மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்

போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வழங்குகிறது.

மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள் (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia) வழங்குகிறது.

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக சே.பி.சே. (JPJ) என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை இணையத்தளம் மூலம் சரிபார்க்கலாம். [1] அதன் இணைய முகவரி: https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini

தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;

பதிவெண்களின் வகைதளவமைப்பு
தனியார் மற்றும் வணிக வாகனங்கள்ABC 4567 அல்லது WD 4567 C அல்லது QAA 4567 C அல்லது SAB 4567 C அல்லது KV 4567 B
வாடகை மோட்டார் (Taxi)HAB 4567
இராணுவம் (Military)ZA 4567
தற்காலிகம் (Temporary)A 2341 A (W/TP 2341 for Kuala Lumpur)
தூதரகங்கள் (Diplomatic Corps)12-34-DC
அரச குடும்பங்கள்; அரசாங்கம் (Royals and government)முழுப் பெயர் (Full title)

வடிவமைப்பு

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்துப் பதிவெண்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் 1932-ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. ஆங்கில எழுத்துருவான தடித்த ஏரியல் (Arial Bold) பயன்படுத்தப் படுகிறது.[2] மலாயா சுதந்திரம் அடைந்த பிற்கு பல முறை பற்பல மாற்றங்களை அடைந்து உள்ளது.

Sxx ## ## வழிமுறை

ALU 1128

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லங்காவி போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்; பொது வாடகைக் கார்கள் எனும் டாக்சிகள்; தூதரகங்களின் வாகனங்கள்; ஆகியவை மலேசியச் சாலைப் போக்குவரத்து பதிவெண்கள் நடைமுறையில் இருந்து மாறுபட்டு உள்ளன.

அவற்றைத் தவிர்த்து மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து வாகனங்களும் Sxx ## ## எனும் வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.

தீபகற்ப மலேசியா

ALU 1128
தீபகற்ப மலேசியா பதிவெண்கள்
முன்னொட்டுமாநிலம்முன்னொட்டுமாநிலம்
Aபேராக்Mமலாக்கா
Bசிலாங்கூர்Nநெகிரி செம்பிலான்
Cபகாங்Pபினாங்கு
Dகிளாந்தான்Rபெருலிசு
Fபுத்திரா செயாTதிரங்கானு
Jசொகூர்Vபுத்திரா செயா
KகெடாWகோலாலம்பூர்
(முதல் அறிமுகம்)

சரவாக்

சரவாக் போக்குவரத்துப் பதிவெண்கள்
முன்னொட்டுகோட்டம்முன்னொட்டுகோட்டம்முன்னொட்டுகோட்டம்
QK, QAகூச்சிங்QLலிம்பாங்QRசரிக்கே
QBசிரீ ஆமான் & பெத்தோங்QMமிரிQSசிபு & முக்கா
QCசாமாராகான் & செரியான்QPகப்பிட்QTபிந்துலு

சபா

தற்சமயம் பயன்படுத்தப்படும் பதிவெண்கள்

SK 3268 C
SU64N
SMB 9511
SYE 1224


ஒரு வாகனத்தின் மாதிரி பதிவெண்கள் பட்டை

சபா போக்குவரத்துப் பதிவெண்கள்
முன்னொட்டுகோட்டம்முன்னொட்டுகோட்டம்முன்னொட்டுகோட்டம்
SA, SYமேற்குக் கரை கோட்டம்SGசபா அரசாங்கம்SS, SMசண்டாக்கான்
SBபீபோர்ட்SKகூடாட்ST, SWதாவாவ்
SDலகாட் டத்துSLலபுவான்SUகெனிங்காவ்

வாடகைக் கார்கள்

வாடகைக் கார்கள் பதிவெண்கள் (1980-க்குப் பின்னர்)
முன்னொட்டுமாநிலம்முன்னொட்டுமாநிலம்
HAபேராக்HMமலாக்கா
HBசிலாங்கூர்HNநெகிரி செம்பிலான்
HCபகாங்HPபினாங்கு
HDகிளாந்தான்HQசரவாக்
HEசபாHRபெர்லிஸ்
HJஜொகூர்HSசபா
HKகெடாHTதிரங்கானு
HLலபுவான்HWகோலாலம்பூர்

