பைரோபாசுபாரிக் காடி

பைரோபாசுபாரிக் காடி (Pyrophosphoric acid) H4P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இருபாசுபாரிக் காடி, பைரோபாசுபாரிக் அமிலம், இருபாசுபாரிக் அமிலம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். [(HO)2P(O)]2O. என்று விரிவாகவும் இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டை விளக்கியும் எழுதலாம். பைரோபாசுபாரிக் காடி மணமற்றதாகவும் நிறமற்றதாகவும் காணப்படுகிறது. தண்ணீர், டை எத்தில் ஈதர் மற்றும் எத்தில் ஆல்ககால் போன்ற கரைப்பான்களில் கரைகிறது.

பைரோபாசுபாரிக் காடி
Chemical structure of pyrophosphoric acid
3D model of pyrophosphoric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
இருபாசுபாரிக் காடி
μ-ஆக்சிடோ-பிசு(ஈரைதராக்சிடோ ஆக்சிடோபாசுபரசு)
வேறு பெயர்கள்
இருபாசுபாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
2466-09-3 Y
ChEBICHEBI:29888 Y
ChEMBLChEMBL1160571 Y
ChemSpider996 Y
InChI
  • InChI=1S/H4O7P2/c1-8(2,3)7-9(4,5)6/h(H2,1,2,3)(H2,4,5,6) Y
    Key: XPPKVPWEQAFLFU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H4O7P2/c1-8(2,3)7-9(4,5)6/h(H2,1,2,3)(H2,4,5,6)
    Key: XPPKVPWEQAFLFU-UHFFFAOYAX
IUPHAR/BPS
3151
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்1023
  • O=P(O)(O)OP(=O)(O)O
UNII4E862E7GRQ Y
பண்புகள்
H4P2O7
வாய்ப்பாட்டு எடை177.97 கி/மோல்
உருகுநிலை 71.5 °C (160.7 °F; 344.6 K)
நன்றாக கரையும்
கரைதிறன்ஆல்ககால், ஈதர் போன்றவற்றில் நன்றாகக் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நீரற்ற நிலை பைரோபாசுபாரிக் அமிலம் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் படிகமாகிறது. இவை முறையே 54.3 மற்றும் 71.5 °செல்சியசு வெப்பநிலையில் உருகுகின்றன. பைரோபாசுபாரிக் காடி பாசுபாரிக் அமிலத்தை தயாரிக்க உதவும் முக்கிய ஆதாரமான பாலிபாசுபாரிக் அமிலத்தின் ஒரு அங்கமாகும்.[1] பைரோபாசுபாரிக் காடியின் எதிர்மின் அயனிகள், உப்புகள், எசுத்தர்கள் போன்றவற்றை பைரோபாசுபேட்டுகள் என்று அழைப்பர்.

தயாரிப்பு

பாசுபாரிக் அமிலத்துடன் பாசுபோரைல் குளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் பைரோபாசுபாரிக் காடி உருவாகிறது.:[2]

5 H3PO4 + POCl33 H4P2O7 + 3 HCl

சோடியம் பைரோபாசுபேட்டிலிருந்து அயனிப் பரிமாற்ற வினை அல்லது காரீய பைரோபாசுபேட்டுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து சூடுபடுத்தியும் பைரோபாசுபாரிக் காடியை உருவாக்க இயலும்.[1]

வினைகள்

உருகும்போது, பைரோபாசுபாரிக் அமிலம் விரைவாக பாசுபாரிக் அமிலம், பைரோபாசுபாரிக் அமிலம் மற்றும் பாலிபாசுபாரிக் அமிலங்களின் சமநிலை கலவையாக மாறுகிறது. பைரோபாசுபாரிக் அமிலத்தின் எடையின் சதவீதம் சுமார் 40% ஆகும். உருகிய நிலைஅயிலிருந்து இதை மறுபடிகமாக்குவது கடினம்குளிர்ந்த நீரில் கரையக்கூடியது என்றாலும், அனைத்து பாலிபாசுபாரிக் அமிலங்களைப் போலவே பைரோபாசுபாரிக் அமிலமும் நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[3]

H4P2O7 + H2O 2H3PO4

பைரோபாசுபாரிக் அமிலம் ஒரு நடுத்தர வலுவான கனிம அமிலம் ஆகும்.

பாதுகாப்பு

பைரோபாசுபாரிக் அமிலம் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும், இது நச்சுத்தன்மை வாய்ந்ததாக தெரியவில்லை.[4]

வரலாறு

பைரோபாசுபாரிக் அமிலம் என்ற பெயர் 1827 ஆம் ஆண்டில் "கிளாசுகோவின் கிளார்க்" என்பவரால் வழங்கப்பட்டது. சோடியம் பாசுபேட்டு உப்பை செம்பழுப்பு வெப்பநிலைக்கு சூடாக்குவதைத் தொடர்ந்து கண்டுபிடிப்புக்கு பெருமை சேர்த்தார். பாசுபாரிக் அமிலத்தை செம்பழுப்பு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது பைரோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது. இது சூடான நீரில் கரைக்கப்பட்டு பாசுபாரிக் அமிலமாக மாற்றப்பட்டது.[5]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்