மலேசிய மக்களவை

மலேசிய பாராளுமன்றத்தின் கீழவை

மலேசிய மக்களவை அல்லது டேவான் ராக்யாட் (மலாய்:Dewan Rakyat, ஆங்கிலம்: House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் (Dewan) என்றால் அவை; ராக்யாட் (Rakyat) என்றால் மக்கள் என பொருள்படும். மலேசியாவின் அனைத்துச் சட்ட முன்வரைவுகளும் இங்கு விவாதிக்கப்பட்டு, பின்னர் சட்டங்களாக இயற்றப்படுகின்றன.

மலேசிய மக்களவை
டேவான் ராக்யாட்
Dewan Rakyat
House of Representatives
15-ஆவது மக்களவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
சொகாரி அப்துல், பாக்காத்தான்பிகேஆர்
19 டிசம்பர் 2022 முதல் முதல்
துணைப் பிரதமர் I
துணைப் பிரதமர் II
அம்சா சைனுடின், பெரிக்காத்தான்-பெர்சத்து
10 டிசம்பர் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்222
அரசியல் குழுக்கள்
(சூன் 1, 2024 நிலவரப்படி)

அரசாங்கம் (153)

   சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி (1)

எதிர்க்கட்சி (69)

  மூடா (1)
செயற்குழுக்கள்
5
  • தேர்வுக் குழு
  • பொது கணக்கு குழு
  • அவைக் குழு
  • சலுகைகள் குழு
  • நிலையியல் கட்டளைக் குழு
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள் வரை
தேர்தல்கள்
வாக்களிப்பு முறைகள்
அண்மைய தேர்தல்
19 நவம்பர் 2022
அடுத்த தேர்தல்
17 பிப்ரவரி 2028
கூடும் இடம்
மக்களவை அறை
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்,
கோலாலம்பூர், மலேசியா
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்


அவ்வாறு இயற்றப்படும் சட்ட முன்வரைவுகள், மக்களவையில் இருந்து மலேசிய மேலவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர், அந்த சட்ட முன்வரைவுகள் சட்டங்களாகின்றன. மலேசிய மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.

டேவான் ராக்யாட் எனும் மக்களவை உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அமைப்பு

மலேசிய நாடாளுமன்றம் என்பது மலேசியாவின் ஆக உயர்ந்த சட்டப் பேரவையாகும். சட்டங்களை இயற்றுவதும், சட்டங்களை மாற்றித் திருத்தி அமைப்பதும் அதன் தலையாய பண்பு நலன்களாகும். மலேசிய அரசர் நாட்டுத் தலைவராக இருந்தாலும், அவருக்குச் சார் நிலையான ஒரு தகுதியில், மலேசிய அரசியலமைப்பின் 39-ஆவது விதிகளின்படி மலேசிய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.[1]

மக்களவை உறுப்பினர் ஒருவர் சத்திய வாக்கு எடுத்துக் கொண்டதும், அவருக்கு நாடாளுமன்ற சட்ட விலக்களிப்பு (ஆங்கில மொழி: Parliamentary immunity) அதாவது நாடாளுமன்ற தடைக்காப்பு வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தன் கருத்துகளைச் சொல்வதற்கு முழு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இனத் துவேச சொற்களைப் பயன்படுத்துவது; மற்றும் அரசுப் பகையை மூட்டிவிடும் விசயங்களைப் பற்றி பேசுவதில் அல்லது எழுதுவதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மேலவை கீழவை உறுப்பினர்கள்) தடை செய்யப்படுகின்றனர்.

13 மே இனக்கலவரம், பூமிபுத்ராகளின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மலேசியப் பேரரசரையும், நீதிபதிகளையும் குறை சொல்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.[2]

ஒரு சட்டம் எப்படி இயற்றப்படுகிறது

மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா எப்படி சட்டம் ஆக்கப்படுகிறது. அதன் பின்னணி:

