மின்மக் காட்சி


மின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) (PDP ) என்பது பெரிய டிவி காட்சிகளில் (80 செமீ அல்லது அதற்கும் பெரியது) பொதுவானதாக இருக்கும் தட்டையான சட்டக் காட்சி ஆகும். இது மேன்மையான வாயுக்களின் கலவையைக் கொண்ட கண்ணாடியின் இரண்டு சட்டங்களுக்கு இடையில் பல சிறிய செல்களைக் கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாயு மின்னியல் ரீதியாக மின்மமாக மாறுகிறது. மின்மமானது புறவூதா ஒளிகளை உமிழ்கிறது. அது பின்னர் பாஸ்பர்களை பார்க்கக்கூடிய ஒளியாக உமிழ்வதற்குச் செயல்படுத்துகிறது. மின்மக் காட்சிகளை LCDக்களுடன் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அது மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு மெல்லிய எடை கொண்ட தட்டையான காட்சி வெளிப்பாடு ஆகும். அது நின்றொளிர்தல் சார்ந்ததல்ல.[1][2][3]

பொதுப் பண்புகள்

மின்மக் காட்சிகள் பிரகாசமாக இருக்கின்றன (நிரல் கூறுக்கான 1,000 ஒளியலகு அல்லது அதற்கும் அதிகமானவை). அகன்ற வர்ண வரம்பினைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை 150 அங்குல (3.8 மீ) மூலை விட்டங்கள் வரை நன்கு பெரியதாக உருவாக்க முடியும். LCD திரையின் ஒளிராத பகுதிகளில் மெலிதான சாம்பல் நிறத்துடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் குறைவான ஒளிர்வு "இருட்டறை" அடர் நிலையைக் கொண்டிருக்கின்றன. காட்சிச் சட்டம் மட்டுமே சுமார் 6 செமீ (2.5 அங்குலம்) அடர்த்தி கொண்டதாக இருக்கிறது. பொதுவாக சாதனத்தின் ஒட்டுமொத்த அடர்த்தியும் (மின்னணுவியலும் சேர்த்து) 10 செமீட்டருக்கும் (4 அங்குலங்கள்) குறைவாகவே இருக்கிறது. மின்மக் காட்சிகள் ஒரு CRT அல்லது ஒரு AMLCD தொலைக்காட்சி போன்று ஒரு சதுர மீட்டருக்கு அதிகமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.[சான்று தேவை] படத்தின் உட்பொருள் சார்ந்து மின் நுகர்வு அதிகளவில் மாறுபடுகிறது. பிரகாசமான காட்சிகள் அடர்ந்த காட்சிகளைக் காட்டிலும் கணிசமான அளவில் அதிகமான மின்னாற்றலை எடுத்துக் கொள்ளும். இது CRTக்களிலும் கூட ஏற்படுபவை ஆகும். பொதுவான மின்னாற்றல் நுகர்வு 50-அங்குல (127 செமீ) திரைக்கு 400 வாட்ஸ் ஆகும். சினிமா முறையில் அமைக்கப்பட்டிருக்கும் போது 50-அங்குல (127 செமீ) காட்சிக்கான மின்னாற்றல் நுகர்வு 200 முதல் 310 வாட்ஸ் ஆகும். பெரும்பாலான திரைகளில் இயல்பிருப்பாக 'ஷாப்' முறை அமைக்கப்பட்டிருக்கும். அது 'வீட்டில்' அமைக்கப்படும் குறைவான உச்சமுடைய ஒளிர்வைக் காட்டிலும் கிட்டத்த இரண்டு மடங்கு அதிகமான மின்னாற்றல் (சுமார் 500-700 வாட்ஸ்) நுகர்வைக் கொண்டிருக்கும்.[4] பேனசோனிக் (Panasonic) அதன் 2009 ஆண்டு வரிசையான வைரா பிளாஸ்மா HDTVக்களில் நியோ-PDP திரைகளைப் பயன்படுத்தியதன் மூலமாக மின்னாற்றல் நுகர்வைப் பெருமளவு குறைத்தது. கொடுக்கப்பட்ட காட்சி அளவுகளுக்கு அதே அளவு ஒட்டுமொத்த ஒளிர்தல் கிடைப்பதற்கு PDPக்கள் பேனசோனிக்கின் முந்தைய மின்மத் தொலைக்காட்சி வரிசைகளின் மின்னாற்றல் நுகர்வில் பாதியை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என பேனசோனிக் கூறியிருக்கிறது. சமீபத்திய தலைமுறை மின்மக் காட்சிகளின் ஆயுட்காலம் சரியான காட்சி நேரத்தில் 100,000 மணி நேரங்களாக அல்லது ஒரு நாளைக்கு 10 மணி நேரப் பயன்பாடு என்ற கணக்கில் 27 ஆண்டுகள் வரும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த கண்க்கீட்டு நேரம் ஆரம்ப மதிப்பின் பாதிக்கு அதிகபட்ச பட ஒளிர்தல் குறையும் போது முடிந்து விடுகிறது.[5]

மின்மக் காட்சித் திரைகள் கண்ணாடியினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை LCD திரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருளைக் காட்டிலும் மிகவும் மிதமானதாகப் பிரதிபலிக்கும். இது பார்க்கப்படும் பகுதியில் பிரதிபலிக்கும் பொருளில் இருந்து கண்ணைக் கூசும் வெளிச்சம் ஏற்படுவதற்குக் காரணமாகிறது. பேனசோனிக் போன்ற நிறுவனங்கள் அவர்களது புதிய மின்மத் திரைகள் கண்கூசா வடிகட்டிப் பொருட்களுடன் வந்திருப்பதாகக் கூறுகின்றன.[சான்று தேவை] தற்போது மின்மச் சட்டங்களை 32 அங்குலத்திற்கு குறைவான அளவுகளில் சிக்கனமான முறையில் உற்பத்தி செய்ய இயலாது. சில நிறுவனங்கள் மின்ம EDTVக்களை இந்த அளவுக்குச் சிறியதாக உருவாக்கும் திறன் பெற்றிருக்கும் போதும் பெரிய பெரிய காட்சிகளை நோக்கிய மனப்பாங்கின் காரணமாக 32 அங்குல திரை அளவு துரிதமாக மறைந்து வருகின்றது. அவற்றின் LCD ஒத்த பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பருமனாகவும் அடர்த்தியாகவும் கருதப்பட்ட போதும் பேனசோனிக்கின் Z1 மற்றும் சேம்சங்கின் B860 வரிசைகள் போன்ற சில அமைப்புகளில் மிகவும் மெலிதாக ஒரு அங்குல அடர்த்தியில் உருவாக்கப்பட்டிருப்பது அவற்றை LCDக்களுடன் ஒப்பிடும் வகையில் இருக்கின்றன.

