யப்பட கம்பி வழியே மின்னாற்றல் மின்னோட்டமாகச் செல்லும் பொழுது, நமக்கு மின் தாக்கு ஏதும் நேராமலும், அப்படி ஓடும் மின் ஆற்றல் வீணே போகும் வழிகளில் சிதறிப்போகாமலும் காப்பது மின் கம்பியைச் சுற்றி உறைபோலும் உள்ள இவ் வன்கடத்திகள் தாம். இவ்வகை வன்கடத்திகள் இல்லாவிடில் நம்மால் மின் ஆற்றலைப் பயன்படுத்துவது மிகக்கடினம்.

தொலைக்காட்சி போன்ற தொடர்பியல் கருவிகளுக்கான மின்னாற்றல் முன்னும் பின்னுமாக அலையும் மாறு மின்னோட்ட வகையைச் சேர்ந்த மின் சைகைகளால் ஆனவை. இவ்வகை மின் சைகைகள் மிகுந்த விரைவுடைய அலைவெண் கொண்டவை, எனவே இதற்கென சிறப்பான மின்வடம் உள்ளது. இவ்வகை மின்வடங்களிலும் மின்கடத்தாப்பொருள் வன்கடத்திகள் பயன்படுகின்றன. இதனையும் படத்தில் பார்க்கலாம்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்_வன்கடத்தி&oldid=2740431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்