  • ஓர் அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர் ஒரு மசோதாவிற்கான வரைவோலையைத் (ஆங்கில மொழி: Draft) தயார் செய்கிறார். வரைவோலை தயார் செய்வதில் மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் உதவி செய்கிறார்.
  • அந்த வரைவோலையைப் பற்றி மலேசிய அமைச்சரவை முதலில் விவாதிக்கிறது.
  • அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததும், வரைவோலை எனப்படுவது ஒரு மசோதா எனும் தகுதியைப் பெறுகிறது.
  • அந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நகல் மசோதா விநியோகிக்கப்படுகிறது.
  • டேவான் ராக்யாட்டில் மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெறுகிறது. முதல் கட்டமாக அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது.
  • இரண்டாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
  • மூன்றாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவதற்காக, அவர்களின் வாக்களிப்பிற்குச் செல்கின்றது. மசோதா நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை தேவை. சில சமயங்களில் ஓர் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் போதும்.
  • அந்த மசோதாவிற்கு பெரும்பான்மை கிடைத்ததும், டேவான் நெகாரா (மலாய்: Dewan Negara) எனும் மேலவைக்கு அனுப்பப்படுகிறது. டேவான் ராக்யாட்டில் எப்படி மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெற்றதோ, அதே போல இங்கேயும் மூன்று கட்டங்களில் வாசிப்பு நடைபெறும்.
  • அந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் இருந்து டேவான் நெகாரா தடைவிதிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிக்காமல் போகலாம். ஆனால், அது காலதாமதத்தை தான் ஏற்படுத்தும். ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு காலதாமதம் செய்யலாம். அதற்குப் பின்னர், டேவான் நெகாராவின் சம்மதம் இல்லாமலேயே, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
  • அந்த மசோதா மலேசிய பேரரசரின் பார்வைக்கும், சம்மதத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 30 நாள்கள் கால அனுமதி வழங்கப்படுகிறது.
  • பேரரசர் சம்மதிக்கவில்லை என்றால் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர் அந்த மசோதாவை மறுபடியும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி விடுவார்.
  • அடுத்து வரும் 30 நாள்களுக்குள், நாடாளுமன்றம் அந்த மசோதாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து, மறுபடியும் பேரரசரின் சம்மதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • இதன் பின்னர் 30 நாள்களுக்குள் பேரரசர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் சம்மதிக்கிறாரோ இல்லையோ அதன் பிறகு அந்த மசோதாவை ஒரு சட்டமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
  • அரசாணையில் (ஆங்கில மொழி: Government Gazette) இடம்பெறும் வரையில் அந்த மசோதா ஒரு சட்டமாகக் கருதப்பட மாட்டாது. அல்லது ஒரு சட்டமாகச் செயல்படவும் முடியாது.

நாடாளுமன்றச் சபாநாயகர்

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்த வயது 21. நாடாளுமன்றத்தின் தலைவரை சபாநாயகர் என்று அழைக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அவரைத் தவிர இரு துணைச் சபாநாயகர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

டேவான் ராக்யாட்டின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அலுவலகம் இருக்கிறது. இதன் தலைவரை பேரரசர் நியமனம் செய்கிறார். அவரைப் பதவியில் இருந்து பேரரசர் அல்லது நீதிபதிகள் மட்டுமே நீக்க முடியும்.

மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்

ed {{{2}}}
கட்சிவேட்பாளர்கள்வாக்குகள்இடங்கள்
வாக்குகள்%வெற்றி%+/–
பாக்காத்தான் அரப்பான்PH2135,801,32737.468337.3
மக்கள் நீதிக் கட்சிPKR9900.003114.1
ஜனநாயக செயல் கட்சிDAP5500.004018.2
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)AMANAH5400.0083.6
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்புUPKO500.0020.9
மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணிMUDA674,3920.4810.5புதிது
பெரிக்காத்தான் நேசனல்PN1704,700,81930.357333.2
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (சபா தவிர்த்து)BERSATU8600.002812.7
மலேசிய இசுலாமிய கட்சிPAS62747630.004420.0
மலேசிய மக்கள் இயக்கக் கட்சிGERAKAN2000.0000
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள்PN2?0.0010புதிது
பாரிசான் நேசனல்BN1783,462,23122.363013.6
அம்னோUMNO11700.002611.8
மலேசிய இந்திய காங்கிரசுMIC900.0010.5
மலேசிய சீனர் சங்கம்MCA4400.0020.9
ஐக்கிய சபா மக்கள் கட்சிPBRS200.0010.5
மலேசிய அன்புக் கட்சிPCM100.0000
மலேசியா மக்கள் சக்தி கட்சிMMSP100.0000புதிது
அகில மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னனிIPF100.0000புதிது
மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ்KIMMA100.0000புதிது
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள்BN200.0010.5
சரவாக் கட்சிகள் கூட்டணிGPS31610,8123.942210.0
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சிPBB1400.00146.4
சரவாக் மக்கள் கட்சிPRS600.0052.3
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சிPDP400.0010.5
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சிSUPP700.0020.9
சபா மக்கள் கூட்டணிGRS13202,3761.3162.7
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிBERSATU Sabah600.0041.8
ஐக்கிய சபா கட்சிPBS400.0010.5
தாயகம் ஒற்றுமை கட்சிSTAR200.0010.5
சபா முற்போக்கு கட்சிSAPP100.0000
சபா பாரம்பரிய கட்சிWARISAN51281,7321.8231.4
மலேசிய தேசிய கட்சிPBM591590.0010.5
சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சிKDM700.0010.5புதிது
தாயக இயக்கம்GTA125108,6540.7000
உள்நாட்டு போராளிகள் கட்சிPEJUANG6800.0000புதிது
அனைத்து மலேசிய இசுலாமிய முன்னணிBERJASA900.0000
மலேசிய வலிமைமிகு பூமிபுத்ரா கட்சிPUTRA3100.0000புதிது
இந்திய முஸ்லிம் கூட்டணி கட்சிIMAN400.0000புதிது
காகாசான் பங்சாGB1300.0000புதிது
PSM-PRM கூட்டணி1700.0000
மலேசிய சமூகக் கட்சிPSM100.0000
மலேசிய மக்கள் கட்சிPRM1600.0000
சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணிPERKASA1462,9430.4100
ஐக்கிய சரவாக் கட்சிPSB700.0000புதிது
சரவாக் பூர்வீக மக்கள் கட்சிPBDS300.0000
இருவாட்சி நிலக் கட்சிPBK400.0000
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சிPPRS100.0000
மக்கள் முதல் கட்சிPUR100.0000
சரவாக் மக்கள் விழிப்புணர்வு கட்சிSEDAR100.0000புதிது
சுயேட்சைகள்IND107109,4590.7120.9
செல்லுபடியாகும் வாக்குகள்0
செல்லாத வாக்குகள்0
மொத்த வாக்குகள் (வாக்காளர் எண்ணிக்கை: 0.00%)15,487,338100.00222100.00TBA
வாக்கு அளிக்காதவர்0
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்21,173,638
சாதாரண வாக்காளர்கள்20,905,366
காலை நேரத்து வாக்காளர்கள்265,531
அஞ்சல் வாக்காளர்கள்365,686
வாக்களிக்கும் வயது 18-க்கும் மேல்21,173,638
மலேசியாவின் மக்கள்தொகை32,258,900