CRT, OLED, LCD, DLP, SED, LED மற்றும் FED உள்ளிட்டவை இதனுடன் போட்டியிடும் காட்சி நுட்பங்கள் ஆகும்.

மின்மக் காட்சி நன்மைகள் மற்றும் தீமைகள்

நன்மைகள்

  • மெல்லிய பக்கத்தோற்றம்
  • சுவரில் மாட்ட இயலும்
  • பின்புற வெளிப்பாடுத் தொலைக்காட்சிகளைக் காட்டிலும் எடை குறைவான மற்றும் குறைவான பருமன்
  • LCDக்களைக் காட்டிலும் சிறந்த மற்றும் மிகவும் துல்லியமான நிறப்படியெடுத்தல் கிடைக்கும் (68 பில்லியன்/236 மற்றும் 16.7 மில்லியன்/224)[3][6]
  • இதில் உருவாகும் ஆழ்ந்த உண்மையான அடர்வுகள் மேன்மையான முரண் விகிதாச்சாரங்களை அனுமதிக்கின்றன (1:2,000,000 வரை)[3][6][7]
  • LCD ஐக் காட்டிலும் மிகவும் அதிகமான அகலாமாகப் பார்க்கும் கோணங்கள் (178° வரை); உருவங்கள் உயர் கோணங்களில் LCDக்களில் ஏற்படுவதைப் போலல்லாமல் தாழ்வாக்கத்தினால் பாதிக்கப்படுவதில்லை[3][6]
  • மெய்நிகராக இயக்கத் தெளிவின்மை இல்லை. மிகவும் அதிகமான புதுப்பித்தல் விகிதங்கள் மற்றும் வேகமான பிரதிவினை நேரம் கொண்டது. கணிசமான அளவிளான துரிதமான இயக்கத்துடன் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் போது மேண்மையானச் செயல்பாட்டைத் தருகிறது[3][6][8][9]

தீமைகள்

  • ஆரம்பகால மாடல்கள் திரை எரிந்துவிடுதல் மற்றும் பிம்பம் நீடித்திருத்தல் ஆகியவற்றினால் எளிதாகப் பாதிக்கப்படுகின்றன (எனினும் புதிய மாடல்கள் பச்சை பாஸ்பர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் பிக்ஸல் ஷிஃப்டிங் போன்ற உள்ளிணை நுட்பங்கள் மூலமாக இது நீக்கப்பட்டிருக்கிறது )[7][10]
  • பழைய[தெளிவுபடுத்துக] மாடல்களில் பாஸ்பர்கள் காலப்போக்கில் ஒளிர்வதை இழந்துவிடும். இதன் விளைவாக பூர்த்தியான உருவ ஒளிர்வில் படிப்படியாக சிதைவு ஏற்படும் (புதிய மாடல்கள் இதற்கு மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. அவை பழைய CRT நுட்பத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாக 60,000 மணி நேரங்கள் வரை உயர்ந்த வாழ்நாளைக் கொண்டிருக்கின்றன)[5][7][10]
  • "பெரும் பரப்பு ஒளிச்சிமிட்டலினால்" எளிதில் பாதிக்கப்படுகின்றன[11]
  • பொதுவாக 32 அங்குலத்திற்கும் குறைவான சிறிய அளவுகளில் கிடைப்பதில்லை[3][6]
  • பிரகாசமான அறைகளில் கண்ணைக் கூசும் பிரதிபலிப்பினால் எளிதில் பாதிக்கப்படுகின்றன
  • கண்ணாடி திரைக்கு வாயுக்களை வைப்பதற்கான தேவை இருப்பதன் காரணமாக LCD ஐக் காட்டிலும் கனமானதாக இருக்கின்றன
  • சராசரியாக LCD TV ஐக் காட்டிலும் அதிகமான மின்னாற்றலைப் பயன்படுத்துகின்றன
  • திரையின் உட்புற வாயுக்கள் மற்றும் உயரத்தில் ஏற்படும் காற்றழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள மாறுபட்ட அழுத்தம் காரணமாக அதிக உயரங்களில் சிறப்பான செயல்புரிவதில்லை. இது சலசலப்பு இரைச்சம் ஏற்படுவதற்குக் காரணமாகலாம். உற்பத்தியாளர்கள் உயரக்கூறுகளைக் குறிப்பிடுவதற்காக அவர்களின் திரைகளை தரநிர்ணயம் செய்கின்றனர்.[12]
  • AM வானொலி அல்லது அமெச்சூர் வானொலி இயக்குபவர்கள் (Hams) அல்லது ஷார்வேவ் லிசனர்கள் (Shortwave Listeners) (SWL) ஆகியவற்றைக் கேட்க விரும்பினால் இந்தக் கருவிகளில் இருந்து ரேடியோ அதிர்வெண் குறுக்கீடு (Radio Frequency Interference) (RFI) ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது செயலிழக்க செய்யலாம்.[13]