மலேசியாவில் உள்ள தூதரகங்களுக்கான வாகனப் பதிவெண்கள்

மலேசியாவில் உள்ள தூதரகங்களுக்கான வாகனப் பதிவெண்கள்
எண்நாடுஎண்நாடுஎண்நாடு
10  இலங்கை50  செக் குடியரசு90  லக்சம்பர்க்
11  தாய்லாந்து51  துருக்கி91  கென்யா
12  சுவிட்சர்லாந்து52  சிலவாக்கியா92  கினியா
13-53  பின்லாந்து93  கசக்கஸ்தான்
14  லிபியா54  குவைத்94  கானா
15  ஆத்திரேலியா55  பிரேசில்95  கிர்கிசுத்தான்
16  ஐக்கிய அமெரிக்கா56  கிழக்குத் திமோர்96  யோர்தான்
17  பாக்கித்தான்57  ஈரான்97  கியூபா
18  செருமனி58  பகுரைன்98  செனிகல்
19  வங்காளதேசம்59  ஓமான்99  யேமன்
20  இத்தாலி60  நோர்வே100  ஐரோப்பிய ஒன்றியம்
21  சிரியா61  பலத்தீன்101  நேபாளம்
22  கனடா62  அர்கெந்தீனா102  பப்புவா நியூ கினி
23  நெதர்லாந்து63  உக்ரைன்103  லெபனான்
24  உருசியா64  எசுப்பானியா104  கத்தார்
25  பெல்ஜியம்65  பிஜி105  மாலைத்தீவுகள்
26  பிலிப்பீன்சு66  மொரோக்கோ
27  உருமேனியா67  மொரிசியசு107  அசர்பைஜான்
28  வட கொரியா68  சிலி
29  இந்தோனேசியா69  சூடான்109  சாம்பியா
30  போலந்து70  நைஜீரியா110  வத்திக்கான் நகர்
31  சுவாசிலாந்து71  மெக்சிக்கோ111  சோமாலியா
32  எகிப்து72  லாவோஸ்
33  சுவீடன்73  வெனிசுவேலா
34  கம்போடியா74  சிம்பாப்வே114  சியார்சியா
35  நியூசிலாந்து75  அங்கேரி115  கம்பியா
36  தென் கொரியா76  பெரு
37  ஆஸ்திரியா77  அல்ஜீரியா117  தஜிகிஸ்தான்
38  ஐக்கிய இராச்சியம்78  அல்பேனியா
39  சிங்கப்பூர்79  தென்னாப்பிரிக்கா
40  இந்தியா80  பொசுனியா எர்செகோவினா
41  மியான்மர்81  எக்குவடோர்
42  வியட்நாம்82  உருகுவை
43  டென்மார்க்83  அயர்லாந்து
44  ஈராக்84  கொலம்பியா
45  சீசெல்சு85  ஐக்கிய அரபு அமீரகம்
46  சப்பான்86  குரோவாசியா
47  பிரான்சு87  ஆப்கானித்தான்
48  சவூதி அரேபியா88  நமீபியா
49  சீனா89  உஸ்பெகிஸ்தான்

மலேசிய இராணுவம்

ZC 5010

மலேசியாவில் உள்ள அனைத்து இராணுவ வாகனங்களுக்கும் Z எனும் முன்னொட்டு பயன்படுத்தப் படுகிறது.[3][4][5]

ZB #### கருப்பு பட்டையில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்ட வடிவம். முன்னணிச் சுழியங்கள் எதுவும் இல்லை. அதாவது சுழியங்களைக் கொண்டு பதிவெண்கள் தொடங்குவது இல்லை. I மற்றும் O எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.

  • Z - அனைத்து மலேசிய ஆயுதப்படை வாகனங்களுக்கான நிலையான முன்னொட்டு.
  • B - கிளை முன்னொட்டு. (எ.கா.: D = மலேசிய இராணுவம்; U = அரச மலேசிய விமானப்படை
  • # - எண் வரிசை. (எ.கா.: 1, 2, 3 ... 9998, 9999)
மலேசிய இராணுவ வாகனப் பதிவெண்கள்
முன்னொட்டுபிரிவு
Z, ZA, ZDமலேசிய இராணுவம்; ZL, ZU, ZZ தொடர்களை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு அனைத்து இராணுவ வாகனங்களும் ஒரே வடிவத்தைப் பகிர்ந்து கொண்டன.
ZLஅரச மலேசிய கடல்படை; L என்றால் "Laut" ("கடல்")
ZUஅரச மலேசிய விமானப்படை; U என்றால் "Udara" ("வான்")
ZZமலேசியத் தற்காப்பு அமைச்சு (MINDEF)
T/Zஇராணுவப் பின்தொடர் வாகனம்

மலேசிய அரச வாகனங்கள்

மலேசியாவின் சுல்தான்கள், மாநிலங்களின் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனித்துவமான பதிவுத் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

TMJ
SJ
YTM TUNGKU TEMENGGONG KEDAH (AHLI JEMAAH PEMANGKU SULTAN KEDAH DARUL AMAN)

இந்த அதிகாரப்பூர்வமான எண் தட்டுகள் பெரும்பாலானவை, மஞ்சள் பின்னணியைக் கொண்டவை. மேலும் வாகன உரிமையாளர்களின் அதிகாரப்பூர்வமான அரசப் பெயர் அல்லது சின்னங்களை அந்தத் தட்டுகள் தாங்கி நிற்கின்றன.[6]

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்