பேரியம் கார்பனேட்டு

வேதிச் சேர்மம்

பேரியம் கார்பனேட்டு (BaCO3), விதெரைட்டு என்று அழைக்கப்படும் ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இச்சேர்மம் எலிகளைக் கொல்லப் பயன்படும் பொருள்களிலும், செங்கல்களிலும் சுட்டாங்கல் மினுமினுப்புகளிலும், சீமைக்காரைகளிலும் பயன்படுகிறது.

பேரியம் கார்பனேட்டு
Skeletal formula of barium carbonate
Powder of barium carbonate
பெயர்கள்
வேறு பெயர்கள்
விதரைட்டு
இனங்காட்டிகள்
513-77-9 Y
ChemSpider10121 Y
EC number208-167-3
InChI
  • InChI=1S/CH2O3.Ba/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2 Y
    Key: AYJRCSIUFZENHW-UHFFFAOYSA-L Y
  • InChI=1/CH2O3.Ba/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2
    Key: AYJRCSIUFZENHW-NUQVWONBAT
யேமல் -3D படிமங்கள்Image
Image
பப்கெம்10563
வே.ந.வி.ப எண்CQ8600000
  • [Ba+2].[O-]C([O-])=O
  • C(=O)([O-])[O-].[Ba+2]
UNII6P669D8HQ8 Y
UN number1564
பண்புகள்
BaCO3
வாய்ப்பாட்டு எடை197.34 கி/மோல்
தோற்றம்வெண்ணிறப் படிகங்கள்
மணம்மணமற்றது.
அடர்த்தி4.286 கி/செமீ3
உருகுநிலை 811 °C (1,492 °F; 1,084 K)
பலஉருவத் தோற்ற மாற்றம்
கொதிநிலை 1,450 °C (2,640 °F; 1,720 K)
1360 °செல்சியசில் இருந்து சிதைவுறுகிறது[1]
16 மிகி/லி (8.8°செல்சியசு)
22 மிகி/லி (18 °செல்சியசு)
24 மிகி/லி (20 °செல்சியசு)
24 மிகி/லி (24.2 °செல்சியசு)[1]
கரைதிறன் பெருக்கம் (Ksp)
2.58·10−9
கரைதிறன்அமிலத்தில் சிதைகிறது
மெத்தனாலில் கரைவதில்லை.
-58.9·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.676
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-1219 கிலோஜூல்/மோல்[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
112 ஜூல்/மோல்·கெல்வின்[2]
வெப்பக் கொண்மை, C85.35 ஜூல்/மோல்·கெல்வின்[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 0777
GHS pictogramsThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
GHS signal wordஎச்சரிக்கை
H302[3]
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
418 மிகி/கிகி, வாய்வழி (எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்மக்னீசியம் கார்பனேட்டு
கால்சியம் கார்பனேட்டு
இசுட்ரோன்சியம் கார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

விதரைட்டு

விதரைட்டு ஒற்றைச்சாய்வு படிகங்களாக படிகமாகிறது. படிகங்கள் மூன்று மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்த இரட்டைகளாக இணைந்து குவார்ட்சின் இரட்டைப் பிரமிடுகள் வடிவத்தையொத்த போலி அறுமுகி வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இதன் முகங்கள் வழக்கமாக சொரசொரப்பாகவும், கிடைமட்டமாக சால்வரி வாய்ந்ததாகவும் உள்ளது.[5] இச்சேர்மம் 1084 கெல்வின் வெப்பநிலையில் அறுங்கோண நிலைக்கு மாறியும் பின்னர் 1254 கெல்வின் வெப்பநிலையில் கனசதுர நிலைக்கும் மாறுகிறது.