நேடிவ் மின்மத் தொலைக்காட்சி பிரிதிறன்கள்

மின்மத் தொலைக்காட்சிகள் போன்ற நிலையான பிக்சல் காட்சிகள் காட்சிச் சட்டத்தின் நேடிவ் பிரிதிறனுக்கு ஒவ்வொரு உள்ளீட்டுச் சமிக்ஞையின் விடியோ உருவத்தையும் அளவிடுகின்றன. மின்மக் காட்சி சட்டங்களுக்கான மிகவும் பொதுவான நேடிவ் பிரிதிறன்கள் 853×480 (EDTV), 1,366×768 அல்லது 1,920×1,080 (HDTV) ஆகியவையாக இருக்கின்றன. அதன் விளைவாக படத்தரம் ஒவ்வொரு காட்சி உற்பத்தியாளர் மூலமாக விடியோ அளவுச் செயலி மற்றும் மேலளவி மற்றும் கீழளவி நெறிமுறைகளின் செயல்பாடு சார்ந்து மாறுபடுகின்றது.[14][15]

மேம்பட்ட வரையறை மின்மத் தொலைக்காட்சி

ஆரம்ப கால மின்மத் தொலைக்காட்சிகள் நேடிவ் பிரிதிறன் 840×480 (நிறுத்தப்பட்டது) அல்லது 853×480 மற்றும் அவற்றின் நேடிவ் காட்சிப் பிரிதிறனுக்கு பொருந்தும் வகையில் அவற்றின் உள்ளீட்டு உயர் வரையறை சமிக்ஞைகளை கீழளவிடுதல் ஆகியவற்றுடன் கூடிய மேம்பட்ட வரையறை (enhanced-definition) (ED) கொண்டதாக இருந்தன.[16]

ED பிரிதிறன்கள்

  • 840×480
  • 853×480

உயர் வரையறை மின்மத் தொலைக்காட்சி

ஆரம்ப கால உயர் வரையறை (high-definition) (HD) மின்மக் காட்சிகள் 1024x1024 பிரிதிறன் கொண்டிருந்தன. மேலும் அவை ஃபூஜிட்சு/ஹிட்டாச்சி நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட ஆல்டர்னேட் லைட்டிங் ஆஃப் சர்ஃபேசஸ் (ALiS) சட்டங்களைக் கொண்டிருந்தன.[17][18] இவை சதுரமல்லாத பிக்ஸல்களுடன் இடைப்பின்னிய காட்சிகளாக இருந்தன.[19]

நவீன HDTV மின்ம தொலைக்காட்சிகள் பொதுவாக பல 42 அங்குல மின்மத் திரைகளில் காணப்படும் 1,024×768, பல 50 அங்குலம், 60 அங்குலம் மற்றும் 65 அங்குல மின்மத் திரைகளில் காணப்படும் 1,280×768, 1,366×768 அல்லது 42 அங்குலத்தில் இருந்து 103 அங்குலம் வரையிலான மின்மத் திரை அளவுகளில் காணப்படும் 1,920×1,080 போன்ற பிரிதிறன்களைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சிகள் பொதுவாக சதுர பிக்ஸல்களுடன் கூடிய முற்போக்குக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை அவற்றின் உள்ளீட்டு வழக்கமான வரையறை சமிக்ஞைகளை அவற்றின் நேடிவ் காட்சிப் பிரிதிறனுக்கு மாற்றுகின்றன.[20]

HD பிரிதிறன்கள்

  • 1,024×1,024
  • 1,024×768
  • 1,280×768
  • 1,366×768
  • 1,280×1080
  • 1,920×1,080

மின்மக் காட்சிகள் வேலை செய்யும் விதம்

மின்மக் காட்சி சட்டத்தின் பொதிவு

மின்மத் தொலைக்காட்சியில் ஜெனான், நியான் மற்றும் ஹீலியம் வாயு போன்றவை கண்ணாடியின் இரண்டு தட்டுகளுக்கு இடையில் அமைந்த ஆயிரக்கணக்கான சிறிய செல்களைக் கொண்டிருக்கின்றன. நீண்ட எலக்ட்ரோடுகளும் கூட செல்களுக்கு முன்னர் மற்றும் இடையில் கண்ணாடித் தட்டுகளுக்கு இடையில் இடப்படுகின்றன. இந்த முகவரி எலக்ட்ரோடுகள் கண்ணாடித் தட்டுக்குப் பின் நெடுகிலும் செல்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும். ஒளிபுகுக் காட்சி எலட்ரோடுகள் காவலிடல் மின்கடத்தாப் பொருள் மூலமாக சுற்றப்பட்டிருக்கின்றன. மேலும் மெக்னீசியம் ஆக்சைடு பாதுகாப்பு அடுக்கினால் சூழப்பட்டிருக்கின்றன. இவை கண்ணாடித் தட்டின் முன்புறம் நெடுகிலும் செல்களின் முன்னர் இடம்பெற்றிருக்கின்றன. கட்டுப்பாட்டு சுற்றானது செல்களின் பாதைகளில் குறுக்கிடும் எலக்டோடுகளுக்கு மின்னூட்டம் அளிக்கின்றன. இவை முன்புறம் மற்றும் பின்புறத்திற்கு இடையே வோல்டேஜ் மாறுபாட்டை உருவாக்குகின்றன. மேலும் வாயுவானது அயனியாக்கல் அடைந்து மின்மம் உருவாவதற்குக் காரணமாகின்றன. வாயு அயனிகள் எலக்ரோடுகளை விரைந்து சென்று இடிப்பதால் போட்டான்கள் ஆற்றலை உமிழ்கின்றன.[21][22]

ஒற்றைநிற ஒளிச்சைகை மின்மச் சட்டங்களில் அயனியாக்க நிலையானது அயனியாக்க மின்னழுத்தம் நீக்கப்பட்ட பின்னரும் கூட அனைத்து கிடைமட்ட மற்றும் செங்குத்து எலக்ட்ரோடுகளுக்கு இடையில் குறைந்த நிலை மின்னழுத்தம் பயன்படுத்தப்படுவதன் மூலமாக பராமரிக்கப்படலாம். செல்லினை அழிப்பதற்கு அனைத்து மின்னழுத்தமும் இணை எலக்ட்ரோடுகளில் இருந்து அழிக்கப்படுகின்றன. இந்த வகைச் சட்டம் உட்பொதிந்த நினைவகத்தைக் கொண்டிருக்கிறது மற்றும் இது பாஸ்பர்களைப் பயன்படுத்துவதில்லை. பின்னிடைவை அதிகரிப்பதற்காக சிறிய அளவு நைட்ரஜன் நியானுடன் சேர்க்கப்படுகின்றன.

