மலேசிய அரசி

மலேசிய பேரரசரின் துணைவியார்

மலேசிய அரசி (ஆங்கிலம்: Queen of Malaysia; மலாய்: Raja Permaisuri Agong; ஜாவி: راج ڤرمايسوري اݢوڠ) என்பவர் மலேசிய அரசியலமைப்பின் கீழ் மலேசிய மாமன்னராகப் பொறுப்பு வகிக்கும் மாட்சிமிகு மலேசிய பேரரசரின் துணைவியார் ஆவார்.

மாட்சிமிகு பேரரசி
Queen of Malaysia
Raja Permaisuri Agong
மலேசிய அரசியாரின் சின்னம்
தற்போது
ஜொகூர் சுல்தானா சரித் சோபியா
(Raja Zarith Sofiah Idris Shah)

31 சனவரி 2024 முதல்
வாழுமிடம்
உருவாக்கம்31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
முதலாமவர்துங்கு புவான் பெசார் குர்சியா
நெகிரி செம்பிலான் அரசியார் குர்சியா
இணையதளம்istananegara.gov.my

1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, மலேசிய அரசர் பதவி உருவாக்கப்பட்டது. அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், மாமன்னராகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், மலேசிய நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். மலேசிய அரசியலமைப்பின் கீழ் அவரின் துணைவியார் மலேசிய நாட்டின் பேரரசியாக அறியப்படுகிறார்.

பொது

மலேசியாவின் பேரரசியை *மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங்* (ஆங்கிலம்: Her Majesty The Raja Permaisuri Agong; மலாய்: Kebawah Duli Yang Maha Mulia Raja Permaisuri Agong) என்று அழைப்பது வழக்கம். 'பரமேசுவரி' எனும் சொல், சமசுகிருத மொழிச் சொல்லான 'பரமேஸ்வரி' (परमेश्वरी) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது.[1]

2024 சனவரி மாதம், மலேசிய அரசியை அழைக்கும் மரியாதை அழைமொழி மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங் என மாற்றம் செய்யப்பட்டது.[2]

அழைக்கும் முறைப்பாடு

மலேசியப் பேரரசியை மரியாதையாக அழைக்கும் முறைப்பாடு, மலேசியாவில் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பேரரசியை அழைக்கும் முறைகள்:

  • தமிழ்: மாட்சிமிகு
  • மலாய்: துவாங்கு (Tuanku)
  • ஆங்கிலம்: மாட்சிமிகு (Her Majesty)

மலேசிய அரசர்

மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் பரம்பரை ஆட்சியாளர்களிடையே ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒருவர் மலேசிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஓர் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் மனைவியும் மலேசிய அரசியலமைப்பின் கீழ் இராஜா பரமேசுவரி அகோங் எனும் மலேசிய அரசியார் ஆகிறார்.[3]

இராஜா பரமேசுவரி அகோங் எனும் பட்டத்தை வைத்திருப்பவர் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறுகிறார். இருப்பினும் இந்த மாற்றம் மலேசிய பேரரசரின் மரணம் அல்லது பதவித்துறப்பு நடைபெற்ற பின்னரும் நிகழலாம்.

மலேசிய அரசியலமைப்பில் பேரரசி

இராஜா பரமேசுவரி அகோங்கிற்கு (மலேசிய அரசி) மலேசியாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட பங்குகள் எதுவும் இல்லை. மலேசிய பேரரசருடன் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு அரசு பயணங்களில் கலந்து கொள்வார். அத்துடன் மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள்; மற்றும் அவர்களின் துணைவியார்களுக்கு வழங்கப்படும் விருந்தளிப்பு நிகழ்ச்சிகளில் பேரரசியார் கலந்து கொள்வார்.

மலேசிய அரசியலமைப்பின் 34-ஆவது பிரிவு; மலேசிய அரசி எந்தவொரு நியமனப் பொறுப்புகள் வகிப்பதையோ அல்லது எந்தவொரு வணிக நிறுவனத்திலும் தீவிரமாக ஈடுபடுவதையோ தடைசெய்கிறது. இருப்பினும், மலேசிய அரசிக்கு சட்டப்பூர்வமாக ஆண்டு ஊதியம் மற்றும் படிச்செலவுகள் வழங்கப்படுகின்றன. அவரின் செலவுகள் அனைத்தையும் மலேசிய அரசு ஏற்றுக் கொள்கிறது.