விதரைட்டு

1784 ஆம் ஆண்டில் பேரைட்டுகளிலிருந்து வேதியியல்ரீதியாக வேறுபட்ட இந்தக் கனிமத்தை முதன் முதலில் அறிந்த வில்லியம் விதெரிங் என்பவரின் பெயரில் இக்கனிமம் அழைக்கப்படுகிறது.[6] இக்கனிமம் நார்தம்பெர்லாந்தில் உள்ள எக்சாமில் ஈயத்தின் கனிமூலத்தில் காணப்பட்டது. இதே போன்று கும்ப்ரியாவில் உள்ள ஆல்ஸ்டனிலும், லாங்காசைரில் சோர்லிக்கு அருகில் உள்ள ஆங்லேசார்கேவிலும் இன்னும் சில இடங்களிலும் காணப்பட்டது. விதர்லைட்டானது கால்சியம் சல்பேட்டினைக் கொண்ட நீர்க்கரைசலுடன் வினைப்படும் போது எளிதாக பேரியம் சல்பேட்டாக மாற்றப்படுகிறது. ஆக இந்தக் கனிமத்தின் படிகங்கள் அடிக்கடி பேரைட்டுகளுடன் கெட்டிப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. இது பேரியம் உப்புகளின் முதன்மையான மூலம் ஆகும். இக்கனிமம் நார்தம்பெர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இச்சேர்மம் எலிகளுக்கான நச்சுகளிலும், கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகியவற்றின் தயாரிப்பிலும், முன்னதாக சீனி சுத்திகரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது.[5]

தயாரிப்பு

பேரியம் கார்பனேட்டானது வணிகரீதியாக 60 முதல் 70 °செல்சியசில் பேரியம் சல்பைடை சோடியம் கார்பனேட்டு உடனான வினையைக் கொண்ட சோடா சாம்பல் முறையிலோ அல்லது பேரியம் சல்பைடில் கார்பனீராக்சைடை 40 - 90 °செல்சியசில் செலுத்துவதன் மூலமோ தயாரிக்கப்படுகிறது,

சோடா சாம்பல் முறையில், திட நிலையில் உள்ள அல்லது கரைக்கப்பட்ட சோடியம் கார்பனேட்டானது பேரியம் சல்பைடு கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. பேரியம் கார்பனேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைத்த பேரியம் கார்பனேட்டானது கழுவப்பட்டு உலர்த்தப்படுகிறது.[7]

வேதி வினைகள்

பேரியம் கார்பனேட்டானது ஐதரோகுளோரிக் காடி போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து பேரியம் குளோரைடு போன்ற கரையக்கூடிய பேரியம் உப்புக்களை உருவாக்குகின்றன:

BaCO
3
(s) + 2 HCl(aq)BaCl
2
(aq) + CO
2
(g) + H
2
O
(l)

இருப்பினும் சல்பூரிக் அமிலத்துடனான பேரியம் சல்பேட்டின் வினையானது இந்த உப்பின் மிகக்குறைவான கரையும் தன்மையின் காரணமாக மிகவும் மோசமானதாக உள்ளது.

பேரியம் கார்பனேட்டு நீர் மற்றும் கார்பனீராக்சைடுடன் வினைபுரிந்து பேரியம் பைகார்பனேட்டு கரைசலைத் தருகிறது.

BaCO
3
(s) + 2 H2O + CO
2
(g) → Ba(HCO3)2

பேரியம் கார்பனேட்டு ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து பேரியம் சல்பைடு, கார்பனீராக்சைடு மற்றும் நீர் ஆகியவற்றைத் தருகிறது.

BaCO
3
(s) + H2S → BaS + CO
2
(g) + H
2
O
(l)

பேரியம் கார்பனேட்டை 1000° செல்சியசு முதல் 1450° செல்சியசு வரையிலான வெப்பநிலைக்கு சூடேற்றுபம் போது சிதைவடைந்து பேரியம் ஆக்சைடாகவும், கார்பனீராக்சைடாகவும் மாறுகிறது.

BaCO
3
(s) → BaO + CO
2
(g)

பயன்கள்

பேரியம் கார்பனேட்டானது பீங்கான் தொழிற்துறையில் பளபளப்பான விளிம்புகளை உருவாக்குவதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் ஒரு இளக்கியாகவும், படிகமாக்கும் காரணியாகவும் பயன்படுகிறது. மேலும், இச்சேர்மம் சில நிறமூட்டும் ஆக்சைடுகளுடன் இணைந்து, வேறு வழிமுறைகளில் எளிதில் தயாரிக்க இயலாத தனித்தன்மை மிக்க நிறங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.

செங்கல், ஓடு, மண்பாண்டத் தொழிற்துறையில் பேரியம் கார்பனேட்டானது களிமண்ணுடன் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக (கால்சியம் சல்பேட்டு மற்றும் மக்னீசியம் சல்பேட்டு) போன்ற கரையக்கூடிய மற்றும் துாள்பூத்தலை விளைவிக்கக்கூடிய உப்புக்கள் வீழ்படிவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்