வர்ணச் சட்டங்களில் ஒவ்வொரு செல்லின் பின்புறமும் பாஸ்பர் பூசப்பட்டிருக்கும். இந்த பாஸ்பர்கள் வர்ண ஒளிகளைக் கொடுப்பதற்கு மின்மம் தூண்டுவதன் மூலமாக புற ஊதா போட்டான்களை உமிழ்கின்றன. ஒவ்வொரு செல்லின் செயல்பாடும் உடனொளிர்விளக்குடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கின்றன.

ஒவ்வொரு பிக்சலும் மூன்று தனித்த உப பிக்சல் செல்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட வர்ணங்களில் பாஸ்பர்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு உப பிக்சல் சிகப்பு விளக்கு பாஸ்பர் கொண்டிருக்கிறது. ஒரு உப பிக்சல் பச்சை விளக்கு பாஸ்பர் கொண்டிருக்கிறது. ஒரு உப பிக்சல் நீல விளக்கு பாஸ்பர் கொண்டிருக்கிறது. இந்த நிறங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிக்சலின் ஒட்டுமொத்த நிறத்தை உருவாக்குகின்றன. அது நிழல் மறைப்பு CRT அல்லது வர்ண LCD இன் முக்கூற்றுத்தொகுதியை ஒத்திருக்கிறது. மின்மச் சட்டங்கள் ஒளிர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு வினாடிக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட செல்களின் மூலமாக தற்போதைய பாய்வின் துடிப்புகள் மாறுபடுவதன் மூலமாக துடிப்பு அகல பண்பேற்றத்தைப் பயன்படுத்துகின்றன. கட்டுப்பாட்டு அமைப்பானது பல எண்ணிக்கையில் சிகப்பு, பச்சை மற்றும் நீலத்தின் மாறுபட்ட இணைதல்களை உருவாக்குவதற்காக ஒவ்வொரு உப பிக்சல் அடர்த்தியை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்த வழியில் கட்டுப்பாட்டு அமைப்பு பெரும்பாலான காணக்கூடிய நிறங்களை உருவாக்க இயலும். மின்மக் காட்சிகள் CRTக்களில் பயன்படுத்தப்படும் அதே பாஸ்பர்களைப் பயன்படுத்துகின்றன. அவை தொலைக்காட்சியை அல்லது கணினி விடியோ உருவங்களைப் பார்க்கும் போது மிகவும் துல்லியமான வர்ண மறு உருவாக்கத்தைத் தருகின்றன (இவை CRT காட்சி நுட்பத்துக்காக வடிவமைக்கப்பட்ட RGB வர்ண அமைப்பைப் பயன்படுத்துகின்றன).

முரண் விகிதாச்சாரம்

முரண் விகிதாச்சாரம் என்பது ஒரு படத்தின் பிரகாசமான மற்றும் இருண்ட பகுதிகளுக்கு இடையில் உள்ள மாறுபாடு ஆகும். இது எந்த நேரத்திலும் தனித்த படிநிலைகளில் அளவிடப்படுகின்றது. பொதுவாக முரண் விகிதாச்சாரம் அதிகமாக இருந்தால் படம் மிகவும் தத்ரூபமாக இருக்கும் (எனினும் படத்தின் "தத்ரூபம்" நிறத்துல்லியம், ஒளிர்வு நேரியல்பு மற்றும் இடஞ்சார்ந்த நேரியல்பு உள்ளிட்ட பல காரணிகள் சார்ந்ததாக இருக்கிறது.) மின்மக் காட்சிகளுக்கான முரண் விகிதாச்சாரங்கள் பொதுவாக 5,000,000:1 விட அதிகமாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.[23] புறப்பரப்பின் மீது பெரும்பாலான தற்போதைய காட்சி நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது மின்மத்தின் கணிசமான நன்மையாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக OLED இருக்கிறது. முரண் விகிதாச்சாரம் தொடர்பாக தொழிற்சாலை சார்ந்த வழிகாட்டிகள் ஏதும் இல்லாத போதும் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் ANSI தரநிலையையோ அல்லது ஃபுல்-ஆன்-ஃபுல்-ஆப் சோதனையைச் செயல்படுத்துவதையோ பின்பற்றுகின்றனர். ANSI தரநிலையானது சோதிப்பு சோதனை முறையைப் பயன்படுத்துகிறது. அதனால் அடர்ந்த கருப்புகள் மற்றும் ஒளிரும் வெள்ளைகள் இரண்டும் ஒரே நேரத்தில் அளவிடப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமான "நிகழ் வாழ்க்கை" தரத்தினை விளைவிக்கின்றன. மாறாக ஃபுல்-ஆன்-ஃபுல்-ஆப் சோதனையானது துல்லியமான கருப்புத் திரை மற்றும் துல்லியமான வெள்ளைத் திரையைப் பயன்படுத்தி விகிதாச்சாரத்தை அளவிடுகிறது. அது உயர் மதிப்புகளைக் கொடுக்கும். ஆனால் பொதுவாக பார்க்கும் தொகுதிக் குறிப்பைக் குறிப்பிடாது. சில காட்சிகள் ஒளியின் சிறிதளவு "கசிவை" கொண்டிருக்கும் பல மாறுபட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இவை ஒளியியல் சார்ந்ததாகவோ அல்லது மின்னணுவியல் சார்ந்ததாகவோ இருக்கின்றன. இவை கிடைமட்ட பிக்ஸல்கள் முதல் அண்மையில் உள்ள பிக்சல்களி வரை இருக்கின்றன. அதனால் பிரகாசமான இடத்திற்கு அருகில் இருக்கும் அடர்ந்த பிக்சல்கள் அவை முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியின் போது இருப்பதைக் காட்டிலும் அடர்வு குறைவாக தோற்றமளிக்கும். உற்பத்தியாளர்கள் உயர் சோதனை மதிப்புகளைப் பெறுவதற்காக முரண் மற்றும் ஒளிர்வை அதிகரிப்பதன் மூலமாக மேலும் செயற்கையான முறையில் அறிவித்திருக்கும் முரண் விகிதாச்சாரத்தை மேம்படுத்தலாம். எனினும் இந்த முறையில் உருவாக்கப்படும் முரண் விகிதாச்சாரம் தவறான வழியாக இருக்கிறது. இதில் சில அமைப்புகளில் படமானது பார்க்கவே இயலாத அளவிற்குத் தோற்றம் கொள்கிறது.[24][25][26]