சான்று: Election Commission of Malaysia (SPR)[3]

நாடாளுமன்ற இடங்கள்
பாக்காத்தான் அராப்பான்
36.9%
பெரிக்காத்தான் நேசனல்
32.9%
பாரிசான் நேசனல்
13.5%
சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி
9.9%
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி
2.7%
வாரிசான்
1.4%
தாயக இயக்கம்
0%
சுயேச்சைகள்
1.8%

தேர்தல் முடிவுகள் 2013

[உரை] – [தொகு]
மலேசியாவில் 2013 மே 5 இல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கட்சி (கூட்டணி)வாக்குகள்வாக்கு %இடங்கள்வாக்கு %+/–
தேசிய முன்னணிBN5,237,69947.3813359.91 7*
அம்னோUMNO3,252,48429.428839.64 9
மலேசிய சீனர் சங்கம்MCA867,8517.8573.15 8
மலேசிய இந்திய காங்கிரசுMIC286,6292.5941.80 1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சிPBB232,3902.10146.31
மலேசிய மக்கள் இயக்கக் கட்சிGerakan191,0191.7310.45 1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சிSUPP133,6031.2110.45 5
ஐக்கிய சபா கட்சிPBS74,9590.6841.80 1
சரவாக் மக்கள் கட்சிPRS59,5400.5462.70
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சிSPDP55,5050.5041.80
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்புUPKO53,5840.4831.35 1
Liberal Democratic PartyLDP13,1380.1200.00 1
ஐக்கிய சபா மக்கள் கட்சிPBRS9,4670.0910.45
மக்கள் முற்போக்குக் கட்சிPPP7,5300.0700.00
மக்கள் கூட்டணிPR5,623,98450.878940.09 7
மக்கள் நீதிக் கட்சிPKR2,254,32820.393013.51 1
ஜனநாயக செயல் கட்சிDAP1,736,26715.713817.12 10
மலேசிய இஸ்லாமிய கட்சிPAS1,633,38914.78219.46 2
மாநில சீர்திருத்தக் கட்சிSTAR45,3860.4100.00
அகில மலேசிய இஸ்லாமிய முன்னணிBerjasa31,8350.2900.00
சரவாக் தொழிலாளர் கட்சிSWP15,6300.1400.00
சபா முற்போக்கு கட்சி[a]SAPP10,0990.0900.00 2
Love Malaysia PartyPCM2,1290.0200.00
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சிKITA6230.0100.00
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிபெர்சமா2570.0000.00
சுயேட்சைகள்IND86,9350.7900.00
செல்லுபடியான வாக்குகள்11,054,577
பழுதடைந்த வாக்குகள்|202,570
மொத்த வாக்குகள் (84.84%)11,257,147100.0222100.0
வாக்களிக்காதோர்2,010,855
பதிவு செய்த வாக்காளர்கள்13,268,002
சாதாரண வாக்காளர்கள்12,885,434
தொடக்க வாக்காளர்கள்235,826
அஞ்சல் வாக்குகள்146,742
வாக்கு வயது (21 இற்கும் மேற்பட்டோர்)17,883,697
மலேசிய மக்கள் தொகை29,628,392

மூலம்: Election Commission of Malaysia
மூலம்: Nohlen et al. [1]

சான்றுகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலேசிய_மக்களவை&oldid=4004698" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்