மிகைல் பக்கூனின்

இரசிய புரட்சியாளர்

மிகைல் அலக்சான்ரோவிச் பக்கூனின் (Mikhail Alexandrovich Bakunin, உருசியம்: Михаи́л Алекса́ндрович Баку́нин[1] , 30 மே [யூ.நா. 18 மே] 1814[2] - 1சூலை 1876) இவர் ஒரு ருசியாவைச் சேர்ந்த ஒரு புரட்சிகர அரசின்மைவாதி. மேலும் இவர் கூட்டாளுகை அரசின்மையின் நிறுவனரும் சமூக அரசின்மை மரபின் நிறுவனர்களில் ஒருவருமாவார். ஒரு பீடும் புகழும் பெற்ற செயற்பாட்டாளராக இவர் இருந்தமையால் ஐரோப்பாவின் மிகப்பரவலாக அறியப்பட்ட கருத்தியலாளராக பக்கூனின் இருந்தார். ருசியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்த முற்போக்காளர்களிடம் இவருடைய கருத்தியலின் தாக்கம் நிலவியது.

மிகைல் பக்கூனின்
Михаи́л Баку́нин
பிறப்புமிகைல் அலெக்சாந்திரோவிச் பக்கூனின்
(1814-05-30)30 மே 1814
பிரியமூக்கினோ, திவேர் மாகாணம், உருசியா)
இறப்பு1 சூலை 1876(1876-07-01) (அகவை 62)
பேர்ன், சுவிட்சர்லாந்து
காலம்19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதி
பள்ளிஅரசின்மை
எகலியனியம் (ஆரம்பகாலம்)
செல்வாக்குச் செலுத்தியோர்
  • லூத்விக் பயர்பாக், பிலிப் புவனரொட்டி, எகல், எர்சென், மார்க்சு, புரௌதோன்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

பக்கூனின் பிரயாமுகினோ எனும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தார். அதற்குப்பிறகு , துவர் கவர்நரேட் எனும் ஊரில் மெய்யியல் படித்து பின் பிரெஞ்சு கலைக்களஞ்சிய ஆக்கங்களைப் படித்தார். இது யோஃகான் ஃவிக்டெ . அவரிலிருந்து எகலின் ஆக்கங்களுக்குள் பக்கூனின் ஆழ்ந்து சென்றார். அக்காலகட்டத்தின் செருமனிய அறிவர்கள் நடுவே மிகவும் தாக்கம் செலுத்திய சிந்தனையாளராக எகல் இருந்தார். இந்த நகர்வு எகலின் நடப்பில் நிலவும் எதுவும் பகுத்தறிவுக்கு உகந்தது எனும் புகழ்பெற்ற கோட்பாட்டால் தன் ஆற்றலைக் காட்டி உள்ளார்ந்த குறைகளை மறைத்துகொண்ட எகலியனிய மெய்யியலில் பக்கூனினைத் தோய்ந்திடச் செய்தது. மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மெய்யியல் அல்லது வரலாற்றுப் பேராசிரியர் ஆகும் நோக்கோடு பக்கூனின் 1840 ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பெர்லினுக்குச் சென்றார். அங்கிருந்து 1842இல் டிரட்சன் நகருக்குச் சென்றார். இறுதியில் பாரீசுக்குச் சென்று அங்கு பியர் யோகேப்பு புரூதோன் மற்றும் கார்ல் மார்க்சு ஆகியோரைச் சந்தித்தார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிகைல்_பக்கூனின்&oldid=2991437" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்