மின்மம் பொதுவாக சிறந்த (அதாவது அடர்ந்த) கருப்பு நிலைகளைக் (மற்றும் உயர்வான முரண் விகிதாச்சாரங்கள்) கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. எனினும் மின்மம் மற்றும் LCD இரண்டும் அவற்றின் தனித்த தொழில்நுட்பச் சவால்களைக் கொண்டிருக்கின்றன.

மின்மக் காட்சியின் ஒவ்வொரு செல்லும் அது ஒளிர்வதன் காரணமாக அதற்கு முன்பு முன்மின்னூட்டம் பெற வேண்டியிருக்கிறது (இல்லையெனில் செல்லானது போதுமான அளவிற்குத் துரிதமாக பிரதிவினை செய்யாது). மேலும் இந்த முன்மின்னூட்டம் வழியில் செல்கள் உண்மையான கருப்பு நிறத்தை அடைய இயலாது. சில உற்பத்தியாளர்கள் முன்மின்னூட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பின்னணி ஒளிர்வைக் குறைப்பதற்காகக் கடுமையாக பணியாற்றியிருக்கின்றனர். நவீன மின்மங்களில் கருப்பு நிலைகள் போட்டியாளர் CRT க்கு ஆரம்பமாக இருக்கின்றன. LCD தொழில்நுட்பத்துடன் கருப்பு பிக்சல்கள் ஒளி முனைவாக்க முறை மூலமாக உருவாக்கப்படுகின்றன. பல சட்டங்கள் அடிப்படையான பின்னொளியை முழுமையாகத் தவிர்க்க இயலாததாக இருக்கின்றன. எனினும் மிகவும் சமீபத்திய LCD சட்டங்கள் (குறிப்பாக வெள்ளை LED ஒளியூட்டலைப் பயன்படுத்துபவை) அடர்ந்த காட்சிகளில் பின்னொளியைத் தானாகவே குறைப்பதன் மூலமாக ஈடுசெய்யப்படலாம். எனினும் அனலாக் ஒலிநாடாக்களில் இரைச்சலைக் குறைப்பதற்கான உத்தியை ஒத்த இந்த முறையை நிச்சயமாக உயர் முரண் காட்சிகளில் பயன்படுத்த முடியாது. இதில் (இறுதி நிலையில்) திடமான கருப்புத் திரையில் ஒரு மிகவும் செறிவுமிக்க பிரகாசமான வரி இருக்கும் படத்தைப் போன்று பிரகாசமான பகுதிகளுடன் கூடிய படத்தில் கருப்புப் பகுதிகளைக் காண்பிக்கும் போது சிறிது ஒளி எஞ்சியிருக்கும்.[3][6][7]

திரை பர்ன்-இன்

அசையாத உரையில் தீவிர பர்ன்-இன் காரணமாக பாதிக்கப்பட்ட மின்மக் காட்சி எடுத்துக்காட்டு

பாஸ்பர் சார்ந்த மின்னணுவியல் காட்சிகளில் (கேதோட் கதிர் மற்றும் மின்மக் காட்சிகள் உட்பட) மெனுபார் அல்லது மற்ற அசைவற்ற (ஒரு இடத்தில் மாற்றமடையாமல் நிலைத்திருப்பது) வரைவியல் பொருட்களின் நீண்ட நேரக் காட்சியானது இந்த பொருட்களின் ஆவி போன்ற உருவப்படத்தை உருவாக்கலாம். இது பாஸ்பர் சேர்மங்கள் பயன்பாட்டின் காரணமாக அவற்றின் ஒளிர்தல் தன்மையை இழந்துவிட்டு ஒளிர்வதால் ஏற்படுகிறது. இதன் விளைவாக காட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற போது காலப்போக்கில் குறைவான ஒளிர்தலுடைய பகுதிகள் பாதிப்படைகின்றன இந்த விளைவு பர்ன்-இன் என்று அழைக்கப்படுகிறது. ஆவி போன்ற படத்தோற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க விளைவாக இருந்த போதும் மிகவும் பொதுவான விளைவு படத்தரம் தொடர்ந்து படிப்படியாக அழிந்து காலப்போக்கில் ஒளிர்திறன் மாறுபாடுகள் வெளிப்பட்டு அதன் விளைவாக படத்தில் உள்ள உருவம் மிகவும் "மோசமாக" தோன்றும். பெரும்பாலான மின்மக் காட்சி உருவாக்குநர்கள் ஒளிர்தல் பாதியாவதற்கு முன்பு 100,000 மணி நேரங்கள் நன்றாகச் செயல்புரியும் என்று குறிப்பிடுகின்றனர். தர்க்க ரீதியாக காட்சியானது படிப்படியாக மங்குவதற்கு முன்பு பத்தாண்டுகள் சாதாரணமான தோற்றத்தில் நன்றாகச் செயலாற்றும் என்றனர்.

