மண்முனைப் பாலம்

மண்முனைப் பாலம் (Manmunai Bridge) என்பது, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது மட்டக்களப்பு வாவியின் படுவான் கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் வகையில் அந்த வாவிக்குக் (கடல் நீரேரி அல்லது கடற்காயலுக்குக்) குறுக்காக அமைந்துள்ளது. இந்தப் பாலமே மட்டக்களப்பின் கரையோரத்தைத் தலைநிலத்துடன் இணைத்த முதல்[மேற்கோள் தேவை] பாலமாகும். மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான் கரையில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளுக்குச் செல்வதற்கான 30 கிலோமீட்டர் தூரத்தைக் குறைப்பதற்கான ஒரு மாற்று வழியாக இது விளங்குகிறது. இந்தப் பாலத்தினூடாகக் கொக்கட்டிச்சோலைப்பகுதி மக்கள் இலகுவாகவும், மிக விரைவாகவும் மட்டக்களப்பு நகரத்துக்கு சென்றுவர வசதியேற்பட்டுள்ளது. முன்னர் சிறிய படகுகள் மூலம் கடல் நீரேரி ஊடாகவே போக்குவரத்து இடம்பெற்றது.[2]

மண்முனைப் பாலம்
போக்குவரத்துமோட்டார் வண்டிகள்
தாண்டுவதுமட்டக்களப்பு வாவி
இடம்மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம்
பராமரிப்புவீதி அபிவிருத்தி அதிகாரசபை
கட்டுமானப் பொருள்காங்கிறீற்று
மொத்த நீளம்210 m (689 அடி)[1]
அகலம்9.8 m (32 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி2012
கட்டுமானம் முடிந்த தேதி2014
அமைவு7°38′16.84″N 81°43′47.79″E / 7.6380111°N 81.7299417°E / 7.6380111; 81.7299417
மண்முனைப் பாலம் is located in இலங்கை
மண்முனைப் பாலம்
இலங்கையில் அமைவிடம்

இலங்கைக்கும் சப்பானுக்கும் இடையிலான இராசதந்திர உறவின் 60 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், சப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை (Japan International Cooperation Agency) இலங்கை அரசுக்கு வழங்கிய 1.206 மில்லியன் யென்களைப் பயன்படுத்தி இந்தப் பாலமும் தரைப்பாலமும் கட்டப்பட்டன.[3][4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மண்முனைப்_பாலம்&oldid=3566244" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்