மதிப்பீடு செய்யப்படாத இனம்

மதிப்பீடு செய்யப்படாத இனம் (Not evaluated-NE) என்பது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க சிவப்பு பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்ட காப்பு நிலைகளில் ஒன்றாகும். இந்த பட்டியலில் வரும் உயிரினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.[1][2]

பூகோள அழிவின் அபாயத்தைக் குறிக்க உயிரினங்களுக்கான பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அச்சுறுத்தல் ஒன்பது மதிப்பீட்டு வகைகளில் இந்த காப்பு நிலை ஒன்றாகும். இந்த அளவீட்டின் ஒரு முனையில் 'அழிந்துபோன' (EX) இனங்களும் மறு முனையில் 'கவலை குறைந்த' (LC) பிரிவும் உள்ளன. 'தரவு குறைபாடு' மற்றும் 'மதிப்பீடு செய்யப்படாத' (NE) வகைகள் இந்த பிரிவுகளில் இல்லை. ஏனென்றால் இற்றை ஒரு வகைக்குள் ஒதுக்குவதற்கு போதுமான மதிப்பாய்வு செய்யப்படாத உயிரினங்களைக் குறிக்கின்றன.[3]

'மதிப்பீடு செய்யப்படாத' என்ற சிற்றினம் அழிந்துபோகும் அபாயத்தில் இல்லை என்பதைக் குறிக்கவில்லை, ஆனால் எத்தகைய நிலையில்/ஆபத்தில் உள்ளது என்பதை அளவீடு செய்து வெளியிடப்படவில்லை என்பதாகும். செம்பட்டியலில் 'மதிப்பீடு செய்யப்படாத” என வகைப்படுத்தப்பட்ட இனங்கள் ... அச்சுறுத்தப்படாதவை என்று கருதப்படக்கூடாது என்று அறிவுறுத்துகின்றன. இது பொருத்தமானதாக இருக்கலாம். . . அச்சுறுத்தப்பட்ட இனம் போன்ற அதே அளவிலான கவனத்தை இத்தகைய இனத்திற்கும் வழங்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த இன நிலையின் மதிப்பீடு முடியும் வரை".[3]:7[4]:76

2021ஆம் ஆண்டளவில், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் உலகளவில் 1,34,425க்கும் மேற்பட்ட உயிரினங்களின் காப்பு நிலைகளை மதிப்பீடு செய்து ஒதுக்கியது. இவற்றிலிருந்து இது ஒரு பாதுகாப்பு மட்டத்தில் அல்லது இன்னொரு இடத்தில் உலகளவில் அச்சுறுத்தப்பட்டதாக சுமார் 37,480 இனங்களை வகைப்படுத்தியுள்ளது. இருப்பினும், பூமியில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை 3 மில்லியனிலிருந்து 30 மில்லியன் வரை உள்ளது.[5] இதிலிருந்து தெரியவருவது 'மதிப்பீடு செய்யப்படாத” உயிரிகளின் எண்ணிக்கை, ஒன்பது அழிந்து வரும் ஆபத்து வகைகளை விட அதிக எண்ணிக்கையுடையது.[6]

பிற பயன்பாடுகள்

உலகளாவிய பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்க மதிப்பீடு மற்றும் வகைப்படுத்தல் செயல்முறைகள் நாடுகள் அளவிலும், சில சமயங்களில் பிராந்திய மட்டங்களிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கும் அந்த பகுதிகளுக்கான தனிப்பட்ட செம்பட்டியலை நிறுவுவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.[7][8] [9][10][11][12]

மதிப்பீட்டு அளவுகோல்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்களை வகைப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பும் மதிப்பீட்டுச் செயல்முறையின் தொடக்கத்திற்கு முன்னர் ஐ.யூ.சி.என் பிரிவில் ' மதிப்பீடு செய்யப்படவில்லை' பிரிவில் வருகின்றது.[13]

மேலும் காண்க

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்