மின்மக் காட்சிகளில் மற்றொரு உருவப்பட வைத்திருத்தல் சிக்கலும் ஏற்படுகின்றன. இவை சில நேரங்களில் திரை பர்ன்-இன் சேதத்துடன் குழப்பக் கொள்ளப்படுகின்றன. இந்த முறையில் பிக்சல்களின் தொகுப்பு நீண்ட காலத்திற்கு உயர் ஒளிர்தலில் (எடுத்துக்காட்டாக வெள்ளையைக் காண்பித்தல்) பயன்படுத்தப்படும் போது பிக்சல் கட்டமைப்பில் மின்னூட்டம் ஏற்படும் மற்றும் ஆவி போன்ற உருவப்படம் தோன்றும். எனினும் பர்ன்-இன் போலல்லாமல் இந்த மின்னூட்டம் உருவாகிவிடல் நிலையற்றதாக இருக்கிறது. நீண்ட காலங்கள் சென்ற பிறகு அது தானாகவே நீக்கப்பட்டு உருவப்பட நிலையில் சுய சரிசெய்தல் நிகழலாம் (காட்சியை அனைப்பது அல்லது தொடங்குவது).

மின்ம உற்பத்தியாளர்கள் உருவம் நீடித்திருத்தலின் கடந்த காலச் சிக்கலைத் தீர்ப்பதற்கான நிர்வகிப்பு வழிகளைக் கண்டிருக்கின்றனர். அந்த தீர்வுகள் கிரே பில்லர்பாக்சஸ், பிக்சல் ஆர்பிட்டர்கள் மற்றும் இமேஜ் வாஷிங் ரொட்டின்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கின்றன.[7][10]

சுற்றுச்சூழல் தாக்கம்

மின்மத் திரைகள் பருவநிலை மாற்றம் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் மிகவும் வீரியமான பசுமைக்குடில் வாயுவான நைட்ரஜன் ட்ரைஃப்ளூரைடு இதன் உருவாக்கத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் இந்த பசுமைக்குடில் வாயுவுக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையில் உள்ள அறியப்பட்ட தொடர்புகள் ஏதுமில்லை.[27][28] மின்மத் திரைகள் ஆற்றல் நுகர்வைக் கருத்தில் கொண்டால் CRT மற்றும் LCD திரைகளின் பின்னால் பின்னடைந்தும் இருக்கின்றன.[29] எனினும் LCD திரைகளில் தொல்படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாக்கப்படும் மின்னாற்றலைப் பயன்படுத்தும் போது அதிகமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.[30] மின்மத் திரைகள் எதிர்காலத்தின் மிகவும் செயல்திறன் மிக்க ஆற்றல் நுகர்வைக் கொண்டதாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் மக்கள் அவர்களது பழைய தொலைக்காட்சியையே வைத்திருக்க விரும்புகின்றனர். மேலும் திரையளவுகளை அதிகமாக்குவதும் அதிகரித்து வருகிறது.[31][32][33][34][35][36]

வரலாறு

மின்மக் காட்சிகள் முதன் முதலில் PLATO கணினி டெர்மினல்களில் பயன்படுத்தப்பட்ட போது. 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த PLATO V மாடல் காட்சியின் ஒற்றைநிற ஆரஞ்சு ஒளிர்வை வெளிப்படுத்துகிறது.[37]

1936 ஆம் ஆண்டில் கால்மன் டிஹான்யி (Kálmán Tihanyi) "மின்மத் தொலைக்காட்சி" கொள்கையை வரையறுத்தார். மேலும் முதல் தட்டையான சட்ட தொலைக்காட்சியையும் உருவாக்கினார்.

ஒற்றைநிற ஒளிச்சைகை மின்ம வீடியோ காட்சி 1964 ஆம் ஆண்டில் டொனால்ட் பிட்சர் (Donald Bitzer), ஹெச். ஜீன் ஸ்லோட்டோ (H. Gene Slottow) மற்றும் PLATO கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்கான பட்டப் படிப்பு மாணவர் ராபர் வில்சன் (Robert Willson) ஆகியோரால் யுனிவர்சிடி ஆஃப் இல்லினாய்ஸ் அட் அர்பானா-சேம்பெயினில் இணை உருவாக்கமாக உருவாக்கப்பட்டது.[38] கண்ணாடி உற்பத்தியாளர் ஓவென்ஸ் இல்லினாய்ஸ் (Owens-Illinois) மூலமாக உருவாக்கப்பட்ட முதல் நியான் ஆரஞ்சு ஒற்றைநிற ஒளிச்சைகை டிஜிவியு காட்சிச் சட்டங்கள் 1970களின் ஆரம்பத்தில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. ஏனெனில் அவை முரட்டுத்தனமானதாக இருந்தன. மேலும் உருவப்படங்களைப் புதுப்பிப்பதற்கு நினைவகமோ மின்சுற்றோ தேவையில்லாமல் இருந்தது. அதன் நீண்ட கால விற்பனை 1970களின் பிற்பகுதியில் US$2500 512 x 512 PLATO மின்மக் காட்சிகளைக் காட்டிலும் மலிவாக இருந்த குறைகடத்தி நினைவகத்தால் உருவாக்கப்பட்ட CRT காட்சிகள் வெளியானதன் காரணமாக வீழ்ச்சி அடைந்தது.[சான்று தேவை] எனினும் மின்மக் காட்சிகள் ஒப்பிடுகையில் பெரிய திரை அளவுகளைக் கொண்டிருந்தன. மேலும் 1 அங்குலத்தில் மெல்லியதாக அவை இருந்ததால் முகப்பறை மற்றும் பங்குச்சந்தையில் வைப்பதற்கு வசதியானதாக இருந்தன.

