மணிப்பூர் புதர் காடை

மணிப்பூர் புதர் காடை
Manipur bush quail
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கல்லிபார்ம்சு
குடும்பம்:
பெசினிடே
பேரினம்:
பெர்டிகுலா
இனம்:
பெ. மாணிப்பூரென்சிசு
இருசொற் பெயரீடு
பெர்டிகுலா மாணிப்பூரென்சிசு
ஹூயும், 1888

மணிப்பூர் புதர் காடை (பெர்டிகுலா மாணிப்பூரென்சிசு) என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷில் காணப்படும் காடை வகைகளுள் ஒன்றாகும். இது ஈரமான புல்வெளி பகுதிகளில் உயரமான புற்களுக்கு இடையே வாழ்கிறது.[2] 1881ஆம் ஆண்டில் மணிப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட பறவை இயல் வல்லுநர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்பவர் இதனைச் சேகரித்து முதன் முதலில் விவரித்தார்.

பெர்டிகுலா மாணிப்பூரென்சிசு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிவிட்ட இனம் எனச் சிற்றினப்பட்டியலில் இடப்பட்டுள்ளது.[1] இதனுடைய சிறிய வாழிடப்பகுதி துண்டாக்கப்படுவதுடன், ஆக்கிரமிக்கப்படுவதால் குறைந்து வருகின்றது.

1932 முதல் ஜீன் 2006 வரை இப்பறவையினை அன்வர்தீன் சவுத்ரி என்பவர் அசாமில் காணும் வரை எவரும் பார்த்ததாகத் தகவல்கள் இல்லை.[3][4]

இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் பாதுகாப்பு இயக்குநர் ராகுல் கவுல் மேற்கோள் காட்டி பிபிசி செய்தி, “இந்த உயிரினம் கிட்டத்தட்ட அழிவிலிருந்து மீண்டதாகத் தெரிவிக்கின்றது"[3]

வரலாறு

1899அம் ஆண்டில் பிராங் பின், கேப்டன் வூட்டின் கள ஆய்வுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இனங்கள் கடந்த காலங்களில் பொதுவானவை என்று குறிப்பிட்டார்.[5] மணிப்பூர் வனப்பகுதியில் காட்டு தீ விபத்துக்களில் பொதுவாகப் பாதிக்கப்படுவதால் உள்ளூர் மொழியில் லான்ஸ்-சோய்போல் அதாவது "பொறி காடை" என்று பொருள்படும் வகையில் குறிப்பிடுகின்றனர்.[6]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்