மலர் மருத்துவம்

எஸ்மலர் மருத்துவம் (Bach flower remedies) என்பது ஹோமியோபதி மருத்துவத்துக்கு சகோதர மருத்துவமாகத் திகழ்கிறது. மலர் மருந்துகளைக் கண்டுபிடித்தவர் ஹோமியோபதியிலும், ஆங்கில மருத்துவத்திலும் புகழ்பெற்ற மருத்துவர் எட்வர்டு பாட்ச் என்பவர். எந்த நோய்க்கும் மனமே மூலகாரணமாகும். நோய்க்கான ஆரம்ப இடம் மனம் என்பதை அறிந்து கொண்டார். மனதை சரிப்படுத்தினால், உடல் குணமடையும் என்பதைத் தெரிந்து கொண்டதால் 1930-ல் காடுகளுக்குச் சென்று அங்குள்ள மலர்களையும், இலைகளையும் உண்டு சோதித்துப் பார்த்தார்.

மலர் மருத்துவ மருந்துகளைப் பார்வையிடும் பெண்

மனதில் ஏற்படும் நம்பிக்கையே மருந்து பயமே நோய் என்பது உண்மை


பல மலர்களைப் பலருக்கும் கொடுத்து சோதித்துப் பார்த்தார். மனதை ஒழுங்குபடுத்தக்கூடிய 38 மலர்களைச் சேகரித்து 38 மருந்துகளை தயாரித்தார். மலர் மருத்துவப் பயன்பாட்டினைப் பரப்பினார்.[1] பாட்சின் மலர் மருத்துவத்தின் மருந்தியக்கச் சோதனைகளின் முறையான மதிப்பீடுகள் வாயிலாக மருந்துப்போலி விளைவைத் தருவதைத் தவிர இம்மருத்துவத்தில் பலனில்லை என்று விமர்சனத்துக்குள்ளானது.[2][3]50 : 50 விகிதத்தில் நீரும் சாராயத்தின் கலவையாக மலர் மருத்துவத்தின் மூல நீர்மமருந்து உள்ளது என்றும்,[4] கடைகளில் விற்பனை செய்யப்படுவன இந்த மூல மருந்தினைப் பெரும்பாலும் சாராயம் கொண்டு நீர்க்கச் செய்யப்பட்டவையாய் உள்ளதால் மருந்தில் சேர்க்கப்பட்ட தாவரத்தின் வாசனைகூட மருந்தில் நுகர்ந்தறியப்பட முடியாததாக இருப்பதாகவும் கூற்றுக்கள் வெளியாயின.[5]

மேற்கோள்கள்

தொடர்புடைய நூல்கள்

  1. மலர் மருந்துகள், Dr. Martial Mariapragassam,Homoeo Research & Educational Institute, Pondicherry,(1985) Page: 1-16
  2. ஹோமியோபதி எல்லோருக்கும் ஏற்றது, டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், Minimax, Chennai, (2009), Page: 75-79
  3. மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவ!ம், மரு கு. பூங்காவனம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, (2009) பக்கம்: 185-194

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலர்_மருத்துவம்&oldid=3932674" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்