மின் பொறியியல் மாணவர் லேர்ரி எஃப். வெபர் (Larry F. Weber) 1960களில் யுனிவர்சிடி ஆஃப் இல்லினாய்ஸ் அட் அர்பானா-சேம்பெயினில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் மின்மக் காட்சிகளில் ஆர்வமிக்கவராக மாறினார். பின்னர் இந்தத் துறையில் பிட்சர் மற்றும் ஸ்லோட்டோ ஆகியோரின் கீழ் முதுகலை படித்தார். அவரது ஆய்வு இறுதியாக மின்மக் காட்சிகள் தொடர்பாக அவருக்கு 15 காப்புரிமையை ஈட்டிக் கொடுத்தது. அவரது ஆரம்பகாலப் பங்களிப்புக்களில் ஒன்று தற்போது ஒவ்வொரு வர்ண மின்மக் காட்சியிலும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னாற்றல் சேமிப்பு "மின்னாற்றல் மீட்புத் தாங்குச் சுற்றின்" மேம்பாடு ஆகும்.[39]

இணை இயந்திரங்கள் மற்றும் கணினி உருவாக்குநர்களான பர்ரஃப்ஸ் கார்ப்பரேசன் 1970களின் ஆரம்பத்தில் பானாப்லக்ஸ் காட்சியை உருவாக்கியது. பொதுவாக வாயு-இறக்குதல் அல்லது வாயு-மின்மக் காட்சி என்று குறிப்பிடப்பட்ட அந்த பானாப்லக்ஸ் காட்சி[40] யில் பின்னர் வந்த மின்ம வீடியோக் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இணை இயந்திரங்களின் பயன்பாடாக ஏழு பிரிவு காட்சியின் வாழ்வு துவங்கியது. அவை அதன் பிரகாசமான ஆரஞ்சு மேண்மையானத் தோற்றத்தின் காரணமாக மிகவும் பிரபலமானதாக மாறியிருந்தது. மேலும் 1970களின் பிற்பகுதியில் இருந்து 1990கள் வரை பணப்பதிவேடுகள், கணிப்பான்கள், பின்பால் இயந்திரங்கள், ரேடியோக்கள், வானோடல் கருவிகள் மற்றும் ஸ்டோர்ம்ஸ்கோப்கள் போன்ற வான்பயண மின்னணுவியல்கள், அதிர்வெண் எண்ணிகள் மற்றும் மல்ட்டிமீட்டர்கள் போன்ற சோதனை உபகரணங்கள்; மற்றும் பொதுவாக உயர்-இலக்க எண்ணிக்கையுடன் நிக்சி குழாய் அல்லது நியுமிட்ரான் காட்சிகளை முன்னர் பயன்படுத்திய அனைத்து பொருட்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட எங்கும் நிறைந்திருக்கும் பயன்பாட்டைக் கொண்டிருந்தன.இந்த காட்சிகள் LEDக்கள் அவற்றின் குறைவான மின்னாற்றல் நுகர்வு மற்றும் உருப்படிம நெகிழ்திறன் ஆகியவற்றினால் பிரபலமாகும் வரை நீடித்திருந்தன. ஆனால் தற்போதும் பின்பால் இயந்திரங்கள், வான் மின்னணுவியல் போன்ற உயர் ஒளிர்திறன் தேவைப்படும் சில பயன்பாடுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. பின்பால் காட்சிகள் ஆறு மற்றும் ஏழு இலக்க ஏழு பிரிவு காட்சிகளுடன் தொடங்கின. பின்னர் 16 பிரிவு எண்ணெழுத்துக் காட்சிகளாக மாறின. மேலும் பின்னர் 1990 ஆம் ஆண்டில் 128x32 புள்ளி-பிக்சல் காட்சிக்கு மாறின. இவை தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1983

1983 ஆம் ஆண்டில் IBM 19 அங்குல (48 செமீ) ஆரன்ச்-ஆன்-பிளாக் ஒற்றைநிற ஒளிச்சைகைக் காட்சியை (மாடல் 3290 'தகவல் சட்டம்') அறிமுகப்படுத்தியது. அது ஒரே நேரத்தில் நான்கு IBM 3270 டெர்மினல் செசன்களைக் காட்டும் திறன் கொண்டதாக இருந்தது. ஒற்றைநிற ஒளிச்சைகை LCDயின் தீவிர போட்டி காரணமாக 1987 ஆம் ஆண்டில் IBM ஆனது மெயின்ஃபிரேம் கணினிகளை உருவாக்குவதற்காக உலகின் மிகப்பெரிய மின்ம ஆலையான நியூயார்க்கில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடத் திட்டமிட்டது.[39] அதனைத் தொடர்ந்து ஸ்டீபன் குளோபஸ் (Stephen Globus) உடன் இணைந்து பிளாஸ்மாகோ நிறுவனத்தை உருவாக்கிய லேரி வெபர் மற்றும் IBM ஆலை மேலாளராக இருந்த ஜேம்ஸ் கெஹோ (James Kehoe) ஆகியோர் IBM இடம் இருந்து அந்தத் தொழிற்சாலையை வாங்கினர். வெபர் அர்பானாவில் 1990 ஆம் ஆண்டு வரை CTOவாக இருந்தார் பின்னர் பிளாஸ்மாகோவில் பணியாற்றுவதற்காக நியூயார்க் சென்றார்.

1992

1992 ஆம் ஆண்டில் ஃபூஜிட்சு உலகில் முதல் 21 அங்குல (53 செமீ) முழு வர்ணக் காட்சியை அறிமுகப்படுத்தியது. இது யுனிவர்சிட்டி ஆஃப் இல்லினாய்ஸ் அட் அர்பானா-சேம்பெயின் மற்றும் NHK STRL ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட மின்மக் காட்சிகளின் கலிப்பாக இருந்தது.