மலேசிய பேரர என்ற பட்டத்தை வைத்திருப்பவரின் கணவர் இறந்துவிட்டால், மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் தகுதியைப் பெறுகிறார்.[4]

மலேசிய அரசிகளின் பட்டியல்

#பெயர்மாநிலம்பதவி தொடக்கம்பதவி முடிவுபேரரசர்
1 (I)நெகிரி செம்பிலான் அரசி துவாங்கு குர்சியா நெகிரி செம்பிலான்31 ஆகஸ்டு 19571 ஏப்ரல் 1960நெகிரி துவாங்கு அப்துல் ரகுமான்
2 (II)சிலாங்கூர் சுல்தானா அம்புவான் ஜெம்மா சிலாங்கூர்14 ஏப்ரல் 19601 செப்டம்பர் 1960சிலாங்கூர் இசாமுடின் ஆலாம் சா
3 (III)பெர்லிஸ் அரசி பட்ரியா பெர்லிஸ்21 செப்டம்பர் 196020 செப்டம்பர் 1965பெர்லிஸ் துவாங்கு சையது புத்ரா
4 (IV)திராங்கானு சுல்தானா இந்தான் சகரா திராங்கானு21 செப்டம்பர் 196520 செப்டம்பர் 1970திராங்கானு இசுமாயில் நசிருடின் சா
5 (V)கெடா சுல்தானா பகியா கெடா21 செப்டம்பர் 197020 செப்டம்பர் 1975கெடா சுலதான் அப்துல் ஆலிம்
6 (VI)கிளாந்தான் சுல்தானா சைனாப் கிளாந்தான்21 செப்டம்பர் 197529 மார்ச் 1979கிளாந்தான் சுல்தான் யகயா பெட்ரா
7 (VII)பகாங் சுல்தானா அம்புவான் பகாங்26 ஏப்ரல் 197925 ஏப்ரல் 1984பகாங் சுல்தான் அகமட் சா
8 (VIII)ஜொகூர் சுல்தானா சனரியா ஜொகூர்26 ஏப்ரல் 198425 ஏப்ரல் 1989ஜொகூர் சுல்தான் இசுகந்தர்
9 (IX)பேராக் சுல்தானா பரமேசுவரி பைனுன் பேராக்26 ஏப்ரல் 198925 ஏப்ரல் 1994பேராக் சுல்தான் அசுலான் சா
10 (X)நெகிரி செம்பிலான் அம்புவான் நசிகா நெகிரி செம்பிலான்26 ஏப்ரல் 199425 ஏப்ரல் 1999நெகிரி செம்பிலான் துங்கு ஜாபார்
11 (XI)சிலாங்கூர் சுல்தானா சித்தி ஆயிசா சிலாங்கூர்26 ஏப்ரல் 199921 November 2001சிலாங்கூர் சுல்தான் சலாவுடீன்
12 (XII)பெர்லிஸ் அரசி துங்கு பவுசியா பெர்லிஸ்13 டிசம்பர் 200112 டிசம்பர் 2006பெர்லிஸ் இராஜா சிராஜுடீன்
13 (XIII)திராங்கானு சுல்தானா நூர் சகிரா திராங்கானு13 டிசம்பர் 200612 டிசம்பர் 2011திராங்கானு சைனல் ஆபிதீன்
14 (XIV)கெடா சுல்தானா அஜா அமீனா கெடா13 டிசம்பர் 201112 டிசம்பர் 2016கெடா சுலதான் அப்துல் ஆலிம் 1
15 (XV)2 கிளாந்தான்கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது
16 (XVI)பகாங் சுல்தானா துங்கு அசிசா பகாங்31 சனவரி 201930 சனவரி 2024பகாங் சுல்தான் அப்துல்லா
17 (XVII)ஜொகூர் சுல்தானா சரித் சோபியா ஜொகூர்31 சனவரி 2024Incumbentஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
1.^ கெடா சுலதான் அப்துல் ஆலிம் இரண்டு முறை ஆட்சி செய்த ஒரே பேரரசர் ஆவார்.[5]
2.^ கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது, பேரரசியார் இல்லாமல் ஆட்சி செய்தார். ஏனெனில் அவரின் மனைவி சுல்தானா நூர் டயானா பெட்ரா 2022 வரை கிளாந்தானின் சுல்தானாவாக அறிவிக்கப்படவில்லை. சனவரி 2019-இல் சுல்தான் ஐந்தாம் முகமது பதவி விலகுவதற்கு சற்று முன்பு, அவர் ஒசானா ஓவோடினா என்பரை மணந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் திருமணம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்படவில்லை; மற்றும் ஓவோடினா அவரின் மனைவியாக அங்கீகரிக்கப்படவில்லை.[6][7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலேசிய_அரசி&oldid=3905203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்