பேக்கர் தீவு

பேக்கர் தீவு(Baker Island) (ஒலிப்பு: /ˈbeɪkər/) ஒரு வாழ்வோர் இல்லாத நிலநடுக்கோட்டிற்கு சற்றே வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைத் திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 3,100 கி.மீ(1,700 மைல்கள்) தொலைவில் உள்ளது. ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்தத் தீவு அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே 68 கிலோமீட்டர்கள் (37 nmi) தொலைவில் உள்ள ஹவுலாந்து தீவு ஆகும். இதன் பரப்பளவு 1.64 சதுர கிலோமீட்டர்கள் (410 ஏக்கர்கள்); கடற்கரை நீளம் 4.9 கிலோமீட்டர்கள் (3.0 mi). வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும் நிறைந்த காற்றும் கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.

Baker Island
Baker Island
பேக்கர் தீவு வானிலிருந்து

தாவர மற்றும் பிற வாழ்வினங்கள்

இந்தத் தீவு பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.குடிநீரில்லாத பேக்கர் தீவில் மரங்கள் வளருவதில்லை. நான்கு வகை புற்கள்,கொடிகள், புதர்கள் அங்குமிங்கும் வளர்வதைக் காணலாம்.[1] கடற்பறவைகள், கடற்கரைப் பறவைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு புணர்ச்சிகால, பேறுகால உய்விடமாக உள்ளது.

இத்தீவு பல அருகிவரும், அழிந்துவரும் இனங்களுக்குப் புகலிடமாக உள்ளது. கடற்கரைப் பறவைகள் தவிர பச்சை ஆமைகள் போன்ற ஆமையினங்களின் புகலிடமாகவும் உள்ளது.[2]

படிமத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேக்கர்_தீவு&oldid=3408834" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்