1994

1994 ஆம் ஆண்டில் சேன் ஜோசின் துறைசார்ந்த கருத்தரத்தில் வெபர் வர்ண மின்மத் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார் பானசோனிக் கார்ப்பரேசன் பிளாஸ்மாகோவுடன் இணை மேம்பாட்டுத் திட்டப்பணியை ஆரம்பித்தது. இது 1996 ஆம் ஆண்டில் பிளாஸ்மாகோ அதன் வர்ண AC தொழில்நுட்பம் மற்றும் அதன் அமெரிக்கத் தொழிற்சாலை ஆகியவற்றை வாங்குவதற்கு வழிவகுத்தது.

1997

1997 ஆம் ஆண்டில் ஃபூஜிட்சு முதல் 42 அங்குல (107 செமீ) மின்மக் காட்சியை அறிமுகப்படுத்தியது. அது 852x480 பிரிதிறனைக் கொண்டிருந்தது மற்றும் முன்னேற்றமடைந்த ஸ்கேன்களைக் கொண்டிருந்தது.[41] 1997 ஆம் ஆண்டில் பிலிப்ஸ் நிறுவனமும் 852x480 பிரிதிறனுடன் கூடிய 42 அங்குல (107 செமீ) காட்சியை அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் 4 சியர்ஸ் இடங்களில் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒரே மின்மமாகும். இதன் விலை வீட்டில் நிறுவுவதுடன் சேர்த்து US$14,999 ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் பயனீர் அதன் முதல் மின்மத் தொலைக்காட்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கியது.

2006 முதல் தற்போது வரை

2006 ஆண்டின் பிற்பகுதியில் LCDக்கள் மின்மங்களை முந்திச்சென்றிருப்பதை ஆய்வாளர்கள் கண்டனர். குறிப்பாக மின்மம் அதற்கு முன்பு சந்தைப் பங்குகளை வைத்திருந்த 40 அங்குலம் (1.0 மீ) மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் இது நிகழ்ந்தது.[42] மற்றொரு தொழிற்சாலை மனப்பாங்காக மின்மக் காட்சிகளின் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைப்பு இருக்கிறது. சந்தையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் இருக்கின்றன ஆனால் ஐந்து உற்பத்தியாளர்கள் மட்டுமே உள்ளனர். 2008 ஆம் ஆண்டில் முதல் காற்பகுதியில் உலகளாவிய தொலைக்காட்சி விற்பனையின் மேற்கொண்ட ஒப்பீட்டில் நேரடி-பார்வை CRT யில் 22.1 மில்லியனும் LCD இல் 21.1 மில்லியனும், மின்மத்தில் 2.8 மில்லியனும், பின்புறத் தோற்றத்தில் 0.1 மில்லியனும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.[43]

2000ங்களின் ஆரம்பம் வரை மின்மக் காட்சிகள் HDTV தட்டைச் சட்டக் காட்சிக்கான மிகவும் பிரபலமான தேர்ந்தெடுப்பாக இருந்தன. அவை LCDக்களைக் காட்டிலும் சிறந்த கருப்புகள், வேகமான பிரதிவினை நேரம், சிறந்த நிறமாலை மற்றும் அகன்ற பார்க்கும் கோணம் உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டிருந்தன. அவை LCDக்களைக் காட்டிலும் பெரிதாக இருந்தன. மேலும் LCD தொழில்நுட்பம் சிறிய அளவிலான தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என நம்பப்பட்டு வந்தது. எனினும் VLSI ஃபேப்ரிகேசன் தொழிநுட்பத்தின் மேம்பாடுகள் குறுகியதாகவும் தொழில்நுட்ப இடைவெளி உடையதாகவும் இருக்கின்றன. LCDக்களின் அதிகரித்த அளவு, குறைவான எடை, வீழும் விலை மற்றும் பொதுவாக குறைவான் மின்னாற்றல் நுகர்வு போன்ற அம்சங்கள் அதனை தற்போது மின்மத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு போட்டியாளராக்கியிருக்கின்றன.[சான்று தேவை]

திரை அளவுகள் மின்மக் காட்சிகள் அறிமுகப்படுத்தியதில் இருந்து அதிகரித்து வருகின்றன. லாஸ் வேகாஸ், நெவாடா, அமெரிக்கா, வட அமெரிக்காவில் நடைபெற்ற 2008 நுகர்வோர் மின்னணுவியல் பொருட்காட்சியில் உலகின் மிகப்பெரிய மின்ம வீடியோ காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. அது மாத்சுசிடா எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸ் (பேனசோனிக்) மூலமாக உருவாக்கப்பட்ட 150 அங்குல (381 செமீ) அலகு 6 அடி (180 செமீ) உயரத்தில் 11 அடி (330 செமீ) அகலத்தில் இருந்தது.[44][45] 2010 ஆம் ஆண்டில் லாஸ் வேகாஸ், நெவாடா, அமெரிக்கா, வட அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணுவியல் பொருட்காட்சியில் பேனசோனிக் அதன் 153" 2160p 3D மின்மத்தை அறிமுகப்படுத்தியது.

குறிப்பிடத்தக்க மின்மக் காட்சி உற்பத்தியாளர்கள்

  • பேனசோனிக் கார்ப்பரேசன் (முன்னர் மாட்சூஷிட்டா)
  • சேம்சங் எலக்ட்ரானிக்ஸ்
  • எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ்
  • ப்ரோஸ்கேன்
  • ஃபுஜிட்சு
  • சேன்யோ
  • ஃபுனாய்

மின்மத்தைக் கைவிட்ட குறிப்பிடத்தக்க உற்பத்தியாளர்கள்

  • சோனி
  • ஹிட்டாச்சி லிமிட்டெட்.
  • பிலிப்ஸ்
  • விஷியோ
  • டோஷிபா
  • ஆர்.சி.ஏ
  • என்.இ.சி
  • பயனீர் கார்ப்பரேசன் (மார்ச் 2009 இல் இந்நிறுவனம் அதன் தொலக்காட்சி உற்பத்தியையும் கைவிட்டது)[46]

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Plasma displays
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்மக்_காட்சி&oldid=3629886" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்